சென்னை: வி லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலையை முதிர்ந்த அரசியல்வாதி என நினைத்தேன் என அமைச்சர் மரியவில்சன் விமர்சித்துள்ளார்.
சென்னை தண்டையார்பேட்டையில் மரியவில்சன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் முதலீடுகளை ஈர்க்க விஜய் எதற்காக லண்டன் சென்றார் என அண்ணாமலை எழுப்பிய கேள்விக்கு மரியவில்சன் பதில் அளித்தார்.
அவர் கூறுகையில் அண்ணாமலை தமிழக பாஜக தலைவராக இருந்தார். ஐபிஎஸ் அதிகாரியாகவும் அறியப்பட்டவர். அவர் ஒரு முதிர்ந்த அரசியல்வாதி என நான் நினைத்தேன். அவரிடம் இருந்து இந்த கேள்வியை நான் எதிர்பார்க்கவில்லை. முதலீடுகளுக்காக பெரிய போர் நடந்து வருகிறது. ரூ. 1 கிடைத்தால் கூட அது தமிழகத்திற்கு முதலீடு தானே. முதலீடுகளுக்காக விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது நல்லதல்ல. தமிழகத்தில் தற்போது ஊழல் இல்லாமல் வரி வசூல் நடைபெறுகிறது. தவெக ஆட்சிக்கு பிறகு வரி வசூல் முறைப்படுத்தப்பட்டுள்ளது. ஊழல் இல்லை என்பதால் பத்திரப்பதிவுக்கு அதிகம் பேர் வருகிறார்கள், வருவாய் கிடைத்துள்ளது. தமிழக அரசு பெறும் கடன் அளவு குரைந்து வருகிறது. கடந்த ஆட்சியை ஒப்பிடுகையில் கடன் அளவை 19 சதவீதம் குறைத்திருக்கிறோம். தமிழகத்தில் வெளிப்படையான தூய்மையான ஆட்சி நடைபெறுகிறது. தமிழக அரசின் வருவாயை பெருக்கும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். இவ்வாறு மரியவில்சன் தெரிவித்துள்ளார்.