காசிமேட்டில் நள்ளிரவு 12 மணிக்கு ஒலித்த சைரன்.. சென்னையில் வஞ்சிரம் மீன் பிரியர்களுக்கு பேரதிர்ச்சி?

  • சென்னை: மீன் இனப்பெருக்க காலத்திற்காகக் கடந்த 61 நாட்களாக அமலில் இருந்த ஆழ்கடல் மீன்பிடி தடைக்காலம் நேற்று நள்ளிரவுடன் நிறைவடைந்தது. இந்தத் தடையால் கடலுக்குச் செல்லாமல் துறைமுகங்களில் முடங்கிக் கிடந்த சுமார் 15000 விசைப்படகுகள், இன்று அதிகாலை முதல் மீண்டும் கடலுக்குள் மீன்பிடிக்க புறப்பட்டன. அந்தவகையில் சென்னை காசிமேடு மீனவர்களும், உற்சாகமாக மீன் வேட்டைக்கு சென்றுள்ளனர்.. இதனால் மீன் மார்க்கெட்டுகளில் மீன்களின் விலை கணிசமாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Advertisement

    மீன்களின் இனப்பெருக்க காலத்தை முன்னிட்டு, ஒவ்வொரு வருஷமும் கோடைகாலத்தில் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் 61 நாட்களுக்கு ஆழ்கடல் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்படுவது வழக்கம்.

    Advertisement

    இந்த ஆண்டுக்கான தடைக்காலம் கடந்த ஏப்ரல் 15-ம் தேதி தொடங்கி, ஜூன் 14-ம் தேதியுடன் நிறைவடைந்தது. இந்தத் தடைக்காலத்தினால் சென்னை காசிமேடு தொடங்கி கன்னியாகுமரி வரையிலான தமிழகம் மற்றும் புதுச்சேரியின் அனைத்துக் கடலோரப் பகுதிகளிலும், சுமார் 20000-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்குச் செல்ல முடியாமல் துறைமுகங்களிலேயே நிறுத்தப்பட்டிருந்தன.

    மீன்பிடி தடைக்காலம்

    தடைக்காலத்தின்போது விசைப்படகுகள் இயங்காததால், மீனவர்கள் தங்கள் படகுகளைப் பழுது பார்த்தல், வலைகளைச் சீரமைத்தல் மற்றும் இயந்திரங்களில் உள்ள கோளாறுகளைச் சரிசெய்தல் போன்ற பராமரிப்புப் பணிகளில் முழுமையாக ஈடுபட்டு வந்தனர். தடைக்காலம் நேற்று நள்ளிரவுடன் முடிவுக்கு வந்ததையடுத்து, இன்று அதிகாலையிலேயே மீனவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

    Advertisement

    இன்று அதிகாலையிலேயே சென்னை காசிமேடு, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, காரைக்கால், புதுக்கோட்டை, தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம் மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலிருந்து மீனவர்கள் தங்களது விசைப்படகுகளில் மீன்பிடிக்கத் தயாராகினர்.

    தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் இருந்து சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகளில், ஒரு லட்சத்திற்கும் அதிகமான மீனவர்கள் இன்று கடலுக்குள் சென்றுள்ளனர்.

    கடலுக்கு சென்ற மீனவர்கள்

    காசிமேடு போன்ற முக்கிய மீன்பிடித் துறைமுகங்களில், ஆழ்கடல் மீன்பிடிப்புக்காகத் தேவையான டீசல், ஐஸ் கட்டிகள், மீன்பிடி வலைகள் மற்றும் 15 நாட்களுக்குத் தேவையான உணவுப் பொருட்கள், குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை மீனவர்கள் தங்கள் படகுகளில் மிகுந்த ஆர்வத்துடன் ஏற்றிக்கொண்டு கடலுக்குள் சென்றனர். ஒரு படகுக்கு சுமார் 7 லட்சம் ரூபாய் வரை செலவு செய்து, ஆழ்கடல் மீன்பிடித் தொழிலுக்கான ஆயத்தங்களை மீனவர்கள் மேற்கொண்டிருந்தனர்.

    Advertisement

    கடந்த 2 மாதங்களாக விசைப்படகுகள் கடலுக்குச் செல்லாததால், மீன்களின் வரத்து மிகவும் குறைந்து விலை பல மடங்கு உயர்ந்திருந்தது. இப்போது தடைக்காலம் முடிந்து விசைப்படகுகள் மீண்டும் மீன்பிடிக்கத் தொடங்கியுள்ளதால், மீன் தட்டுப்பாடு படிப்படியாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அடுத்த சில நாட்களில் பல்வேறு வகையான மீன்களின் வரத்து மார்க்கெட்டுகளுக்கு பெருமளவு அதிகரிக்கும் என்பதால், மீன்களின் விலை கணிசமாகக் குறையும் என்று தெரிகிறது. இதனால் அசைவப் பிரியர்களும் ஏகப்பட்ட மகிழ்ச்சியில் உள்ளனர்.

    களை கட்டிய காசிமேடு சந்தை

    நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் மீனவர்கள் கடலுக்குச் சென்றிருப்பது, கடலோரப் பகுதிகளில் மீன்பிடித் தொழிலை மீண்டும் பெரிய அளவில் வேகம் பெறச் செய்துள்ளது. இதனால் துறைமுகங்களில் வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது.

    Advertisement

    தமிழகம் முழுவதும் மீன்பிடித் தொழில் மீண்டும் தொடங்கியிருப்பதால், மீனவர்களின் குடும்பங்களில் பெரும் மகிழ்ச்சி நிலவுகிறது. வரும் நாட்களில் சந்தையில் தட்டுப்பாடின்றி மீன்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பொதுமக்களும் உள்ளனர். மீண்டும் மீனவர்களின் படகுகளின் இரைச்சலால் தமிழகக் கடற்கரைகள் களைகட்டத் தொடங்கியுள்ளன.

    வஞ்சரம், சீலா, பாறை, சங்கரா, நெத்திலி

    கடந்த 2 மாதமாகவே விசைப்படகுகள் கடலுக்குச் செல்லாததால், மீன்களின் வரத்து மிகவும் குறைந்து விலை பல மடங்கு உயர்ந்திருந்தது. தற்போது தடைக்காலம் முடிந்து விசைப்படகுகள் மீண்டும் மீன்பிடிக்கத் தொடங்கியுள்ளதால், மீன் தட்டுப்பாடு படிப்படியாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த சில நாட்களில் சந்தைக்குப் பல்வேறு வகையான மீன்களின் வரத்து பெருமளவு அதிகரிக்கும் என்பதால், மீன்களின் விலை கணிசமாகக் குறையும் என்று தெரிகிறது.

    Advertisement

    இதனால் வஞ்சரம், சீலா, பாறை, சங்கரா மற்றும் நெத்திலி போன்ற மீன் வகைகள் அதிகளவில் சந்தைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மீன்கள் மீண்டும் வரத் தொடங்குவதால், அசைவப் பிரியர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

    English Summary

    Will Fish Prices Drop in Chennai? 15,000 Mechanised Fishing Boats Return to Sea from Kasimedu