மரியம் வில்சன் சொன்ன வார்த்தை.. சட்டசபையிலேயே அதிர்ச்சி.. விஜய்யிடம் பறந்த தகவல்.. அடுத்து நடந்தது?

  • சென்னை: தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் மரியம் வில்சன், 2 நாட்களுக்கு முன்பு வெளியிட்ட அதிரடி ஒப்புதல் வாக்குமூலம், மிகப்பெரிய அதிர்வலையை உண்டுபண்ணி வருகிறது.. முந்தைய திமுக ஆட்சியின்போது தனது சொந்த கல்வி நிறுவனங்களுக்கான அங்கீகாரம் பெறுவதற்காக பள்ளிக்கல்வித் துறைக்கு லஞ்சம் கொடுக்க நிர்பந்திக்கப்பட்டதாக பகிரங்கமாக குற்றம் சாட்டியிருந்தார்.. இதுகுறித்து தற்போது பிரத்யேகமான தகவல் ஒன்று நமக்கு கிடைத்திருக்கிறது.

    Advertisement

    செவ்வாய் கிழமை சட்டப் பேரவையில் பேசிய நிதி அமைச்சர் மரியம் வில்சன், "முந்தைய திமுக ஆட்சியின்போது தனது கல்வி நிறுவனங்களுக்கான அங்கீகாரம் பெறப் பள்ளிகல்வித் துறைக்கு லஞ்சம் கொடுக்க நிர்பந்திக்கப்பட்டதாக" பொருள்படும் படி பேசியது மாநிலத்தில் பெரும் அரசியல் விவாதத்தை உருவாக்கியது.

    Advertisement

    மரியம் வில்சன் சொன்ன வார்த்தை

    மரியம் வில்சன் பேசும்போது, "நான் கொடுத்ததிற்கு நானே சாட்சி" என்று கூறியதுடன், "சென்னை தி.நகரில் உள்ள ஒரு இடத்தில் கல்வி நிறுவன அனுமதிக்காகப் பணம் செலுத்தியதாகக் குறிப்பிட்டு, இதன் மீதான விசாரணை அல்லது அவதூறு வழக்கையும் சந்திக்கத் தயார் எனவும் அறிவித்தார்.

    மரியம் வில்சனின் இந்த ஓப்பன் ஸ்டேட்மென்ட்டை கேட்டு, சபையில் இருந்த முதல்வரின் செயலாளர்கள் உள்ளிட்ட உயரதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

    ஜெகதீஷ் பழனிச்சாமி

    ஒருவருக்குள் ஒருவர் தங்களை பார்த்துக் கொண்ட அவர்கள், உதட்டை பிதுக்கியும் தலையை ஆட்டியும், என்ன இது என்பது போல சைகையால் பேசிக் கொண்டார்களாம். பிறகு சபை முடிந்ததும் இது குறித்து முதல்வரிடம் விவாதிக்க அவர்கள் முயற்சித்தபோது, முதல்வரிடம் பேச முடியவில்லை. இதனால் முதல்வரின் தனிச் செயலாளர் ஜெகதீஷ் பழனிச்சாமியிடம் இதுகுறித்து அதிகாரிகள் விவாதித்துள்ளனர்.

    Advertisement

    முதல்வர் விஜய் போட்ட உத்தரவு

    மரியம் வில்சனின் பேச்சை விவரித்து விட்டு, "இப்படியெல்லாம் பேசுவது அரசுக்கே சிக்கலை உருவாக்கும். லஞ்சம் வாங்குவது மட்டுமல்ல கொடுப்பதும் குற்றம் தானே? அமைச்சர் என்பதால் எதை வேண்டுமானாலும் பேசலாம் என்பதல்ல..

    லஞ்ச ஒழிப்புத் துறையில் திமுக புகார் அளித்தால் அமைச்சரின் பெயரையும் கடந்து முதல்வருக்கும் சிக்கலை ஏற்படுத்தும். முதல்வரிடம் சொல்ல நினைத்தோம். வாய்ப்பு அமையவில்லை. நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள்" என்று தெரிவித்திருக்கிறார்கள்.

    இதன் பிறகு 2 மணி நேரம் கழித்து முதல்வரின் தொலைபேசி லைன், ஜெகதீஷூக்கு கிடைக்க, அதிகாரிகளின் ஆதங்கத்தை விவரித்திருக்கிறார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த முதல்வர் விஜய், அவரை கண்டித்து வையுங்கள் என உத்தரவிட்டாராம்.. உடனே மரியம் வில்சனை தொடர்பு கொண்டு செம டோஸ் கொடுத்துள்ளாராம் ஜெகதீஷ்.. இதனால் மிகவும் நொந்து போன மரியம் வில்சன், வேளாங்கன்னி மாதா கோவிலுக்கு ஆன்மீக நடை பயணம் மேற்கொண்டுள்ளார்" என்றெல்லாம் தகவல்கள் கூறுகின்றன.

    English Summary

    Mariam Wilson Statement in Assembly.. Officials Shocked by Her Words, Information Reaches Vijay, What Happened Next?