ஓசூர் - கர்நாடகா இடையே மெட்ரோ ரயில் திட்டம்.. பட்ஜெட்டில் குட் நியூஸ்! தீவிரம் காட்டும் தமிழக அரசு

  • சென்னை: கர்நாடக மாநிலம் பொம்மச்சந்திராவில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வரை மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவதற்கு மத்திய அரசு மற்றும் கர்நாடக அரசு ஆகிய இரண்டு அரசுகளுடன் இணைந்து தமிழக அரசு முன்னெடுத்து வருகிறது என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    தவெக அரசின் முதல் பட்ஜெட்டை தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன் இன்று தாக்கல் செய்தார். அப்போது அவர் மெட்ரோ ரயில் திட்டங்கள் தொடர்பாகவும் பேசினார். குறிப்பாக ஓசூர் முதல் கர்நாடகாவின் பொம்மச்சந்திரா வரையிலான மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முயற்சிக்கும் என்று தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-

    Advertisement

    மூன்று மெட்ரோ ரயில் திட்டங்கள்

    சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 118.9 கி.மீ. நீளத்திலான மூன்று வழித்தடங்களைக் கொண்ட கட்டம்-IIன் பணிகள் 63,246 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. பூந்தமல்லி புறவழிச்சாலை முதல் போரூர் சந்திப்பு வரையிலான தடத்தை, ஏற்கெனவே உள்ள வடபழனி மெட்ரோ நிலையத்துடன் இணைக்கப்படும் வகையில் 14.64 கி.மீ. நீளத்திலான, 11 மெட்ரோ இரயில் நிலையங்களைக் கொண்ட கட்டம்-II-ன் முதல் பகுதி, விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காகத் திறந்து வைக்கப்படவுள்ளது.

    மாநில அரசால் பரிந்துரைக்கப்பட்ட பின்வரும் மெட்ரோ ரயில் திட்டங்கள் இந்திய அரசின் தீவிர பரிசீலனையின் கீழ் உள்ளன.

    Advertisement

    * சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரை.
    * ஆவடி வழியாக கோயம்பேடு முதல் பட்டாபிராம் வரை.
    * திருப்பெரும்புதூர் வழியாக பூந்தமல்லி முதல் சுங்குவார்சத்திரம் வரை

    ஓசூர் - பொம்மச்சந்திரா மெட்ரோ ரயில் திட்டம்

    மேற்குறிப்பிடப்பட்டுள்ள கூடுதல் மெட்ரோ ரயில் வழித்தடத் திட்டங்களுக்கு இந்திய அரசு விரைவான ஒப்புதல் வழங்குவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் துறையால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    மேலும், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரிலிருந்து கர்நாடகா மாநிலம் பொம்மசந்திரா வரையிலான மெட்ரோ ரயில் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு ஒன்றிய அரசு மற்றும் கர்நாடக அரசு ஆகிய இரண்டு அரசுகளுடனும் இணைந்து தமிழ்நாடு அரசு முன்னெடுத்து வருகிறது" என்று கூறினார்.

    Advertisement

    பயணிகள் எதிர்பார்ப்பு

    ஓசூரில் உள்ள தொழிற்சாலைகளுக்கு கர்நாடகாவில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் தமிழ்நாட்டுக்கு வந்து செல்கிறார்க்ள். அதேபோல, பெங்களூரில் உள்ள ஐடி நிறுவனங்களுக்கு தமிழ்நாட்டில் இருந்து தினசரி ஆயிரகணக்கானவர்கள் சென்று வருகிறார்கள். இதனால் இந்த மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டால் இரு மாநில பயணிகளுக்கும் பெரிதும் கிடைக்கும் என்பதால் பயணிகள் மத்தியில் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

    கர்நாடக அரசு எதிர்ப்பு

    ஓசூர் - பெங்களூர் இடையே 40 கிமீ தொலைவு உள்ளது. சாலை வழியாக கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவுவதால் மெட்ரோ ரயில் வந்தால் விரைவாக சென்று வர முடியும். அதே நேரத்தில், பெங்களூர் - ஓசூர் இடையே மெட்ரோ ரயில் திட்டம் தொழில் நுட்ப காரணமாக சாத்தியமில்லை என மெட்ரோ நிர்வாகம் கர்நாடகா அரசிடம் அறிக்கை வழங்கியதாக கடந்த ஆண்டு தகவல் வெளியாகியிருந்தது.

    Advertisement

    அதுமட்டுமின்றி இரு மாநிலங்களை இணைக்கும் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு கர்நாடாகாவில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன. இந்த மெட்ரோ இணைப்பினால் தமிழ்நாடே அதிக பலன் அடையும் என்றும், ஓசூருக்கு ஏற்கனவே பல தொழிற்சாலைகள் சென்று கொண்டிருக்கின்றன. நேரடி இணைப்பு வந்தால், தொழில்துறை முதலீடை ஓசூரை நோக்கி மேலும் விரைவுபடுத்தக்கூடும் என்று கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

    English Summary

    Metro Rail Project Between Hosur and Karnataka: The budget has announced that the Tamil Nadu government is taking steps to implement a metro rail project connecting Bommasandra in Karnataka to Hosur in Krishnagiri district, in collaboration with both the Central government and the Karnataka government.