அரிசி, பருப்பு டப்பாலாம் காலியா இருக்கு! இதுல அண்ணன் சீராம்! யாரு கேட்டா? மேயர் பிரியா அட்டாக்

  • சென்னை: முன்பெல்லாம் அரிசி, பருப்பு டப்பாவுல காசை மறைத்து வைத்து நகைச் சீட்டு போடுவோம். ஆனால் இன்று அநத அரிசி, பருப்பு டப்பாவெல்லாம் காலியாகவே இருக்கிறது என விலைவாசி உயர்வு குறித்து சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா பேசினார்.

    Advertisement

    மேலும் அவர் தாய்மாமன் சீர், அண்ணன் சீரெல்லாம் உங்களை யார் கேட்டது? அதையெல்லாம் எங்கள் வீட்டில் இருப்பவர்களே பார்த்துக் கொள்வார்கள் என்றும் ஆர். பிரியா ஆவேசமாக தெரிவித்தார்.

    Advertisement

    சென்னையில் நடந்த திமுக விழாவில் இதுகுறித்து அவர் பேசுகையில், பெண்களுக்கு சொத்தில் சம உரிமையை பெற்றுத் தந்தவர் கருணாநிதி. சொத்துல சம உரிமை கொடுத்த பிறகு , அண்ணன் சீர், தாய்மாமன் சீரெல்லாம் யாரு கேட்டா?

    60 ஆண்டுகள்

    இதெல்லாம் எங்க வீட்டுல இருக்கிறவங்களே பார்த்துப்பாங்க. இது போன்ற திட்டங்கள் பெண்களை மீண்டும் 60 ஆண்டுகள் பின்னோக்கி இழுத்துச் செல்லும் முயற்சி. சொத்தில் சம உரிமை வாங்கித் தந்தப்பவே நாங்கள் எல்லோரும் அந்த எல்லையைக் கடந்து முன்னேறி வந்துவிட்டோம்.

    டார்கெட் செய்யப்படும் பிரியா! அவருடன் நீங்க கூட நிற்க முடியாதா! திமுக தலைமை மீது பாயும் கட்சி தலைகள்
    Advertisement

    காசு மறைத்து

    முன்பெல்லாம் அரிசி, பருப்பு டப்பாக்களில் காசு மறைத்து வைத்திருப்போம். அதை எடுத்து நகைச் சீட்டு போட்டு நகை வாங்குவோம். ஆனால் இன்று அந்த அரிசி, பருப்பு வாங்குவதற்கே காசு இல்லாமல் மாதந்தோறும் சவாலாக இருக்கிறது.

    6 சிலிண்டர்

    இதுல வேற முதல்வர் விஜய், ஆண்டுக்கு 6 சிலிண்டர் தருகிறோம்னு சொன்னாரு! அது எந்தக் கணக்குல போச்சுன்னே தெரியல.. அப்புறம் 3 சிலிண்டர் கொடுப்பார்னு பார்த்தா அதுவும் இன்னும் கணக்குலேயே வரவில்லை.

    லட்சியம்

    பெண்கள் தனியாக தங்களுக்கென்று ஒரு லட்சியத்தை அடைய வேண்டும். சமுதாயத்தில் உயர வேண்டும் என்று ஒவ்வொரு பெண்ணையும் உயர்த்தியது திமுக. அதனால்தான் இன்றைக்கு இந்த அரங்கம் முழுவதுமே மகளிர் அணியும் தொண்டரணியுமாகப் பெண்கள் நிறைந்து வழிகிறோம். மேடையிலும் அரங்கிலுள்ள 70 சதவீத அளவுக்கு பெண்களே நிறைந்திருப்பதுதான் திமுகவின் அடையாளம்.

    Advertisement
    Protocol பார்க்காமல் மேயர் பிரியா தாராளமாக வரலாமே! அமைச்சர் ராஜ்மோகன்

    புதுமை பெண் திட்டம்

    மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த புதுமைப் பெண் திட்டம், விடியல் பயணத் திட்டத்தால் சிறு தொழில் செய்யும் பெண்கள், பூ விற்கும் பாட்டிகள் முதல் இட்லி கடை வைத்துள்ளவர்கள் வரை மாதம் ரூ 1000 முதல் 1500 வரை சேமிக்கும் நிலை ஏற்பட்டது.

    பெண்கள் முன்னேற்றம்

    12 ஆம் வகுப்பு முடித்து உயர்கல்வி படிக்க முடியாத சூழலை மாற்றி அழிக்க முடியாத சொத்தான கல்வியை பெண்களுக்குக் கொடுத்தது திமுக. ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் என்றும் மக்களோடும் தொண்டர்களோடும் இணைந்து ஒன்றாகவே நிற்போம்.

    Advertisement

    சமுதாயத்தில் உயர்ந்த பெண்கள்

    அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என்பார்கள். அதையெல்லாம் மாற்றி பெண்கள் படிக்க வேண்டும், சமுதாயத்தில் உயர வேண்டும், அவர்களுக்கென தனி லட்சியத்தை அடைய வேண்டும் என ஒவ்வொரு பெண்ணையும் உயர்த்தியது திமுக என தெரிவித்தார்.

    தாய்மாமன் சீர்

    தாய்மாமன் சீராக அரசு மருத்துவமனையில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படுகிறது. அது போல் அண்ணன் சீராக திருமணத்திற்கு பட்டுப்புடவையும், ஒரு பவுன் தங்கமும் வழங்கப்படவுள்ளது. இத்துடன் வெற்றிப் பயண திட்டத்தின் கீழ் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும் குறிப்பிட்ட பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் வழங்கப்படுகிறது.

    Advertisement

    விலைவாசி உயர்வு

    தற்போது விலைவாசி உயர்ந்துள்ள நிலையில் பெரும்பாலான பெண்கள் கருதுவது என்னவென்றால், இலவச பயணம், அண்ணன் சீர், தாய்மாமன் சீரெல்லாம் வேண்டாம், விலைவாசியை குறைத்தாலே போதும் என்கிறார்கள்.

    English Summary

    Chennai Corporation Mayor R.Priya criticises about Thaimaaman Seer and Annan Seer which is initiated by TVK government.