மேகதாது விவகாரம்.. கர்நாடக அரசை கண்டித்து தேமுதிக, கம்யூனிஸ்ட் போராட்டம்

  • சென்னை: மேகதாதுவில் அணை கட்டுவதற்கு கர்நாடகா அரசு தீவிரம் காட்டி வருகிறது. மேலும் காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடவும் கர்நாடகா மறுத்து வருகிறது. இதனால் இரு மாநிலங்களிலும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த விவகாரத்தில் கர்நாடகா மற்றும் மத்திய அரசுகளை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் தேமுதிக சார்பில் போராட்டம் நடைபெற்றது.

    Advertisement

    காவிரி விவகாரம் தமிழகம், கர்நாடகா மாநிலங்களில் பெரும் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்திற்கு தண்ணீர் இல்லை என கர்நாடகா முதலமைச்சர் டி.கே சிவகுமார் திட்டவட்டமாக கூறியுள்ளார். தமிழக முதலமைச்சர் விஜய் கர்நாடகா சென்று பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டார். ஆகஸ்ட் 13 ஆம் தேதி தலைமை செயலாளர் உள்ளிட்ட பெரிய குழுவினருடன் சென்று சுமூகமாக பேச்சுவார்த்தை நடத்த விஜய் திட்டமிட்டார்.

    Advertisement

    கர்நாடகாவில் போராட்டம்

    இதற்கு தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். மறுபக்கம் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடக்கூடாது என்பதை கண்டித்து, கர்நாடகாவின் பல்வேறு பகுதிகளில் கன்னட அமைப்புகள், விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள ஜனநாயகன் படம் வெளியிடப்பட்டுள்ள திரையரங்குகளை முற்றுகையிட்டு, போஸ்டரை கிழித்து போராட்டம் நடத்துகிறார்கள். இதனால் பல இடங்களில் ஜனநாயகன் படக்காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.

    கர்நாடகாவில் பதற்றமான சூழல் நிலவுவதால், விஜய் இப்போதைக்கு கர்நாடகா வர வேண்டாம். உரிய சூழல் வரும்போது சந்திக்கலாம் என்று கர்நாடகா முதலமைச்சர் சிவக்குமார் கூறியுள்ளார். தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடக்கூடாது என்பதை வலியுறுத்தி கர்நாடகாவில் வருகிற 13 ஆம் தேதி, ஒரு நாள் முழு அடைப்பு போராட்டத்துக்கு கன்னட அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன. காவிரி விவகாரத்தில் மெத்தனமாக செயல்படும் தவெக அரசை கண்டித்து திமுக நாளை மறுநாள் போராட்டம் நடத்தவுள்ளது.

    Advertisement

    தமிழகத்திலும் தீவிரம்

    இந்நிலையில் மேகதாது விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு முழுவதும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேகதாதுவில் அணை கட்ட, கர்நாடக அரசனை மத்திய அரசு அனுமதிக்க கூடாது என்று வலியுறுத்தி பேராட்டம் நடைபெற்றது. அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி காவரி பிரச்னையில் ஒற்றுமையுடன் தீர்வு காண இந்திய கம்யூனிஸ்ட் கோரிக்கை வைத்துள்ளனர்.

    இதேபோல மேகதாது விவகாரத்தில் கர்நாடகா அரசு மற்றும் மத்திய அரசனை கண்டித்து தேமுதிக சார்பில் தமிழக - கர்நாடக எல்லையான தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கலில் தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடாததை கண்டித்தும், விவசாயிகளின் வாழ்வாதாத்தை பாதுகாக்க வலியுறுத்தியும் போராட்டம் நடைபெற்றது. இதில், பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு காவிரி நீரை வழிபட்டார். மேலும், தனது தொண்டர்கள் மீது காவிரி நீரை தீர்த்தமாக தெளித்தார்.

    English Summary

    Mekedatu dam, Cauvery water issue creating tension among Tamilnadu and Karnataka. DMDK and Communist party of India to hold protest against Karnataka government today.