சென்னை: தீபாவளிக்காக பொதுமக்கள் பலரும் சொந்த ஊருக்கு கிளம்பும் சூழலில், பொதுவாகவே இதுபோன்ற காலங்களில் தாம்பரம், பெருங்களத்தூரில் கடுமையான கூட்ட நெரிசல் ஏற்படும். இதற்கிடையே தாம்பரத்தில் தனுஷின் 'ஓம்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளவும் பல ஆயிரம் ரசிகர்கள் திரண்டுள்ளனர். இதனால் அந்த பகுதியே திக்குமுக்காடி போய் இருக்கிறது.
பொதுவாகவே வார இறுதி நாட்கள் மற்றும் நீண்ட விடுமுறை நாட்களுக்கு மக்கள் ஊருக்கு கிளம்பும்போது தாம்பரம், பெருங்களத்தூர் பகுதிகளில் கடுமையான கூட்ட நெரிசல் ஏற்படும். அதிலும் இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை தீபாவளி பண்டிகை வேறு வருகிறது. இதனால் கிட்டத்தட்ட சென்னை முழுக்கவே காலியாகிறது என சொல்லலாம். மக்கள் அனைவரும் சாரை சாரையாக தங்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வருகிறார்கள்.
இந்த நேரத்தில் தாம்பரம் பகுதியில் 'ஓம்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிலும் நடக்கிறது. இதனால் அங்கு கூட்டம் உச்சத்தில் இருக்கிறது. 'ஓம்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் ஒரே நேரத்தில் திரண்டதால் கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டது. விழா நடைபெறும் இடத்தை சுற்றிலும் ரசிகர்கள் குவிந்த நிலையில், தடுப்புகளை தாண்டி அரங்கிற்குள் நுழைய முயன்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அதில் இசை வெளியீட்டு விழா நடைபெறும் வளாகத்தை சுற்றிலும் ஆயிரக்கணக்கான இளைஞர்களும் ரசிகர்களும் திரண்டிருப்பது தெரிகிறது. இதனால் அந்த பகுதியே மக்கள் வெள்ளமாக காட்சியளித்தது. விழா அரங்கிற்குள் செல்வதற்காக இரும்பு தடுப்புகள் மற்றும் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டிருந்தன. ஆனால், ரசிகர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் அதிகரித்ததால் சிலர் தடுப்புகளை தாண்டிக் குதித்தும், முண்டியடித்து கொண்டும் உள்ளே செல்ல முயன்றனர். இதனால் அங்கு கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இருப்பினும், ரசிகர்கள் தொடர்ந்து குவிந்ததால் கூட்ட நெரிசலை சமாளிக்க முடியவில்லை. அங்கு கட்டுக்கடங்காத கூட்டமே இருக்கிறது. கூட்ட நெரிசலின் காரணமாக விழாவுக்கு வந்த முக்கியப் பிரமுகர்களின் கார்கள் கூட நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு செல்ல முடியாமல் கூட்டத்திலேயே சிக்கின. ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசர ஊர்திகளும் கூட்டத்துக்குள் சிக்கி தவித்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே ரசிகர்கள் சிலர் அங்கிருந்த மேடைகள் மற்றும் தூண்களின் மீது ஏறி நின்று கொடிகளை அசைத்தபடி கோஷமிட்டனர். கூட்ட நெரிசலுக்கு மத்தியிலும் ரசிகர்களின் ஆரவாரம் தொடர்ந்து கொண்டிருந்தது. பல்லாயிரக்கணக்கானோர் ஒரே நேரத்தில் திரண்டதால் இசை வெளியீட்டு விழா நடைபெற்ற பகுதி முழுவதும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் பெரும் பரபரப்பான ஒரு சூழலே அங்கு நிலவுகிறது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஓம் - சாப்டர் 1". மம்முட்டி, சாய் பல்லவி மற்றும் ஸ்ரீலீலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இத்திரைப்படத்திற்கு சாய் அபியங்கர் இசையமைத்துள்ளார். இந்த படம் முதலில் தீபாவளி நாளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. பிறகு சில காரணங்களால் படத்தில் ரிலீஸ் தள்ளி போய் இருக்கிறது. டிசம்பர் மாதம் அல்லது பொங்கலுக்கு இந்த படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.இசை வெளியீட்டு விழா
டிரெண்டிங்
போலீஸ்
வளர விடக்கூடாது.. இப்பவே ஸ்டார்ட் பண்ணுங்க.. தனுஷ் மீது பாயும் தவெக ஐடி விங்.. பயங்கர பிளான்!
கூட்ட நெரிசல்
ஓம் படம்