மரகதம் குமரவேலுக்கு அப்போது ரோஷம் வரவில்லையா? - புளூ சட்டை மாறன் சரமாரி கேள்வி

  • சென்னை: "திமுகவை எதிர்த்துத்தான் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அதிமுகவை ஆரம்பித்தார். ஆனால் அப்படிப்பட்ட திமுகவுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க எடப்பாடியார் முயற்சி எடுத்தார். அதனால்தான் அதிமுகவை விட்டு வெளியேறினேன்" என்று மதுராந்தகம் தொகுதி த.வெ.க. வேட்பாளர் மரகதம் குமரவேல் கூறியிருந்தார்.

    Advertisement

    இதற்குப் பதிலடி கொடுத்துள்ள புளூ சட்டை மாறன், "'லேடியா? மோடியா?' என உங்கள் புரட்சித்தலைவி சவால் விட்டார். அந்த பாஜகவுடன் கூட்டணி வைத்துத்தானே எம்.எல்.ஏ. ஆனீர்கள்? அப்போது ரோஷம் வரவில்லையா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

    Advertisement

    செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் மற்றும் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் (அக்டோபர்) 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் த.வெ.க., தி.மு.க., அ.தி.மு.க., நாம் தமிழர், கம்யூனிஸ்ட் கட்சிகள் என 5 கட்சிகள் போட்டியிடுகின்றன.

    இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் அந்தந்தக் கோட்டாட்சியர் (ஆர்.டி.ஓ.) அலுவலகங்களில் கடந்த 9-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 12, 13, 14 ஆகிய தேதிகளில் தொடர் விடுமுறை முடிந்து நேற்று மீண்டும் வேட்புமனு தாக்கல் நடைபெற்றது. இதில் மதுராந்தகம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 14 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதன் மூலம் இதுவரை மொத்தம் 18 பேர் மனு தாக்கல் செய்திருக்கிறார்கள்.

    Advertisement

    தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான மரகதம் குமரவேல், த.வெ.க. பொதுச்செயலாளரும் அமைச்சருமான என்.ஆனந்துடன் சென்று தனது மனுவை நேற்று தாக்கல் செய்தார். தி.மு.க. வேட்பாளர் பரந்தாமன், முன்னாள் அமைச்சர் தா.மோ.அன்பரசன், முன்னாள் எம்.எல்.ஏ. சுந்தர் மற்றும் முக்கிய கட்சி நிர்வாகிகளுடன் வந்து நேற்று மனு தாக்கல் செய்தார். நாம் தமிழர் கட்சி சார்பில் ஜானகிராமன் மனு தாக்கல் செய்தார்.

    மதுராந்தகம் தொகுதியில் கடந்த முறை அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்ற மரகதம் குமரவேல், இந்த முறை த.வெ.க. சார்பில் போட்டியிடுகிறார். அவர் அதிமுகவிலிருந்து விலகி த.வெ.க.வில் இணைந்தது குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளன. இது தொடர்பான விமர்சனங்களுக்குப் பதிலளித்த மரகதம் குமரவேல், "திமுகவை எதிர்த்துத்தான் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அதிமுகவை ஆரம்பித்தார். ஆனால் அப்படிப்பட்ட திமுகவுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க எடப்பாடியார் முயற்சி எடுத்தார். அதனால்தான் அதிமுகவை விட்டு வெளியேறினேன்" என்று கூறியிருந்தார்.

    Advertisement

    இதற்குப் பதிலடி கொடுத்துள்ள திரைப்பட விமர்சகர் புளூ சட்டை மாறன், "'லேடியா? மோடியா?' என உங்கள் புரட்சித்தலைவி சவால் விட்டார். அந்த பாஜகவுடன் கூட்டணி வைத்துத்தானே எம்.எல்.ஏ. ஆனீர்கள்? அப்போது ரோஷம் வரவில்லையா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

    English Summary

    Blue Sattai Maran has questioned whether Maragatham Kumaravel felt no sense of self-respect when she became an MLA as part of the BJP alliance.