Mekedatu Dam: மேகதாது அணை விவகாரம்.. ஆக.3 இல் கர்நாடகா செல்கிறார் முதல்வர் விஜய்

  • சென்னை: காவிரி நதிநீர் பிரச்சனை தொடர்பாக தமிழ்நாடு கர்நாடகா இடையேயான மோதல் பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இந்த ஆண்டு மழை இல்லாத காரணத்தால் காவிரியில் தமிழகத்துக்குத் தேவையான நீரை திறந்துவிடுவதில் கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், முதல்வர் டி.கே.சிவகுமார் அழைப்பின்பேரில் பெங்களூரில் ஆகஸ்ட் 3 ஆம் தேதி நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில் தமிழக முதல்வர் விஜய் பங்கேற்கவுள்ளார்.

    Advertisement

    தமிழகத்தில் காவிரி டெல்டா பாசனத்திற்காக ஆண்டுதோறும் ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு அணையில் போதிய நீர் இல்லாததால் திட்டமிட்டபடி தண்ணீர் திறக்கப்படவில்லை. இதற்கிடையே, காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் திட்டதில் கர்நாடகா அரசு தொடர்ந்து உறுதியாக உள்ளது.

    Advertisement

    இத்திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு கடும் எதிர்பபு தெரிவித்து வருகிறது. மேலும், மேகதாது அணை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதோடு மட்டுமல்லாமல் காவிரி விவகாரத்தில் புதிய நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக சட்டப் பேரவையில் முதல்வர் விஜய் தீர்மானம் கொண்டு வந்தார். அந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

    அண்மையில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டங்களிலும், ஜூன் மாதத்திற்கான தமிழகத்தின் பங்கான 9.91 டி.எம்.சி. நீரை திறந்துவிட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு வலியுறுத்தியது. ஆனால், குடிநீர் தேவைக்கு போதுமான அளவு மட்டுமே தண்ணீர் இருப்பதாகவும், மழை குறைவு காரணமாக தமிழகத்திற்கு நீர் திறக்க இயலாது என்றும் தெரிவிக்கப்பட்டது.

    Advertisement

    இதனால், காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டங்களில் தமிழகத்தின் கோரிக்கைகள் தொடர்ந்து முன்வைக்கப்பட்டாலும், கர்நாடகா அவற்றை ஏற்க மறுக்கும் நிலை நீடித்து வருகிறது.

    பாசனத்திற்கு தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாது என்று கர்நாடக அரசு திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. இந்நிலையில், காவிரி நதிநீர் பங்கீடு குறித்தும், மேகதாதுவில் அணை கட்டுவது குறித்தும் விவாதிப்பதற்காக கர்நாடக அரசின் நீர்ப்பாசன துறை அதிகாகிரகளுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்நிலையில், மேகதாது அணை விவகாரம் தொடர்பாக முதல்வர் விஜய் ஆகஸ்ட் 3 ஆம் தேதி கர்நாடகம் செல்லவுள்ளதாக அமைச்சர் வினோத் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    இதுதொடர்பாக வேளாண் துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கர்நாடாக மாநிலத்தில் வரும் ஆகஸ்ட் 3 ஆம் தேதி நடைபெறவுள்ள ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் விஜய் பங்கேற்கவுள்ளார். இந்தக் கூட்டத்தில் தமிழகத்திற்கு தர வேண்டிய தண்ணீரை காவிரியில் திறக்க வலியுறுத்தப்படும். மேகதாது அணையை தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது. அது நமது உரிமை என்று கூறினார்.

    English Summary

    Tamil Nadu Chief Minister Vijay is set to participate in the talks regarding the Mekedatu dam issue, scheduled to be held in Karanataka on August 3.