திறக்கப்படாத மேட்டூர் அணை! அரிசி விலைக்கு உயர்வுக்கு மேற்காசிய போர்தான் காரணமாம்! - அமைச்சர் வெங்கடரமணன்

  • சென்னை: கர்நாடகாவிலிருந்து போதுமான அளவுக்கு தண்ணீர் திறக்கப்படாததால், மேட்டூருக்கு நீர் போதுமான அளவுக்கு கிடைக்கவில்லை. எனவே மேட்டூர் நீரை நம்பியிருந்த டெல்டா மாவட்டங்கள் தற்போது வறட்சியில் பாதிக்கப்பட்டிருக்கின்றன. சூழல் இப்படி இருக்கையில் மேற்காசிய போர்தான் அரிசி விலை உயர்வுக்கு காரணம் என்று உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அமைச்சர் வெங்கடரமணன் கூறியிருக்கிறார்.

    Advertisement

    சட்டமன்றத்தில் திமுக உறுப்பினர் சக்கரபாணி பேசுகையில், தவெக அரசு பொறுப்பேற்ற பின், அரிசி விலை கிலோவுக்கு 10 ரூபாய்க்கு மேல் உயர்ந்திருக்கிறது. இதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

    Advertisement

    இதையடுத்து அவருக்கு பதிலளித்து பேசிய அமைச்சர் வெங்கடரமணன், மேற்காசிய போர் காரணமாக பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது, விலையும் உயர்ந்தது. இதனால் நெல் உற்பத்தி அதிகரித்த போதிலும் அரிசி விலை கடந்த மார்ச் மாதத்திலிருந்து கிலோவுக்கு ரூ.6-7 வரை உயர்ந்திருக்கிறது.

    அரிசி விலை தமிழகத்தில் மட்டும் உயரவில்லை. நம் அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திராவிலும் உயர்ந்திருக்கிறது. தமிழகத்தில் தேவையான அளவு அரிசி கையிருப்பில் உள்ளது. அரிசி தட்டுப்பாடு எங்கும் இல்லை. அரிசி விலையை கட்டுக்குள் வைத்திருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்று கூறியிருக்கிறார்.

    Advertisement

    உண்மை காரணம் என்ன?

    டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி முற்றிலுமாக பாதிக்கப்பட்டிருக்கிறது. வழக்கமாக மேட்டூரிலிருந்து ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறக்கப்படும். மேட்டூருக்கு தண்ணீர், கர்நாடகாவிலிருந்துதான் வர வேண்டும். கர்நாடகா தண்ணீரை திறக்கவில்லை. எனவே, போதுமான அளவுக்கு மேட்டூரில் தண்ணீர் இல்லை. 90 அடி தண்ணீர் நிரம்பினால்தான் மேட்டூரிலிருந்து தண்ணீர் திறக்கப்படும். குறுவை சாகுபடிக்கு தொடர்ந்து தண்ணீர் தேவை. 70-80 அடி தண்ணீர் மட்டுமே இருக்கிறது எனில்.. அந்த தண்ணீரை திறந்தால் கடைமடை வரை நீர் போகாது. இதானல் குறுவை சாகுபடி பாதிக்கப்படும்.

    தற்போது மேட்டூரில் 90 அடிக்கு தண்ணீர் இருக்கிறது. போதுமான அளவுக்கு தண்ணீர் வருவதும் வராததும் கர்நாடகாவின் கையில்தான் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    Mettur Dam: Due to insufficient release of water from Karnataka, Mettur is not getting enough water. Hence the delta districts which depended on Mettur water are now affected by drought. In this situation, the Minister of Food and Consumer Protection Venkataramanan has said that the war in West Asia is the reason for the rise in the price of rice.