நான் ஆவேசப்பட்டது உண்மை தான்.. தமிழ் பேசுவதில் பிரச்சனை இருக்கு! யூடர்ன் போட்ட அமைச்சர் மரிய வில்சன்

  • சென்னை: தமிழ் பேசுவதில் தனக்கு தடங்கல் உள்ளது என்றும், அன்று கொஞ்சம் ஆவேசப்பட்டது உண்மை தான் என்று அமைச்சர் மரிய வில்சன் ஒப்புக் கொண்டுள்ளார். தமிழ் தான் எனக்கும் தாய் மொழி என்று கூறிய மரிய வில்சன், சட்டசபையில் எங்களுக்கு முதல்முறை என்பதால் நிச்சயமாக தவறுகளை திருத்தி கொள்வோம் என்றும் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    சட்டசபையில் நிதியமைச்சர் மரிய வில்சன் பட்ஜெட் தாக்கல் செய்த போது தமிழ் வாசிக்க தடுமாறினார். அப்போதே மரிய வில்சன் மீது சில விமர்சனங்கள் எழுந்தன. இதனிடையே சட்டசபையில் பட்ஜெட் விவாதத்தின் போது திமுக எம்எல்ஏ ராஜேந்திரன், நிதி அமைச்சர் மரிய வில்சன் ஆங்கிலத்தில் புலமை பெற்றவராக இருப்பார் என்று நினைக்கிறேன்.

    Advertisement

    ஆங்கில உச்சரிப்பு நேர்த்தியாக இருந்தது. ஆனால் தமிழில் பல சொற்களை பேசாமல் விட்டுவிட்டார்.. சிலவை இலக்கண பிழையுடன் அமைந்தன. குறையாகவோ குற்றச்சாட்டாகவோ சொல்ல விரும்பவில்லை. பள்ளி கல்வித்துறை அமைச்சர் தனது கட்சிக்காக வாதாடி பலம் சேர்க்கிறார்.
    நிதியமைச்சர் வரும் காலத்தில் பிழையின்றி பட்ஜெட் வாசிக்க முயற்சிகளை செய்ய வேண்டும் என்று பணிவோடு கேட்டுக் கொள்வதாக கூறினார்.

    இதற்கு நிதியமைச்சர் மரிய வில்சன் டென்ஷாகினார். அவர் பேசுகையில், சார் நான் கூடைப்பந்து வீரர்.. அஃபன்ஸ், டிஃபென்ஸ் இரண்டுமே எப்போது எங்கு விளையாட வேண்டும் என்று எனக்கு நல்லா தெரியும்.. நீங்க கத்துனீங்கன்னா நானும் கத்த முடியும். 25 வருடமாக கல்வி துறையில் இருந்திருக்கிறேன். என்னுடைய கம்யூனிகேசன் எல்லாமே ஆங்கிலம்தான்.

    Advertisement

    கொஞ்சம் நாளாகவே உருவ கேலி பண்றது, சாதி ரிலேடடா பண்றது, பெண்கள் ரிலேட்டடா பண்றது.. இப்போ மொழி ரிலேடடா வந்துட்டாங்கா.. எனக்கு ஒரு மொழியை கிறிஸ்டியானிட்டி கற்றுக் கொடுத்திருக்கு.. அதை பாரி பேருக்கு எவ்வளவு தமிழ் படிச்சாலும் தெரியாது.. நான் பைபிள் படிச்சிருக்கேன்.. பார்ன் கிறிஸ்டியன்.. உங்களுக்கு அந்த மொழிதான் வேணும்னா.. நான் உங்களுக்காக மாற்றிக் கொள்ள முடியாது.

    என்னுடைய ஸ்டைல் இதுதான்.. அதனை மாத்திக்க முடியாது.. கேலி பண்றீங்களா என்று ஆவேசமாக பேசினார். சபாநாயகர் இதனை இயல்பாக எடுத்து கொள்ள வேண்டும் என்று கூறிய போதும் கூட, மரிய வில்சன் கேட்கவில்லை. இந்த நிலையில் பட்ஜெட் மீதான பதிலுரை அளித்த அமைச்சர் மரிய வில்சன், அன்றைய பேச்சு குறித்து விளக்கம் கொடுத்துள்ளார்.

    Advertisement

    அதில் மரிய வில்சன் பேசுகையில், பிடிஆர் சாருடன் என்னை ஒப்பிட்டு சில கருத்துக்களை கூறினார்கள்.. நாங்கள் அதுதொடர்பாக ஆலோசனை நடத்தினோம். தமிழ் மொழி பேசுவதில் கொஞ்சம் தடங்கள் உள்ளது.. அன்று நான் கொஞ்சம் ஆவேசப்பட்டது உண்மை தான்.. அதனை மறுக்கவில்லை.. எனக்கும் தாய் மொழி தமிழ்தான்.. வளர்ந்தது திருவாரூர்.. பிறந்தது பாண்டிச்சேரி.. படித்தது சென்னை.. தத்தெடுத்தது ஆர்கே நகர்..

    4 இடங்களையும் சுற்றி சுற்றி வந்துள்ளேன். இதுதான் சட்டசபையில் எங்களுக்கு முதல்முறை.. உங்களிடம் இருந்து கற்றுக் கொள்வோம்.. நிச்சயமாக வரக் கூடிய நாட்களில் தவறுகளை திருத்தி கொள்வோம் என்று தெரிவித்துள்ளார்.

    English Summary

    Maria Wilson: Minister Maria Wilson Admits Hesitation in Tamil Speech, Promises to Correct Mistakes