Kasimedu: முரசு புயலில் சிக்கிய காசிமேடு மீனவர்கள்! ஆந்திராவில் மரியவில்சன் முகாம்!

  • சென்னை: முரசு புயலில் சிக்கி மாயமான சென்னை காசிமேட்டைச் சேர்ந்த மீனவர்கள் 9 பேரில் 7 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன. அவர்களில் 5 பேர் அடையாளம் காணப்பட்டனர். இறந்தவர்களின் உடல்களை அடையாளம் காணவும், அவர்களது உடல்களை தமிழகத்திற்கு கொண்டு வருவதற்காகவும் ஆந்திராவில் நிதியமைச்சர் மரியவில்சன் முகாமிட்டுள்ளார்.

    Advertisement

    சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 29ஆம் தேதி மீனவர்கள் பக்கிரிசாமி (எ) சூர்யா (49), குப்பன் (48), மோகன்(47), ராஜேஷ் (52), முருகன் (48), குப்புசாமி (58), விஜயகாந்த் (44), அரவிந்த் (40) மற்றும் கடலூரைச் சேர்ந்த நாராயணன் (57) ஆகிய 9 பேர் விசைப்படகில் மீன்பிடிக்க கடந்த 29ஆம் தேதி சென்றனர்.

    Advertisement

    முரசு புயல் எச்சரிக்கை காரணமாக ஆந்திராவில் நிஜாம்பட்டினம் துறைமுகத்தில் படகை நிறுத்தியிருந்தனர். இந்த நிலையில் நவம்பர் 3ஆம் தேதி ராமாயப்பட்டினம் நோக்கி அவர்கள் படகை எடுத்துக் கொண்டு புறப்பட்டதாக சொல்லப்படுகிறது.

    பின்னர் புயலில் சிக்கி படகு நடுக்கடலில் தத்தளித்தது. உடனே படகு பழுதானது. இந்த நிலையில் அவர்கள் கடலோர காவல் படையின் உதவியை நாடினர். சிறிது நேரத்தில் அவர்களது படகு கவிழ்ந்ததால் அவர்களுடனான போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

    இந்த நிலையில் மீனவர்களை தேடும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் கொத்தப்பட்டினம், பள்ளிபாலம் கடற்கரையில் நேற்று படகு கவிழ்ந்த நிலையில் இருந்தது.

    Advertisement

    இதையடுத்து அங்கு போய் பார்த்த போது 5 உடல்கள் கரை ஒதுங்கியிருந்தன. அது போல் மன்னூரில் ஒரு சடலமும் குண்டம்மல்லம் பகுதியில் ஒரு சடலமும் கரை ஒதுங்கியுள்ளன. இதுவரை 9 பேரில் 7 சடலங்கள் மீட்கப்பட்டது. இதில் 5 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டன. அவர்கள் காசிமேடு மீனவர்கள் என தெரியவந்தது.

    இதையடுத்து அவர்களது உடலை பிரேத பரிசோதனைக்கு பிறகு தமிழகத்திற்கு கொண்டு வர நிதியமைச்சர் மரியவில்சன் ஆந்திராவில் முகாமிட்டுள்ளார். அங்கு அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள அவர்களது உடலுக்கு அவர் அஞ்சலி செலுத்தினார். மீதிமுள்ள 2 உடல்கள் யார் என்பதை அடையாளம் காணும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த உடல்கள் சிதிலமடைந்திருப்பதாக சொல்லப்படுகிறது.

    Advertisement

    முரசு புயலில் சிக்கி இறந்த மீனவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ 7 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனிடையே காசிமேடு மீனவர்களின் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில் அவர்கள் மகிழ்ச்சியாக தங்கள் பணியை செய்து வந்தனர். மீனவர்கள் பலியால் காசிமேடு பகுதியே சோகத்தில் மூழ்கியுள்ளது.

    English Summary

    Tamil nadu Finance Minister Marie Wilson in Andhra to identify the bodies of Kasimedu Fishermen and sending their bodies to Tamilnadu.