ரீல்ஸ் பார்த்து வாக்களித்த மக்கள் இப்போ வருத்தப்படுறாங்க.. தவெகவை சாடிய சென்னை மேயர் பிரியா!

  • சென்னை: ரீல்ஸை பார்த்து ரியல் ஆட்சியை இழந்துவிட்டதாக தவெகவுக்கு வாக்களித்த மக்கள் வருந்துகிறார்கள் என்று சென்னை மேயர் பிரியா தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 22 தொகுதிகளில் 2ல் மட்டுமே திமுக வென்றதாக கூறிய மேயர் பிரியா, திமுகவின் தோல்வி தற்காலிகமானது தான் என்றும் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    சட்டசபைத் தேர்தல் முடிவுகளுக்கு பின் முதல்முறையாக சென்னை மாமன்ற கூட்டம் இன்று நடைபெற்றது. இதன்பின் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மேயர் பிரியா பேசுகையில், திமுக கொண்டு வந்த திட்டங்களின் பெயர்களை மாற்றி தொடர்ந்து செயல்படுத்தினால் மட்டுமே தற்போதைய அரசால் இயங்க முடியும் என்பது உண்மை.

    Advertisement

    நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய் தமிழக பொருளாதார வலிமை குறித்து பேசியது தான் திமுகவுக்கான வெற்றி. 2024-25ம் ஆண்டு 11.19 சதவிகிதம் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை அடைந்தது தமிழ்நாடு. 2025-26ம் நிதியாண்டில் 10.81 சதவிகிதம் பொருளாதார வளர்ச்சியை தமிழ்நாடு தக்கவைத்துள்ளது.

    இந்தியாவில் தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்களில் 45 சதவிகிதம் பேர் தமிழ்நாட்டில் பணிபுரிகிறார்கள் என்று இன்றைய முதல்-அமைச்சர் நிதி ஆயோக் கூட்டத்தில் பேசியுள்ளார் என்பது திராவிட மாடல் அரசின் முழு வெற்றியாகும்.சென்னை மாநகராட்சி சார்பாக புதிய சாலைகள், மழைநீர் வடிகால் பூங்காக்கள், போக்குவரத்து நெரிசலை குறைக்க மேம்பாலப் பணிகள் என்று மக்களுக்காக எண்ணற்ற பணிகள் செய்யப்பட்டு வருகின்றன.

    Advertisement

    இந்த சட்டசபைத் தேர்தலில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 22 தொகுதிகளில் 2 தொகுதிகளில் மட்டுமே திமுக வென்றது. 20 தொகுதிகளை திமுக கூட்டணி இழந்திருக்கிறது. ஆனால் இப்போது மக்கள் இவர்களுக்கு ஏன் வாக்களித்தோம் என்ற வருத்தத்தில் இருக்கின்றனர். ரீல்ஸை பார்த்து ரியல் ஆட்சியை இழந்துவிட்டோம் என்று வருந்துகிறார்கள். திமுகவின் தோல்வி தற்காலிகமானது தான். திமுக மீண்டும் வெற்றி பெறும். மாமன்ற உறுப்பினர்கள் மக்களுக்காக எப்போதும் தொய்வின்றி பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்வதாக தெரிவித்தார்.

    இதன்பின் மாமன்ற உறுப்பினர்களில் திமுக மற்றும் அதிமுக இடையே மோதல் ஏற்பட்டது. இன்னொரு பக்கம் காங்கிரஸ் கட்சி கவுன்சிலர்கள் தங்களை எதிர்க்கட்சியாக அறிவிக்க வேண்டும் என்று மேயர் பிரியாவை முற்றுகையிட்டனர். இதனால் சென்னை மாநகராட்சி கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

    English Summary

    Mayor Priya: Voters Regret Choosing TVK After Watching Reels, Chennai Mayor Priya Slams Vijay's Party, Calls DMK's Defeat Temporary