மேயர் பதவியை எதிர்பார்க்கும் காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல், மதிமுக.. விஜய் முடிவு? கலக்கத்தில் தவெக!

  • சென்னை: தவெக கூட்டணியில் இணைந்துள்ள காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல் மற்றும் மதிமுக உள்ளிட்ட கட்சிகள் மேயர் பதவியை எதிர்பார்த்து இருப்பது தெரிய வந்துள்ளது. காங்கிரஸ் கட்சி 5 முதல் 7 மேயர் பதவிகளையும், விசிக 2 மேயர் பதவியையும், ஐயூஎம்எல் மற்றும் மதிமுக உள்ளிட்ட கட்சிகள் தலா ஒரு மேயர் பதவியையும் எதிர்பார்ப்பதால், தவெக என்ன முடிவு எடுக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    Advertisement

    ஜனவரி மாதமே 28 மாவட்ட ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், உள்ளாட்சிகளை நிர்வகிக்க தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். அவர்களின் பணிக் காலம் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் உள்ளாட்சித் தேர்தல் அடுத்த 6 மாதத்திற்கு நடக்க வாய்ப்பில்லை என்று பார்க்கப்படுகிறது.

    Advertisement

    5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவடைந்த பின்னரே உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது தொடர்பான முடிவு எடுக்கப்படும் என்று பார்க்கப்படுகிறது. தவெகவினரும் உள்ளாட்சித் தேர்தலை அதிகம் எதிர்பார்த்து இருக்கின்றனர். ஆனால் நகரங்களிலேயே இன்னும் முழுமையான கட்டமைப்பு தவெகவுக்கு உருவாகவில்லை என்பதால், இன்னும் சில காலம் காத்திருக்கலாம் என்று தவெக கணக்கு போடுகிறது.

    அதேபோல் உள்ளாட்சித் தேர்தலிலும் அதிகாரப் பங்கீடு இருக்கும் என்பதால், தவெகவை விடவும் கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல் மற்றும் மதிமுக ஆகிய கட்சிகள் அதிகம் எதிர்பார்த்து காத்திருக்கின்றன. கடந்த முறை திமுக 21 மாநகராட்சிகளிலும் கொடியை நாட்டியது. அப்படியான ஒரு வெற்றியை பெற தவெக தீவிரமாக இருக்கிறது.

    Advertisement

    ஆனால் கூட்டணியில் இருக்கும் 4 கட்சிகளும் தவெகவுக்கு செக் வைக்கும் மனநிலையில் இருப்பது தெரிகிறது. காங்கிரஸ் கட்சி ஒவ்வொரு மாவட்டத்திலும் 20 சதவிகித உள்ளாட்சி பதவிகளை எதிர்பார்த்து காய் நகர்த்த தொடங்கி இருக்கிறது. குறிப்பாக 5 முதல் 7 மேயர் பதவிகளை கைப்பற்றி விட வேண்டும் என்பதில் மாணிக்கம் தாகூர் தீவிரமாக உள்ளார்.

    மதுரை, காரைக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாநகராட்சி மேயர் பதவிகளை கட்டாயம் கேட்டு வாங்க காங்கிரஸ் கட்சி தீவிரமாக உள்ளது. மறுபக்கம் விசிக 2 மேயர் பதவியை கைப்பற்றிவிட வேண்டும் என்று திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. மதிமுக மற்றும் ஐயூஎம்எல் கட்சிகளும் தலா ஒரு மேயர் பதவியையும், துணை மேயர் பதவியையும் கைப்பற்ற ஆலோசித்து வருகின்றன.

    Advertisement

    இது தவெகவினர் மத்தியில் விவாதமாகி இருக்கிறது. ஏனென்றால் தவெகவில் ஏராளமானோர் மேயர், துணை மேயர் கனவில் இருக்கின்றனர். இதனால் தவெகவுக்கு உள்ளாட்சித் தேர்தலில் இது மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுக்கும் என்று தெரிகிறது. உள்ளாட்சித் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டதற்கு இதுவும் ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறது.

    English Summary

    Mayor Seat Demand Grows as Allies Congress, VCK, IUML, and MDMK Push TVK Leadership