அன்பில் மகேஷை விடுவித்தால் சாட்சிகளை கலைக்க வாய்ப்பு.. நீதிமன்றத்தில் காவல்துறை தரப்பு வாதம்

  • சென்னை: திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் ஊழல் தடுப்புப் பிரிவு சிறப்பு நீதிபதி சத்யமூர்த்தி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அரசு மற்றும் திமுக தரப்பில் காரசார வாதம் நடந்து வருகிறது.

    Advertisement

    திமுக ஆட்சியில் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாக ரூ.100 கோடி லஞ்சம் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். 3 மணி நேர விசாரணைக்கு பிறகு அன்பில் மகேஷ்க்கு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை நடைபெற்றது.

    Advertisement

    தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கியது தொடர்பான ரூ.100 கோடி ஊழல் வழக்கில், தி.மு.க. முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அதிரடியாக கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி அன்பில் மகேஷ் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்த நிலையில், அவரை சென்னை அமைந்தகரையில் வைத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

    நீதிமன்றத்தில் ஆஜர்

    இதையடுத்து சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையரகம் அழைத்து வரப்பட்ட அன்பில் மகேஷிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சுமார் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர். வீடியோ பதிவு செய்து விசாரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. விசாரணைக்கு பிறகு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அன்பில் மகேஷ் அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

    Advertisement

    மருத்துவமனையில் அன்பில் மகேஷுக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டது. இதையடுத்து அவர் மீண்டும் சென்னை காவல் ஆணையரகம் அழைத்து செல்லப்பட்டார். பிறகு இரவு 10 மணியளவில் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஊழல் தடுப்பு பிரிவு சிறப்பு நீதிபதி சத்தியமூர்த்தி முன்பு அன்பில் மகேஷ் ஆஜர் படுத்தப்பட்டார். அப்போது திமுக மற்றும் அரசு தரப்பில் வாதம் வைக்கப்பட்டது.

    மரியவில்சன் வாதம்

    தமிழ்நாட்டில் போலீஸ் ராஜ்ஜியமா நடக்கிறது.. முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது முறையாக இல்லை.. முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்த உடனே கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன?.. அன்பில் மகேஷ் ஒன்றும் தீவிரவாதி இல்லை.. என திமுக வழக்கறிஞர் வில்சன் வாதம் வைத்தார்.

    Advertisement

    அரசு தரப்பு வாதம்

    அரசு தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜான் சத்யன், ஆன்லைன் மூலம் பணப்பரிமாற்றம் நடந்துள்ளது. ரூ.400 கோடிக்கு முறைகேடு நடந்துள்ளது. பணப்பரிமாற்றம் குறித்து விசாரிக்கப்பட வேண்டியுள்ளது. ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை கலைக்க நேரிடும். கைது நடவடிக்கை எல்லாம் சட்டத்திற்கு உட்பட்டே செய்யப்பட்டது. என்று கூறினார்.

    அன்பில் மகேஷ் பேட்டி

    முன்னதாக மருத்துவ பரிசோதனைக்கு பிறகு வெளியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அன்பில் மகேஷ், "சட்டப்படி வழக்கை எதிர்கொள்வேன்.. தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளில் வசதிகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளோம்.. இது யாருக்கோ கண்ணை உறுத்துகிறது. முன் ஜாமீன் மனு தள்ளுபடி ஆகிவிட்டது என்ற நினைப்பில் என்னை கைது செய்துள்ளனர்" என்றார்.

    Advertisement

    மருத்துவ பரிசோதனைகள் முடிந்த பிறகு சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அன்பில் மகேஷ் ஆஜர்படுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் மீண்டும் சென்னை காவல் ஆணையர் அலுவலகம் அழைத்து வரப்பட்டார். அங்கு வந்த சேகர்பாபுவுக்கும் அனுமதி அளிக்கப்பட வில்லை.

    சிறிது நேரம் கழித்து அன்பில் மகேஷ் பொய்யாமொழி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என தகவல் வெளியானது. சென்னை உயர் நீதிமன்றம், முன் ஜாமீனை மறுத்துள்ள நிலையில், அன்பில் மகேஷ் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்படவே அதிக வாய்ப்புள்ளதாக காவல்துறை உயர் அதிகாரிகள் மத்தியில் பேசப்படுகிறது.

    English Summary

    Anbil Mahesh Poyyamozhi: Former DMK minister Anbil Mahesh has been arrested by the Central Crime Branch police in connection with allegations that a bribe of Rs. 100 crore was collected in exchange for securing official recognition for schools during the DMK's tenure. Following a two-hour interrogation, Anbil Mahesh is currently undergoing a medical examination.