Microsoft: 60 ஆயிரம் ஊழியர்களை கட்டம் கட்டும் மைக்ரோசாஃப்ட்! ஐடி ஊழியர்கள் கலக்கம்..என்ன நடந்தது?

  • சென்னை: உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக உள்ள மைக்ரோசாஃப்ட் நிறுவனம், சுமார் 60 ஆயிரம் பணியாளர்களை வீட்டுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளதாம். ஏஐ துறையில் அதிக முதலீடு செய்ய இருப்பதால் அதற்கான செலவுகளை ஈடுகட்டும் விதமாக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறதாம். வைஸ் பிரசிடண்ட் லெவல் மற்றும் அதற்கு கீழ் நிலையில் உள்ள பணியாளர்கள் இந்த விருப்ப ஓய்வு திட்டத்தில் விண்ணப்பிக்க தகுதி பெற்றவர்கள் என்று மைக்ரோசாஃப்ட் தெரிவித்துள்ளது.

    Advertisement

    ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு ஆதிக்கத்தால் பல்வேறு துறைகளிலும் வேலை வாய்ப்புகள் பறிபோக ஆரம்பித்துள்ளன. குறிப்பாக ஐடி துறையில், ஏஐ - வருகையால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    Advertisement

    60 ஆயிரம் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப

    எண்ட்ரி லெவல், மிட் லெவல் பணிகள் பலவற்றிலும் முன்னணி ஐடி நிறுவனங்களே ஆட்குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன. அமேசான், ஆரக்கிள் போன்ற டெக் நிறுவன ஜாம்பவான்களும் ஆட்குறைப்பை கையில் எடுத்து அதிர்ச்சியை கொடுத்தது. அந்த வரிசையில் தற்போது உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக உள்ள மைக்ரோசாஃப்ட் நிறுவனமும் ஆட்குறைப்பை கையில் எடுத்துள்ளது.

    ஏஐ துறையில் அதிக முதலீடு செய்ய இருப்பதால் அதற்கான செலவுகளை ஈடுகட்டும் விதமாக சுமார் 60 ஆயிரம் பணியாளர்களை வீட்டுக்கு அனுப்ப மைக்ரோசாஃப்ட் திட்டமிட்டுள்ளது. இதற்காக விருப்ப ஓய்வு திட்டத்தையும் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. அமெரிக்கா, கனடா, இந்தியா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளில் உள்ள அலுவலகங்களில் வைஸ் பிரசிடண்ட் லெவல் மற்றும் அதற்கு கீழ் நிலையில் உள்ள பணியாளர்கள் இந்த விருப்ப ஓய்வு திட்டத்தில் விண்ணப்பிக்க தகுதி பெற்றவர்கள் என்று மைக்ரோசாஃப்ட் தெரிவித்துள்ளது.

    Advertisement

    விருப்ப ஓய்வு திட்டம்

    டேட்டா செண்டர்கள், சேல்ஸ் மற்றும் மார்க்கெட்டிங் பிரிவில் பணியாற்றும் ஊழியர்களுக்கு இதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் செயல் துணைத் தலைவரும், தலைமை மனிதவள அதிகாரியுமான ஏமி கோல்மேன் ஊழியர்களுக்கு அனுப்பிய மெமோவில் குறிப்பிட்டு உள்ளதாவது:-

    Microsoft: ஏஐ-யால் கொத்தாக பறிபோகும் வேலை.. 4,800 பேரை வீட்டுக்கு அனுப்ப மைக்ரோசாஃப்ட் முடிவு!

    மாற்றங்களை நாம் அணுகும் விதத்தில் ஏற்பட்டுள்ள முக்கியமான முன்னேற்றத்தைப் பிரதிபலிக்கும் விதமாக விருப்ப ஒய்வு திட்டம் உள்ளது. ஊழியர்கள் முடிந்தவரை தங்களின் அடுத்தகட்ட வாழ்க்கையைத் தாங்களே தீர்மானிப்பதற்கான கூடுதல் வாய்ப்புகளை உருவாக்குவதே இதன் நோக்கம்" என்று தெரிவித்துள்ளார்.

    Advertisement

    7 சதவீதம் பேருக்கு

    நடப்பு ஆண்டில் மைக்ரோசாஃப்ட் அறிவிக்கும் இரண்டாவது விருப்ப ஓய்வு திட்டம் இதுவாகும். முன்னதாக கடந்த ஏப்ரல் மாதம், தனது நிறுவனத்தின் மொத்த எண்ணிக்கையில் சுமார் 7 சதவீதம் பேருக்கு இந்த விருப்ப ஓய்வு பிளானை அறிவித்தது. தற்போது அறிவித்து இருக்கும் எண்ணிக்கையானது நிறுவனத்தில் மொத்த ஊழியர் எண்ணிக்கையில் கிட்டத்தட்ட கால் பங்கு அளவு ஆகும்.

    மாதம் 85 ஆயிரம் சம்பளம்.. மத்திய அரசின் காப்பீட்டு நிறுவனத்தில் வேலை.. டிகிரி போதும்!

    மைக்ரோசாஃப்ட் ந்றுவனத்தில் உலக அளவில் 2,23,000 ஊழியகள் பணியாற்றி வருகிறார்கள். கடந்த ஆண்டு இறுதியில் 2,28,000 பேர் பணியாற்றி வந்தனர். டேட்டா செண்டர்கள், சிப்கள் உள்ளிட்ட ஏ.ஐ. உள்கட்டமைப்புகளை உருவாக்க மைக்ரோசாஃப்ட் மற்றும் பிற முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் பல லட்சம் கோடி டாலர்களை முதலீடு செய்து வருகின்றன. இந்த சூழலில்தான் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் மைக்ராசாப்ட் ஈடுபட்டுள்ளது.

    English Summary

    Microsoft, one of the world's leading companies, is reportedly planning to lay off approximately 60,000 employees. This move is intended to offset the costs associated with the company's significant investments in the field of AI.