சென்னை: காஞ்சிபுரத்தில் உள்ள சிறார்கள் பாதுகாப்பு இல்லத்திலிருந்து, பல்வேறு வழக்குகளில் தண்டனை பெற்று வந்த சிறார்கள் 10க்கும் மேற்பட்டவர்கள் திடீரென தப்பி சென்றிருக்கிறார்கள். இதையடுத்து அவர்களை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார்கள்.
இந்த பாதுகாப்பு இல்லத்தில், தமிழ்நாடு முழுவதும் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட.. 30க்கும் மேற்பட்ட சிறார்கள் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இப்படி இருக்கைளில் திடீரென அவர்களில் 10க்கும் அதிகமானோர் தப்பியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இன்று மாலை 7.30 மணியளவில் சிறார்களை அவர்களின் அறைக்குள் போகுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டனர். ஆனால், குறிப்பிட்ட சில சிறார்கள் அதிகாரிகளை தாக்கிவிட்டு மெயின் கேட்டை உடைத்துவிட்டு அங்கிருந்து எஸ்கேப் ஆகியிருக்கின்றனர். இதனால் பதற்றமடைந்த வார்டன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்திருக்கின்றனர். இதையடுத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருக்கின்றனர். இதையடுத்து காஞ்சிபுரம் பேருந்து நிலையம், ரயில் நிலையம், பரனூர் டோல்கேட் உள்ளிட்ட இடங்களில் போலீசார் தீவிர தேடுதல் பணிகளை மேற்கொண்டுள்ளனர். வெளியில் தப்பிய சிறுவர்களில் சிலர், பொதுமக்களை தாக்கி பைக், செல்போன் மற்றும் பணத்தை பறித்திருக்கின்றனர். எனவே தப்பிய சிறுவர்களை உடனடியாக கண்டுபிடிக்க வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.என்ன நடந்தது?