சென்னை: இந்திய தேசிய அரசியலில் ஒட்டுமொத்த பார்முலாவையும் தலைகீழாக மாற்றக்கூடிய மிகப்பெரிய அரசியல் நகர்வுகள் திரைக்குப் பின்னால் மிகத் தீவிரமாக நடைபெற்று வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மகாராஷ்டிராவின் மூத்த அரசியல் தலைவரான சரத் பவார் தாமாக முன்வந்து பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில இணையவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அவருடன் தமிழகத்தின் எதிர்க்கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்தையும் மத்திய அமைச்சரவைக்குள் கொண்டுவர உள்ளதாகவும் வெளியாகி இருக்கும் யூகங்கள் டெல்லி அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. இதற்காக சரத்பவார்தான் தூது போய் உள்ளாராம். ஆனால் இந்த கூட்டணி இப்போதைக்கு பேச்சுவார்த்தை நிலையிலேயே உள்ளது. திமுக இதுவரை எந்த விதமான முடிவையும் எடுக்கவில்லையாம்.
மத்திய அமைச்சரவை விரிவாக்கம் நீண்ட நாட்களாகத் தள்ளிப்போடப்பட்டு வருவதற்குப் பின்னால் இந்த மெகா அரசியல் ஒப்பந்தமே பிரதான காரணமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. டெல்லி மேலிடத்திற்கும் இரு மாநிலத் தலைமைகளுக்கும் இடையே பல சுற்றுகளாக நடைபெற்ற ரகசியப் பேச்சுவார்த்தைகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி, உடன்பாடுகள் எட்டப்பட்டுவிட்டதாகக் கூறப்படுகிறது. திமுகவிற்கு மத்திய அமைச்சரவையில் 2 அமைச்சர் பதவிகள் ஒதுக்கப்பட வேண்டும் என்று சரத்பவார் பேசி வருகிறாராம். இதில் சரத் பவார் தரப்பிலிருந்து அவரது மகளும் மக்களவை எம்.பி.யுமான சுப்ரியா சுலே மத்திய அமைச்சரவையில் இடம்பெறுவது ஏறத்தாழ உறுதியாகியுள்ளது. அதேபோல், திமுக தரப்பிலிருந்து நாடாளுமன்றக் குழுத் தலைவரும் எம்.பி.யுமான கனிமொழி கருணாநிதியை மத்திய அமைச்சரவையில் இணைய வைக்க முயற்சிகள் நடக்கிறதாம். திமுக மற்றும் சரத் பவார் தரப்பு தேசிய ஜனநாயகக் கூட்டணியை ஆதரிக்கும் பட்சத்தில், மக்களவையில் என்டிஏ கூட்டணியின் மொத்த பலம் 355 ஆக உயரும். இந்திய நாடாளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பங்கு (Two-Thirds Majority - 360 இடங்கள்) என்கிற தனிப் பெரும்பான்மை பலத்தை எட்ட வெறும் 5 இடங்கள் மட்டுமே குறைவாக இருக்கும். இந்த 5 எம்.பி.க்கள் பற்றாக்குறையைப் பிற மாநிலங்களைச் சேர்ந்த சிறிய கட்சிகள் மற்றும் சுயேச்சை எம்.பி.க்களின் ஆதரவு மூலம் மிக எளிதாக நிரப்பிவிட பாஜக மேலிடம் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் மக்களவையில் டீலிமிடேஷன் போன்ற எந்தவொரு முக்கிய மசோதாவையும் எதிர்க்கட்சிகளின் முட்டுக்கட்டையின்றி நிறைவேற்றும் முழுமையான முழு பலத்தை என்டிஏ அரசு பெறும். மக்களவையில் மட்டுமல்லாமல், மிக முக்கிய அரசியல் மற்றும் அரசியலமைப்புத் திருத்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட வேண்டிய மாநிலங்களவையிலும் இந்த நகர்வு பாஜகவுக்கு மிகப்பெரிய பலத்தைக் கொடுக்கும். திமுக மற்றும் சரத் பவார் அணிகளின் பலம் ஒன்று சேரும்போது, மாநிலங்களவையிலும் என்டிஏ கூட்டணிக்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை சாத்தியமாகும். நீண்ட காலமாக விவாதத்தில் இருக்கும் முக்கிய தேசிய மசோதாக்கள், தேர்தல் சீர்திருத்தங்கள் மற்றும் தொகுதி மறுவரையறை போன்ற தீவிர அரசியல் விவகாரங்களை எந்தவித தடையுமின்றி நிறைவேற்றிக் கொள்ள இத்தகைய அறுதிப் பெரும்பான்மை டெல்லி தலைமைக்கு அவசியமாகிறது. ஆனால் இந்த கூட்டணி இப்போதைக்கு பேச்சுவார்த்தை நிலையிலேயே உள்ளது. திமுக இதுவரை எந்த விதமான முடிவையும் எடுக்கவில்லையாம். இந்தியாவின் மேற்கு மற்றும் தெற்குப் பிராந்தியங்களில் தவிர்க்க முடியாத சக்திகளாக விளங்கும் மகாராஷ்டிரா மற்றும் தமிழகத்தின் முன்னணி கட்சிகள் மத்திய அரசுடன் கைகோர்ப்பது என்பது, 2026 மற்றும் அதற்குப் பிந்தைய தேசிய அரசியலின் போக்கையே மாற்றியமைக்கும். எதிர்க்கட்சிகளின் 'இந்தியா' (I.N.D.I.A) கூட்டணியின் உருவாக்கத்தில் முக்கிய தூண்களாக இருந்த சரத் பவாரும் திமுகவும் என்டிஏ கூட்டணியின் அங்கமாக மாறினால், அது ஒட்டுமொத்த எதிர்க்கட்சிக் கட்டமைப்பையும் உலுக்கும் நிகழ்வாக அமையும்.இறுதிக்கட்டப் பேச்சுவார்த்தை நிறைவு
இந்த உடன்பாட்டின்படி அமைச்சரவைப் பங்கீட்டு சூத்திரம் பின்வருமாறு வகுக்கப்பட்டுள்ளது:
சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் (SP) தரப்பிற்கு 2 முக்கிய அமைச்சர் பதவி வழங்கப்படவுள்ளதாம்.மக்களவையில் 355 எம்பிக்கள் பலம்: பாஜகவின் மாஸ்டர் பிளான்
மாநிலங்களவையிலும் மாறப்போகும் கணக்கு