மேகதாது அணை! புதிய நடுவர் மன்றத்தை அமைக்க விஜய்க்கு உதயநிதி கோரிக்கை

  • சென்னை: காங்கிரஸ் எங்களுடன் கூட்டணியில் இருந்த போது கூட கர்நாடகா காங்கிரஸ் அரசை முதல்வராக இருந்த ஸ்டாலின் எதிர்த்துள்ளார் என்ற மேகதாது அணை விவகாரத்தில் முதல்வர் கொண்டு வந்த தனித்தீர்மானத்தை ஆதரித்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்திருந்தார். மேலும் புதிய நடுவர் மன்றத்தை அமைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

    Advertisement

    இதுகுறித்து அவர், "மேகதாதுவில் அணை கட்டப்படக் கூடாது என்பதே திமுகவின் உறுதியான நிலைப்பாடு.

    Advertisement

    மேகதாது விவகாரத்தில் தமிழக உரிமை பறிபோக அனுமதிக்கக் கூடாது என்பதே நமது எண்ணமாக இருக்கிறது. மேகதாது அணை விவகாரத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பல்வேறு சட்ட போராட்டங்களை நடத்தியிருந்தார்.

    எங்கள் கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இருந்த போதிலும் முதல்வராக இருந்த முக.ஸ்டாலின் கர்நாடகா காங்கிரஸ் அரசை எதிர்த்து பல்வேறு தீர்மானங்களை கொண்டு வந்தார்.

    திமுக அரசிலும் மேகதாது அணைக்கு எதிராக தீர்மானத்தை கொண்டு வந்தார். அது போல் தற்போது முதல்வர் விஜய்யும் ஒரு தீர்மானத்தை கொண்டு வந்திருக்கிறார். அதை திமுக மனதார வரவேற்கிறோம்.

    Advertisement

    காவிரி விவகாரத்தில் எங்கள் கட்சித் தலைவர்களும் எங்கள் தலைமையிலான அரசுகளும் எடுத்த பல்வேறு நடவடிக்கைகள் குறித்து முதல்வருக்கும் இந்த சட்டசபைக்கும் தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன். புதிய நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்பதை தீர்மானத்தில் சேர்க்க வேண்டும்.

    அணை திட்டத்திற்காக ரூ 1000 கோடி கர்நாடக அரசு ஒதுக்கியதை கண்டித்து இதே அவையில் தீர்மானம் நிறைவேற்றியது அப்போதைய திமுக அரசு. திமுக அரசின் தொடர் முயற்சியால் மேகதாது அணை விரிவான திட்ட அறிக்கை, நீர்வள அமைச்சகத்தில் இருந்து திரும்ப அனுப்பப்பட்டது.

    திமுக அரசு இருந்தவரை விரிவான திட்ட அறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் தரவில்லை. மேட்டூர் அணை உரிய காலத்தில் திறக்கப்படவில்லை. அடுத்த காவிரி ஆணைய கூட்டத்தில் தமிழ்நாடு அரசு உறுதியாக பேசி, நமக்கான நீர் பங்கீட்டை பெற வேண்டும்.

    Advertisement

    மேகதாது விவகாரத்தில் தமிழ்நாடு அனைத்து கட்சி குழுவினரும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த தனித் தீர்மானத்தை பிரதமரிடம் சென்று வழங்க வேண்டும். இவ்வாறு பேசினார் உதயநிதி.

    English Summary

    Supporting the special resolution brought by the Chief Minister on the Mekedatu dam issue, Udhayanidhi Stalin stated that Chief Minister Stalin had opposed the Karnataka Congress government’s stand even when Congress was part of the alliance. He also urged the formation of a new tribunal to safeguard Tamil Nadu’s rights in the Cauvery water dispute.