Mettur Dam: மேட்டூர் அணையில் இன்று எவ்வளவு நீர் உள்ளது? கடந்த ஆண்டுகளில் இதே நாளில் இருப்பு எவ்வளவு?

  • சென்னை: கடந்த 2023 ஆம் ஆண்டுக்குப் பிறகு, மேட்டூர் அணையில் தற்போதுதான் நீர்மட்டம் குறைவாக உள்ளது. 2023ல் இதே ஜூலை 30 ஆம் தேதி இன்றைய அளவை விட குறைவாக நீர் இருப்பு இருந்தபோதிலும் டெல்டா பாசனத்திற்காக நீர் திறந்துவிடப்பட்டிருந்தது. ஆனால், தற்போது காவிரியில் நீர் திறக்க கர்நாடகா மறுத்து வருவதால், மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக நீர் தீறக்கப்படவில்லை. கடந்த ஆண்டுகளில் இதே நாளில் மேட்டூர் அணையில் எவ்வளவு நீர் இருப்பு இருந்தது எனப் பார்க்கலாம்.

    Advertisement

    ஆண்டுதோறும் மேட்டூர் அணை ஜூன் மாதம் 12 ஆம் தேதி பாசனத்திற்காக திறக்கப்படும். மேட்டூர் அணையில் திறக்கப்படும் நீர், டெல்டா பாசன விவசாயத்திற்கும், டெல்டா மாவட்டங்களின் குடிநீர் தேவையையும், நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தவும் பயன்படும். ஆனால் இந்த ஆண்டு இதுவரை மேட்டூர் அணை திறக்கப்படாததால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் குடிநீர் தட்டுப்பாடும் நிலவுகிறது.

    Advertisement

    மறுக்கும் கர்நாடகா

    மேட்டூர் அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக 1,000 கன அடி நீர் மட்டுமே தற்போது திறக்கப்படுகிறது. அது, திருச்சி மாவட்டம் முக்கொம்புவிற்கு 90 முதல் 100 கனஅடி அளவாக மட்டுமே வருகிறது. ஏற்கெனவே, காவிரியும் கொள்ளிடமும் வறண்டு போய் உள்ள சூழலில் மழைப்பொழிவும் இல்லை. இதனால் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது.

    தமிழகத்திற்கு தினமும் 3,500 கன அடி வீதம் அடுத்த 15 நாட்களுக்கு காவிரியில் தண்ணீர் திறக்கும்படி கர்நாடக அரசுக்கு, காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு உத்தரவிட்டது. ஆனால், தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க முடியாது என கர்நாடக அரசு மறுத்து வருகிறது. இதனால், மேட்டூர் அணையில் விவசாயத்திற்காக நீர் திறக்கப்படவில்லை.

    Advertisement

    இன்று மேட்டூர் அணை நிலவரம்

    இன்றைய தேதியில் மேட்டூர் அணையில் நீர் இருப்பு 73.82 அடியாக உள்ளது. நீர் இருப்பு 36.07 டி.எம்.சி அளவில் உள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெரியளவில் மழை இல்லாததால் அணைக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 54 கன அடியாகக் குறைந்துள்ளது. குடிநீர் மற்றும் பாசனத் தேவைகளுக்காக அணையிலிருந்து வினாடிக்கு 1,003 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

    2025 ஜூலை 30

    கடந்த ஆண்டு இதே ஜூலை 30 ஆம் தேதி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாக முழு கொள்ளளவை எட்டி இருந்தது. நீர் இருப்பு 93.47 டி.எம்.சி ஆக இருந்தது. கர்நாடகாவில் பெய்த கனமழையால் கிருஷ்ணராஜசாகர் (KRS) மற்றும் கபினி அணைகளில் இருந்து பெருமளவு உபரிநீர் திறக்கப்பட்டதால், மேட்டூர் அணை நிரம்பி வழிந்தது. அணைக்கு வரத்து அதிகமாக இருந்ததால் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 1.10 லட்சம் கன அடி வரை உயர்த்தப்பட்டது.

    Advertisement

    2024 ஜூலை 30

    கடந்த 2024 ஆம் ஆண்டு இதே ஜூலை 30 ஆம் தேதி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாக (முழு கொள்ளளவு) இருந்தது. நீர் இருப்பு 93.47 டி.எம்.சி அளவில் இருந்தது. 2024-ஆம் ஆண்டில் முதல்முறையாக ஜூலை 30 அன்று தான் மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது வரலாற்றில் 43-வது முறையாக இரண்டாண்டுகளுக்கு முன்பு இந்த நாளில் மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டி இருந்தது.

    2023 ஜூலை 30

    கடந்த 2023 ஆம் ஆண்டு இதே ஜூலை 30 ஆம் தேதி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 65.60 அடியாக இருந்தது. அன்றைக்கு நீர் இருப்பு, 29.03 டி.எம்.சி அளவில் இருந்தது. அந்த ஆண்டு பருவமழை பொய்த்த காரணத்தால் நீர்வரத்து வினாடிக்கு 11,342 கன அடியாக மட்டுமே இருந்தது. டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 14,000 கன அடி நீர் திறந்து விடப்பட்டது.

    Advertisement

    2022 ஜூலை 30

    கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை 30 ஆம் தேதி மேட்டூர் அணையின் நீர்மட்டம்: 120 அடி (முழு கொள்ளளவு) இருந்தது. நீர் இருப்பு 93.47 டி.எம்.சியாக இருந்தது. 2022-ஆம் ஆண்டு தென்மேற்கு பருவமழை மிகச் சிறப்பாகப் பெய்ததால், ஜூலை மாத இறுதியிலேயே அணை நிரம்பி 120 அடியை எட்டியிருந்தது. அணைக்கு வினாடிக்கு 22,845 கன அடி நீர் வந்துகொண்டிருந்த நிலையில், 21,999 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது.

    2021 ஜூலை 30

    கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை 30 ஆம் தேதி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 81.97 அடியாக இருந்தது. நீர் இருப்பு 43.94 டி.எம்.சி. கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதால் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 22,942 கன அடியாக உயர்ந்து, நீர்மட்டம் 81.97 அடியை எட்டி இருந்தது.

    English Summary

    The water level in the Mettur Dam is currently low—a situation not seen since 2023. Although water storage was lower on July 30, 2023, than it is today, water was nevertheless released for Delta irrigation at that time. Let us look at the water storage levels in the Mettur Dam on this same date in previous years.