சென்னை: பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரயில் வழித்தடம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி மற்றும் தமிழக முதல்வர் விஜய் இந்த திட்டத்தினை தொடங்கி வைத்தனர். புதிய வழித்தடத்தில் முதற்கட்டமாக 11 நிலையங்களில் மெட்ரோ ரயில் நின்று செல்லும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த ரயிலுக்கான கட்டண விவரம் தற்போது வெளியாகியுள்ளது. பூந்தமல்லியில் இருந்து வடபழனி வரை செல்ல ரூ.40 கட்டணம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் மெட்ரோ ரயில்கள் முக்கிய போக்குவரத்து அமைப்பாக உள்ளது. போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொள்ளாமல் செல்ல வேண்டிய இடத்திற்கு திட்டமிட்ட நேரத்தில் சரியாக செல்ல முடியும் என்பதால் சென்னையில் பயணிக்கும் அனைத்து தரப்பு பயணிகளின் தேர்வாக மெட்ரோ ரயில்கள் உள்ளன.
இதனால், சென்னை மெட்ரோ ரயில்களில் பயணிக்கும் பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பயணிகளின் வசதிகளை கருத்தில் கொண்டு மெட்ரோ ரயில் நிர்வாகவும் மெட்ரோ வழித்தடத்தை விரிவுப்படுத்தி வருகிறது. அந்த வகையில், பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரயில் வழித்தடம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி மற்றும் தமிழக முதல்வர் விஜய் இந்த திட்டத்தினை தொடங்கி வைத்தனர். போரூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் இதற்கான விழா நடைபெற்றது. பிரதமர் மோடியும் முதல்வர் விஜய்யும் ஒன்றாக பச்சைக்கொடியை ஆட்டி மெட்ரோ ரயில் ரயில் சேவையை தொடங்கி வைத்ததோடு அதில் ஏறி பயணிக்கவும் செய்தனர். புதிய வழித்தடத்தில் முதற்கட்டமாக 11 நிலையங்களில் மெட்ரோ ரயில் நின்று செல்லும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த ரயிலுக்கான கட்டண விவரம் தற்போது வெளியாகியுள்ளது. அதன் விவரம் வருமாறு:- சென்னை பூந்தமல்லி புறவழிச்சாலை மெட்ரோ டூ பூந்தமல்லி பேருந்து நிலையம் செல்ல ரூ.10 கட்டணம் ஆகும். பூந்தமல்லியில் இருந்து வடபழனி வரை செல்ல ரூ.40 கட்டணம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பூந்தமல்லி அரசு மருத்துவமனை மெட்ரோ அய்யப்பன்தாங்கல் மெட்ரோமோடி, விஜய் தொடங்கி வைத்தனர்
கட்டண விவரம்:
ரூ.20 கட்டணம்
கரையான்சாவடி மெட்ரோ
குமணன்சாவடி மெட்ரோ
காட்டுப்பாக்கம் மெட்ரோரூ.30 கட்டணம்:
தெள்ளியரகரம் மெட்ரோ
போரூர் புறவழிச்சாலை மெட்ரோ
போரூர் சந்திப்பு மெட்ரோ.