மேகதாது அணை விவகாரம்.. மத்திய அரசு பதிலால் முதல்வர் விஜய் அப்செட்.. பிரதமர் மோடிக்கு பறந்த கடிதம்

  • சென்னை: மேகதாது விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம் எழுதியுள்ளார். மத்திய நீர்வளத்துறை அமைச்சரின் பதில் அதிருப்தி தருகிறது. அந்த பதிலை திரும்பப் பெற வேண்டும் என கூறியுள்ளார். மேகதாதுவில் அணை கட்ட தமிழக அரசு அனுமதி தேவையில்லை என்று மத்திய அமைச்சர் கூறிய நிலையில் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.

    Advertisement

    மேகதாது விவகாரம் பூதாகரம் ஆகியுள்ள நிலையில் முதல்வர் விஜய் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக விஜய் கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    Advertisement

    தவறான பதிலை திரும்ப பெற வேண்டும்

    மேகதாது அணைக்கு எந்த அனுமதியும் தரக்கூடாது கர்நாடகா பிற கீழ்ப்பாசன மாநிலங்களின் ஓப்புதலை பெற தேவையில்லை என்று மத்திய அமைச்சர் கருத்து தெரிவித்துள்ளார். அவருடைய பதில் அதிருப்தி அளிக்கிறது. நாடாளுமன்றத்தில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் அளித்த தவறான பதிலை திரும்ப பெற வேண்டும்.

    சட்டப்பூர்வ உண்மைகள், கீழ்ப்பாசன மாநிலங்களின் உரிமைகளை மதிக்காமல் பதில் அளிக்கப்பட்டுள்ளது. கீழ்ப்பாசன மாநிலங்களுக்கு செல்லும் நீரின் அளவை பாதிக்கும் திட்டத்தை ஒப்புதல் இன்றி செயல்படுத்த முடியாது. கடைமடை மாநில அனுமதியின்றி மேலே உள்ள மாநிலம் அணை கட்ட முடியாது.

    Advertisement

    உரிமை பாதுகாக்கப்பட வேண்டும்

    காவிரி என்பது வெறும் நீர் ஆதாரம் மட்டுமில்லை. லட்சக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரம். எனவே பிரதமர் மோடி உடனே தலையிட வேன்டும். மேகதாது அணை திட்டத்துக்கு எந்த வித சட்டப்பூர்வ அல்லது நிர்வாக அனுமதியும் வழங்கக் கூடாது.

    முழுமையான தொழில் நுட்ப, சட்டப்பூர்வ ஆய்வுக்கு பிறகே இத்திட்டம் குறித்து முடிவு எடுக்கப்பட வேண்டும். காவிரி வடி நில மாநிலங்களின் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும். தமிழ்நாட்டுக்கான நீர் வரத்து சீராக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்" என்று விஜய் கடிதம் எழுதியுள்ளார்.

    English Summary

    CM Vijay has written to PM Modi regarding the Mekedatu issue. He has expressed dissatisfaction with the response from the Union Minister for Water Resources and has called for the withdrawal of that response. Vijay wrote the letter after the Union Minister stated that the Tamil Nadu government's permission is not required to construct the dam at Mekedatu.