சென்னை: நடந்து முடிந்த சட்டசபை இடைத்தேர்தலில் தபால் வாக்குகளில் தவெக மூன்றாவது இடத்திற்கு சென்றது ஏன் என்பது குறித்து மதுராந்தகம் தொகுதி எம்எல்ஏ மரகதம் குமரவேல் விளக்கம் அளித்துள்ளார்.
மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் மரகதம் குமரவேலுக்கும் தாராபுரம் சத்தியபாமாவுக்கும் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இதன் பிறகு இரு எம்எல்ஏக்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது மரகதம் கூறியிருப்பதாவது: முதல்வர் விஜய்க்கு கோடானு கோடி நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அது போல் மதுராந்தகம் தொகுதி வாக்காளர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என் மீது எதிர்க்கட்சி வேட்பாளர்கள் பொய்ப் பிரசாரம் செய்தனர். நாங்கள் ராஜினாமா செய்த அந்த 4 மாதக் காலத்தில் எங்களுக்கு எதிராக பல்வேறு பிரச்சினைகளை எழுப்பினார்கள். தனிநபர் தாக்குதல்களை எல்லாம் வைத்தனர். ஆனாலும் மதுராந்தகம் தொகுதி மக்கள் அவற்றையெல்லாம் முறியடித்துவிட்டு எனக்கு வாக்களித்தனர். எத்தனை பொய் பிரச்சாரங்கள் செய்தாலும் அது மக்களிடத்தில் எடுபடவில்லை. திமுகவும், அதிமுகவும் சேர்ந்து ஆட்சி அமைக்க வேண்டும் என்ற கொள்கைக்கு முரணான நிலைப்பாடு எடுத்ததன் காரணமாகத்தான் நாங்கள் அதிமுகவில் இருந்து வெளியேறினோம். எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தது ஏன் என்பது குறித்து நான் தேர்தல் பிரச்சாரத்தின் போது வாக்காளர்களிடம் எடுத்துக் கூறினேன். 20 நாட்கள் பிரச்சாரத்தின் போது பெண் என்றும் பாராமல் எங்களை இழிவுப்படுத்தினார்கள். திமுகவும், அதிமுகவும் சேர்ந்து எங்களை மனஉளைச்சலுக்கு ஆளாக்கினார்கள். விஜய்யின் முகத்தை பார்த்தே மதுராந்தகம் தொகுதி மக்கள் வாக்களித்துவிட்டனர். தொகுதி மக்களின் நம்பிக்கையை காப்பாற்றுவேன். அவர்களின் தேவைகளை நிச்சயம் செய்வேன். தொகுதியின் வளர்ச்சிக்காக பாடுபடுவேன். பல்வேறு அடிப்படை வசதிகளை பெற்றுத் தருவேன். 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெல்வோம் என எதிர்பார்த்தோம். ஆனால் நாங்கள் ஒரு ரூபாய் கூட பணம் கொடுக்காமல் இத்தகைய வெற்றியை பெற்றுள்ளோம். அதிமுக, திமுக கட்சி வேட்பாளர்கள், தொகுதியில் பணம் கொடுத்தனர். புடவை உள்ளிட்ட பரிசு பொருட்களையும் கொடுத்திருந்தனர் என தெரிவித்தார். தபால் வாக்குகளில் தவெகவுக்கு ஏன் மூன்றாவது இடம் கிடைத்தது என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மரகதம் குமரவேல், தபால் வாக்கு செலுத்துவோரையும் எதிர்க்கட்சியினர் பணம் கொடுத்து விலைக்கு வாங்கிவிட்டனர். இவ்வாறு மரகதம் குமரவேல் தெரிவித்தார். மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் மொத்தம் 893 தபால் வாக்குகள் பதிவாகின. அரசு ஊழியர்கள், 85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்டோர் இந்த தபால் வாக்குகளை செலுத்துவர். அரசு ஊழியர்களும் தபால் வாக்குகளை செலுத்துவதால் அவர்களது ஆதரவு யாருக்கு அந்த வகையில் தபால் வாக்குகளில் ஆரம்பத்தில் தவெக முன்னிலையில் இருந்தாலும், அவை முற்றிலும் எண்ணி முடிக்கப்பட்டதும் தவெகவுக்கு அதிர்ச்சி கொடுக்கும் அளவுக்கு கள நிலவரம் மாறிவிட்டது. இந்த தபால் வாக்குகளில் திமுகவுக்கே அதிக வாக்குகள் கிடைத்தன. அதற்கு அடுத்த இடம் அதிமுகவுக்கு, தவெகவுக்கு 3ஆவது இடம் கிடைத்தது. அதாவது அரசு ஊழியர்களின் ஆதரவு தவெக அரசுக்கு இல்லை என்பது தெளிவாக தெரிகிறது. தபால் வாக்கு எண்ணிக்கையில் திமுகவுக்கு 358 வாக்குகளும் , அதிமுகவுக்கு 322, தவெகவுக்கு 136 வாக்குகளும் கிடைத்துள்ளன. தாராபுரத்தில் தபால் வாக்குகளில் தவெகவுக்கு அதிர்ச்சிதான் கிடைத்தது. அங்கும் மூன்றாம் இடம்தான் கிடைத்தது. மதுராந்தகம் சட்டசபை இடைத்தேர்தல் கடந்த 6ஆம் தேதி நடந்தது, கடந்த 9ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடந்து முடிந்தது. இதில் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் 74,048 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் பரந்தாமன் 54,008 வாக்குகளை பெற்றார். அதாவது சுமார் 20,040 வாக்குகள் வித்தியாசத்தில் பரந்தாமன் தோல்வி அடைந்தார். அதிமுக வேட்பாளர் கணிதா சம்பத் 47,450 வாக்குகளையும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜானகிராமன், 2,709 வாக்குகளையும் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் சுகந்தி 1,986 வாக்குகளையும் பெற்றிருந்தனர்.பொய் பிரச்சாரம்
எடுபடாத பிரச்சாரம்
பெண் என்றும் பார்க்கவில்லை
மன உளைச்சல்
ஒரு ரூபாய் கூட காசு கொடுக்கவில்லை
தபால் வாக்குகளில் திமுகவுக்கு முதலிடம்
மதுராந்தகம் தொகுதி
என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.தபால் வாக்குகள்
மதுராந்தகம் இடைத்தேர்தல்