விஜய்யின் புரட்சிகர முடிவு! எம்பிபிஎஸ் உள்ஒதுக்கீட்டை 10% ஆக உயர்த்துகிறது அரசு? பெரிய திட்டம்!

  • சென்னை: தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவக் கனவை நனவாக்குவதில் மிக முக்கியப் பங்கு வகிப்பது மருத்துவப் படிப்புகளுக்கான உள்ஒதுக்கீடு முறை ஆகும். இதை உயர்த்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    Advertisement

    இதுவரை நடைமுறையில் இருந்து வரும் 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டை, 10 சதவீதமாக உயர்த்துவதற்கு தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான அரசு திட்டமிட்டு வருவதாக கோட்டை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக துறை சார்ந்த உயர் அதிகாரிகளுடன் விஜய் விரிவான ஆலோசனைகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார்.

    Advertisement

    7.5% டூ 10% வரை

    கடந்த காலங்களில் நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, அரசுப் பள்ளிகளில் படிக்கும் கிராமப்புற மற்றும் ஏழை எளிய மாணவர்களின் எம்பிபிஎஸ் சேர்க்கை விகிதம் பெருமளவில் சரிந்தது. இதனைச் சரிசெய்யவே அரசுப் பள்ளி மாணவர்களுக்கென பிரத்யேகமாக 7.5 சதவீத கிடைமட்ட உள்ஒதுக்கீடு அதிமுக ஆட்சி காலத்தில் அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி மூலம் கொண்டு வரப்பட்டது.

    இதன் மூலம் ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான அரசுப் பள்ளி மாணவர்கள் கட்டணமில்லா மருத்துவக் கல்வியைப் பெற்று பயனடைந்து வருகின்றனர்.

    தற்போது தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள விஜய் அரசு, கல்வி மற்றும் மருத்துவத் துறைகளில் பல்வேறு ஆக்கப்பூர்வமான சீர்திருத்தங்களைச் செய்ய ஆர்வம் காட்டி வருகிறது. குறிப்பாக, நீட் தேர்வினால் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைத் அவ்வப்போது சுட்டிக்காட்டி வரும் விஜய், தற்போதைய சூழலில் இந்த ஒதுக்கீட்டு அளவை இன்னும் சற்று உயர்த்தினால் மேலும் பல ஏழை எளிய மாணவர்களின் மருத்துவக் கனவு நனவாகும் என்று கருதுகிறார்.

    Advertisement

    இதன் தொடர்ச்சியாகவே, 7.5 சதவீதமாக இருக்கும் இந்த ஒதுக்கீட்டை 10 சதவீதமாக உயர்த்துவதற்கான பரிசீலனைகள் தீவிரமடைந்துள்ளன.

    அதிகாரிகளுடன் விஜய் நடத்தவிருக்கும் முக்கிய ஆலோசனை

    இந்த 10 சதவீத ஒதுக்கீட்டு உயர்வை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சட்டப்பூர்வமான அம்சங்கள் மற்றும் இடங்களின் எண்ணிக்கை கணக்கீடுகள் குறித்து விவாதிக்க விஜய் திட்டமிட்டுள்ளார். இதற்காக, மக்கள் நல்வாழ்வுத்துறை, பள்ளி கல்வித்துறை மற்றும் சட்டத்துறை உயர் அதிகாரிகளுடன் அவர் விரைவில் ஒரு உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தை நடத்தவுள்ளார்.

    ஒதுக்கீட்டை 10 சதவீதமாக உயர்த்தினால் தற்போதைய 69% இடஒதுக்கீட்டு முறைக்கு உள்ளாகவே இதனை எவ்வாறு சட்டப் சிக்கல்களின்றி அமல்படுத்துவது?

    Advertisement

    நடப்பு கல்வி ஆண்டிலேயே இந்த மாற்றத்தைக் கொண்டு வர முடியுமா அல்லது இதற்கென தனிச் சட்டம் இயற்றப்பட வேண்டுமா?

    தனியார் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களிலும் இந்த 10% அதிகரிப்பு எவ்வாறு பிரதிபலிக்கும்?

    போன்ற பல்வேறு முக்கியக் கேள்விகளுக்கு இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விடை தேடப்படும் எனத் தெரிகிறது.

    தற்போது தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளின் இடங்கள் படிப்படியாக உயர்த்தப்பட்டு வருகின்றன. இத்தகைய சூழலில், உள்ஒதுக்கீடு 10 சதவீதமாக உயர்த்தப்பட்டால், ஒவ்வொரு ஆண்டும் கூடுதலாக பல பத்து அரசுப் பள்ளி மாணவர்களுக்கு எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் சீட்டுகள் கிடைக்க வழிவகை ஏற்படும்.

    Advertisement

    அரசுப் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்து தகுதி பெறும் மாணவர்களுக்கு, கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம் உள்ளிட்ட அனைத்தையும் அரசே ஏற்று நடத்தி வரும் நிலையில், இந்த 10% உயர்வுத் திட்டம் செயல்பாட்டிற்கு வந்தால், அது தமிழகத்தின் கல்வி மற்றும் சமூக நீதி வரலாற்றில் மற்றுமொரு முக்கிய மைல்கல்லாக மாறும்.

    English Summary

    MBBS: CM Vijay Reportedly Plans to increase Government School Internal Quota to 10%