இந்த 3 நாட்களை மார்க் பண்ணி வச்சிக்கோங்க.. சென்னையில் வீடுகளுக்கே வந்து ரேஷன் பொருட்கள் விநியோகம்!

  • சென்னை: வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்களை விநியோகிக்கும் திட்டத்தின் கீழ், சென்னையில் வரும் 4,5 மற்றும் 6 ஆம் தேதிகளில் பொது விநியோகத் திட்டப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட உள்ளன.

    Advertisement

    முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் உள்ள மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்களின் இல்லங்களுக்கே சென்று நேரடியாக ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வந்தது. கூட்டுறவுத் துறையின் மூலம் அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் நேரடியாக வீடுகளுக்கே சென்று விநியோகம் செய்யப்படும். பொதுவாக மாதத்தின் முதல் வாரத்திலேயே இந்த பொருட்கள் விநியோகம் செய்யப்படுகின்றன.

    Advertisement

    தமிழ்நாட்டில் முந்தைய திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட 'தாயுமானவர்' திட்டத்தின் பெயர் தற்போது 'பொது விநியோகத் திட்டம்' என மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. எனினும், இந்தத் திட்டத்தின் கீழ் முன்பு போலவே, 65 வயதுக்கும் மேற்பட்டோர், மாற்றுத் திறனாளிகளுக்கு ரேஷன் பொருட்கள் வீடுகளுக்கே விநியோகம் செய்வது இந்த ஆட்சியிலும் தொடர்கிறது.

    இந்நிலையில், ஆகஸ்ட் மாதத்தின் 4, 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் சென்னையில் ஆவடி, அம்பத்தூர், அண்ணா நகர், கொளத்தூர், பெரம்பூர், ஆர்.கே.நகர், இராயபுரம், திருவொற்றியூர், மணலி, வில்லிவாக்கம், ஆயிரம் விளக்கு, சேப்பாக்கம், மயிலாப்பூர், சைதாப்பேட்டை, தி.நகர், சோழிங்கநல்லூர், பரங்கிமலை, தாம்பரம் மற்றும் மதுரவாயல் ஆகிய 19 மண்டலங்களில் கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் 1346 நியாயவிலைக் கடைகளின் விற்பனையாளர்கள் அத்தியாவசியப் பொருட்களை இல்லம் சென்று விநியோகம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

    Advertisement

    எனவே, இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் இத்திட்டத்தைத் தவறாமல் பயன்படுத்திக்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது என கூட்டுறவுச் சங்கங்களின் கூடுதல் பதிவாளர் சா.பாபு தெரிவித்துள்ளார்.

    இன்னொரு குட் நியூஸும் வரும் பட்ஜெட்டில் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 65 வயதுக்கு அதிகமானவர்களுக்கு வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்​டத்தை 60 வயது வரை விரி​வாக்​கம் செய்ய tஹவெக அரசு திட்​ட​மிட்​டுள்​ள​தாக தகவல் வெளி​யாகி ​உள்​ளது. பட்​ஜெட்​டில் இதற்​கான அறி​விப்​பு வெளி​யாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    English Summary

    Under the scheme to deliver Public Distribution System commodities (Ration) to the doorsteps of the elderly and persons with disabilities, distribution is scheduled to take place in Chennai on the upcoming 4th, 5th, and 6th.