“கண்ணி வெடிகளை அகற்றும் Sappers and miners போல தவெக அரசுக்கு மதிமுக இருக்கும்.. வைகோ ஆவேச பேச்சு!

  • சென்னை: "தவெக அரசுக்கு யார் தீங்கு விளைவிக்க நினைத்தாலும் அதைத் தடுக்கின்ற போர்வாள், கேடயமாக மதிமுக இருக்கும். ராணுவம் வருகிறபோது முன்னே சென்று கண்ணி வெடிகளை அகற்றும் Sappers & Miners ஆக தவெக அரசுக்கு மதிமுக இருக்கும்" என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.

    Advertisement

    சென்னை ராயபுரத்தில் நடைபெற்ற டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் தேசிய விருது வழங்கும் விழாவில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விருது பெற்றார். தமிழக சட்டமன்ற சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் வைகோவுக்கு விருது வழங்கினர். அதைத்தொடர்ந்து இந்த நிகழ்வில் ஆவேசமாகப் பேசினார் வைகோ.

    Advertisement

    வைகோ பேசுகையில், "இங்கே விஜய் தொடங்கியிருக்கக்கூடிய தமிழக வெற்றிக் கழகம் ஒருக்காலும் பாஜகவின் பக்கம் சாயாது... அதில் எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. மதச்சார்பின்மையைப் பாதுகாக்க, சமூக நீதியைப் பாதுகாக்க அவர்கள் போர்க்களத்துச் சிப்பாய்களாக இருப்பார்கள்.

    நான் ஒன்று சொல்ல வேண்டும்... நான் சென்ற அணியில், அந்த வெற்றி வாய்ப்பில் பிரதான தளபதிகளில் ஒருவனாக நான் இருந்தவன். இன்றைக்கு உங்களுக்குச் சொல்கிறேன்... நான் உங்களோடு இருக்கிறேன். உங்கள் அரசுக்கு ஆபத்து விளைவிக்க எவர் முயன்றாலும், அதைத் தடுக்கின்ற போர் வாளாகக் கேடயமாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் இருக்கும்.

    Advertisement

    நான் எல்லாக் கட்டங்களையும் கடந்து வந்துவிட்டேன்... புதிதாக கஷ்டப்படுவதற்கு ஒன்றும் இல்லை. இப்போது இருக்கக்கூடிய தோழர்கள் எதையும் எதிர்பார்ப்பவர்களும் அல்ல. ராணுவம் வருகின்றபோது முன்னாலே சென்று கன்னிவெடிகளை அகற்றுகின்ற கூட்டத்திற்குப் பேர்தான் Sappers & Miners.

    மதிமுக, விஜய் அரசுக்கு Sappers & Miners ஆக இருக்கும். நீங்கள் பகல்கனவு காண வேண்டாம்.. உங்கள் முயற்சிகளை... நீங்கள் என்ன முயன்றாலும் சரி... தப்பித்தவறி அப்படி ஒரு நிலைமை ஏற்பட்டால் 180 இடங்களுக்குக் குறையாமல் தவெக கூட்டணி ஜெயிக்கும். நீங்கள் படுதோல்வி அடைவீர்கள்... உங்கள் அடையாளத்தை இழப்பீர்கள்... பூஜ்ஜியமாவீர்கள்" எனப் பேசியுள்ளார் வைகோ.

    English Summary

    “MDMK will serve as a sword and shield to thwart anyone intending harm to the TVK government. MDMK will act as the ‘Sappers and Miners’ for the TVK government—advancing ahead to clear landmines as the army moves forward,” said MDMK General Secretary Vaiko.