சென்னை: மேகதாது மற்றும் காவிரி நீர் விவகாரத்தில் சட்டமன்றத்தில் தனித் தீர்மானம் நிறைவேற்றிவிட்டோம் என்று கூறி, விவசாய அமைப்புகளையும் அனைத்துக் கட்சிகளையும் கூட்டிப் பேச திமுக மறுப்பது தவறான அணுகுமுறையாகும். காவிரிப் படுகை விவசாயிகளின் உண்மையான கருத்துக்களைக் கேட்காமல் தன்னிச்சையாக முடிவெடுப்பது அவர்களை வஞ்சிப்பதற்குச் சமமாகும் என்று கருத்து தெரிவித்துள்ளார் மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம்,
South Beat என்ற சேனலுக்கு பேட்டி தந்துள்ள தராசு ஷ்யாம், "எத்தனை அவமானத்தை வேண்டுமானாலும் தாங்கிக் கொள்வேன், பேச்சுவார்த்தை மூலம் காவிரிப் பிரச்சனைக்கு தீர்வு காண்பேன்' என்ற விஜயின் கூற்று மொத்தமும் சினிமாத்தனமான அணுகுமுறையாகும். 2018-ல் உச்சநீதிமன்றம் இறுதித் தீர்ப்பு வழங்கிய பிறகு, மறுபடியும் புதிதாக பேச்சுவார்த்தை நடத்தித் தீர்வு காண்பது சாத்தியமில்லை.
தொகுதி மறுவரையறை கூட்டத்திற்காக எம்பிக்களுக்கு விஜய் நேரடியாக தனியாக அழைப்பு விடுத்தது முறையான நடைமுறை கிடையாது. எந்தவொரு எம்பியும் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி தனியாகக் கூட்டத்தில் பங்கேற்க முடியாது.. கட்சித் தலைமைக்குத்தான் அவர் அழைப்பு அனுப்பியிருக்க வேண்டும். அதேபோல, பெண்களுக்கான இடஒதுக்கீட்டை உயர்த்துவதை தவெக போன்ற கட்சிகளால் எதிர்க்க முடியாது. மேலும், மோடியும் விஜயும் பத்திரிகையாளர்களை சந்திக்காமல் தவிர்ப்பதில் ஒரே மாதிரி இருக்கிறார்கள். இது போன்ற அணுகுமுறை அவர்களுக்கு பெரிய அரசியல் பின்னடைவையே ஏற்படுத்தும் 1969-ல் திமுக காவிரி விவகாரத்தை கோட்டை விட்டதாக சொல்வது வரலாற்று புரிதலற்ற குற்றச்சாட்டாகும். 1969-ல் தனி நீர்வளத்துறை அமைச்சகமே கிடையாது.. அது பொதுப்பணித்துறையின் கீழ் மட்டுமே இருந்தது. 1974-ல் மைசூர் மாநிலத்துடனான ஒப்பந்தம் முடிவடைந்த பிறகு, "காவிரி நீர் தீர்ப்பாயம்" அமைக்கப்பட வேண்டும் என்ற சட்டப்பூர்வமான முதல் கோரிக்கையை முன்னெடுத்துப் பயணித்ததே கலைஞரின் தலைமையிலான திமுக ஆட்சிதான். திமுக மத்திய அளவில் காவிரி விவகாரத்தைக் கையில் எடுத்துப் பாராளுமன்றத்தில் கடுமையாகக் குரல் கொடுத்து வருகிறது. தவெக நடத்தும் இக்கூட்டம் திமுகவிற்கு நெருக்கடி தர காங்கிரஸ் தூண்டுதலால் நடப்பதாக அன்புமணி சொல்வதை பார்க்கிறோம். தவெக நடத்தும் கூட்டமும், காவிரி விவகாரத்தில் எழுப்பப்படும் கேள்விகளும் திமுகவை சிக்க வைக்கும் அரசியல் உத்தியே தவிர, இதனால் டெல்டா விவசாயிகளின் பிரச்சனைக்கு உடனடி தீர்வு கிடைக்கப்போவதில்லை. திமுக ஆட்சியில் அதிகாரிகளின் தவறான வழிகாட்டுதலும், அவர்களை மட்டுமே அளவுக்கு அதிகமாக நம்பியிருப்பதுமே ஸ்டாலின் மற்றும் திமுக அரசின் முக்கிய பின்னடைவுக்கு காரணமாக அமைகிறது. முதலமைச்சர் பத்திரிகையாளர்களைச் சந்திக்காததால், அவர் என்ன நினைக்கிறார் என்று அதிகாரிகளே தவறாக யூகித்து செயல்படுகிறார்கள். அரசியல்வாதிகளைவிட அதிகாரிகளை மட்டுமே நம்பி ஆட்சி நடத்துவது ஒருபோதும் வெற்றியைத் தராது; அதிகாரிகளின் தவறான வழிகாட்டுதலே ஸ்டாலினின் பின்னடைவுக்கு காரணமாகும். மேலும், மேகதாது மற்றும் காவிரி நீர் விவகாரத்தில் சட்டமன்றத்தில் தனித் தீர்மானம் நிறைவேற்றிவிட்டோம் என்று கூறி, விவசாய அமைப்புகளையும் அனைத்துக் கட்சிகளையும் கூட்டிப் பேச திமுக மறுப்பது தவறான அணுகுமுறையாகும். காவிரிப் படுகை விவசாயிகளின் உண்மையான கருத்துக்களைக் கேட்காமல் தன்னிச்சையாக முடிவெடுப்பது அவர்களை வஞ்சிப்பதற்குச் சமமாகும்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.தொகுதி மறுவரையறை
தனி நீர்வளத்துறை அமைச்சகம்
திமுகவின் பின்னடைவு