ஜட்ஜ் ஐயா, டார்ச்சர் பண்றா? வேலைக்காரியா? மனைவி? கோர்ட்டுக்கு ஓடிய கணவன்! ஜீவனாம்சம் கேஸில் ட்விஸ்ட்

  • சென்னை: மும்பையில் கணவன் மற்றும் மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப தகராறு வழக்கில் மும்பை உயர்நீதிமன்றம் மிக முக்கியமான ஒரு தீர்ப்பை இப்போது வழங்கியுள்ளது.. இந்த அதிரடி தீர்ப்பு ஒட்டுமொத்த கணவன்மார்களுக்கும் ஒரு முக்கிய எச்சரிக்கையாக அமைந்துள்ளது.. திருமண பந்தத்தில் மனைவியின் உரிமைகளை நிலைநாட்டும் வகையில் அமைந்துள்ள இந்த வழக்கின் பின்னணி என்ன? பரபரப்பான தீர்ப்பு குறித்த முழுமையான விவரங்கள் என்னென்ன? இங்கே சுருக்கமாக பார்ப்போம்.

    Advertisement

    கடந்த 2002ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட ஒரு தம்பதியில், கணவர் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.. சிஏ படிப்பு முடித்துள்ள அந்த கணவர் தனது மனுவில், தனது மனைவியால் சரியாக சமையல் செய்ய முடியவில்லை என்றும், வீட்டு வேலைகளை கூட அவரால் சரியாகச் செய்ய முடியவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்..

    Advertisement

    வேலைக்காரியா, மனைவியா

    இந்த 2 காரணங்களாலேயே தனக்கு மிகப்பெரிய மன அழுத்தம் ஏற்படுவதாக கூறிய அவர், திருமணச் சட்டத்தின் கீழ் இது அனைத்தும் சட்ட ரீதியாக கொடுமைக்கு (Cruelty) சமம் என மிக வலுவாக தெரிவித்து விவாகரத்து கோரியிருந்தார்..

    ஆனால் மனைவி தரப்பில் நீதிமன்றத்தில் முற்றிலும் மாறுபட்ட ஒரு வேதனையான தகவல் தெரிவிக்கப்பட்டது.. தன்னை பாத்திரம் கழுவுதல், வீட்டை சுத்தம் செய்தல், சமையல் உள்ளிட்ட அனைத்து வீட்டு வேலைகளையும் கட்டாயப்படுத்தி செய்ய வைத்ததாக மனைவி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறினார்..

    அதுமட்டுமில்லாமல் தினமும் வீட்டில் மீதமான உணவை மட்டுமே தன்னை உண்ண கட்டாயப்படுத்தியதாகவும் மனைவி தரப்பில் நீதிமன்றத்தில் பரபரப்பு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.. இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த குடும்ப நல நீதிமன்றம், கடந்த 2010 ஆம் ஆண்டு தம்பதிக்கு விவாகரத்து வழங்கி உத்தரவிட்டது.. ஆனால் அந்த பெண்ணுக்கு ஜீவனாம்சம் வழங்க குடும்ப நல நீதிமன்றம் முற்றிலும் மறுத்துவிட்டது..

    Advertisement

    மும்பை ஹைகோர்ட் நீதிபதி

    குடும்ப நல நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து மும்பை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.. இந்த வழக்கை மும்பை உயர்நீதிமன்ற நீதிபதிகள் பாரதி டாங்ரே மற்றும் மஞ்சுஷா தேஷ்பாண்டே ஆகியோர் அடங்கிய அமர்வு மிக தீவிரமாக இன்று விசாரித்தது.

    வழக்கை முழுமையாக விசாரித்த நீதிபதிகள், குடும்ப நல நீதிமன்றத்தின் தீர்ப்புக்கான காரணங்கள் மற்றும் அணுகுமுறை மிகவும் பலவீனமாக இருப்பதை மறைமுகமாக சுட்டிக்காட்டியதோடு, அந்த நீதிமன்றம் ஏற்கனவே வழங்கிய விவாகரத்து உத்தரவை அதிரடியாக ரத்து செய்து உத்தரவிட்டனர்.. மேலும் இந்த வழக்கில் கணவன்மார்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் நீதிபதிகள் பல்வேறு முக்கிய கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்..

    Advertisement

    வேலைக்காரி - மனைவி

    நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் சொல்லும்போது, திருமணம் என்பது சமமான 2 நபர்களின் கூட்டணி ஆகும்.. இது ஒரு சேவை ஒப்பந்தம் கிடையாது.. எனவே ஒருபோதும் மனைவியை வீட்டில் வேலைக்காரியாக கருத முடியாது.. சமையல் செய்வது, வீட்டை சுத்தம் செய்தல் போன்ற வீட்டு வேலைகளை ஒரு பெண் செய்யத் தவறுவது மட்டுமே கணவனுக்கு நடக்கும் மனரீதியான கொடுமையாகிவிடாது.

    ஒரு மனைவி கட்டாயமாக வீட்டு வேலைகளை செய்ய வேண்டும் என கணவன் தரப்பில் எதிர்பார்க்கக்கூடாது.. திருமணத்தின் ஆரம்ப நாட்களில் தம்பதிகளுக்குள் ஏற்படும் சாதாரண கருத்து வேறுபாடுகளையும், அனுசரித்துச் செல்லும் சிக்கல்களையும் (Ordinary wear and tear of marital life), சட்ட ரீதியான கொடுமைக் குற்றச்சாட்டுகளாக ஒருபோதும் மிகைப்படுத்தக்கூடாது.

    Advertisement

    அவமானம், கடுமையான மனவேதனை ஆகியவற்றை ஒருவருக்கு ஏற்படுத்துவதுடன், திருமண உறவைத் தொடர்ந்து கொண்டு செல்லவே முடியாத நிலையை உருவாக்கும் கடுமையான நடத்தையை மட்டுமே கொடுமை என்று எடுத்துக்கொள்ள வேண்டும் என நீதிபதிகள் இந்த தீர்ப்பில் மேற்கோள் காட்டியுள்ளனர்..

    தெளிவுபடுத்திய நீதிபதிகள்

    மேலும் விவாகரத்து வழக்குகளில் மனரீதியான கொடுமை என்றால் என்ன என்பதையும் நீதிபதிகள் மிக எளிமையாக விளக்கினர்.. ஒருவரை கேவலப்படுத்துவது, கடுமையான மனவேதனை தருவது மற்றும் திருமண வாழ்க்கையை இனி தொடரவே முடியாது என்ற நிலையை உருவாக்குவது தான் உண்மையான கொடுமை ஆகும்..

    கெட்ட வார்த்தைகளால் திட்டுவது, நாலு பேருக்கு முன்னால் அவமானப்படுத்துவது, இல்லாத பொய் குற்றச்சாட்டுகளை சொல்வது அல்லது ஒரு பெண்ணின் தனிப்பட்ட சுதந்திரத்தை தடுப்பது ஆகியவையே மனரீதியான கொடுமைக்கு மிக முக்கிய காரணங்கள் என நீதிபதிகள் தெளிவுபடுத்தினார்கள். நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் இவ்வாறு கூறியிருப்பது மிகுந்த கவனத்தை பெற்று வருகிறது.

    English Summary

    Massive Twist in Alimony Case! Wife or House maid? Husband Rushes to Court Claiming ‘Torture