சென்னை: சென்னையை அடுத்த நொளம்பூர் அருகே புலம்பெயர் தொழிலாளி ஒருவர், போதை இளைஞர்களால் கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பான சிசிடிவி காட்சி காட்சி வெளியாகி அதிர வைத்துள்ளது.
சென்னை அடுத்த நொளம்பூரில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளி அபிஜித் (25) என்பவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். கொல்லப்பட்ட அபிஜித், பணம் கொடுக்க மறுத்ததால் போதையில் இருந்த நான்கு இளைஞர்கள் மிகக் கொடூரமாக அவரைத் தாக்கி கொலை செய்து அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.
மேற்கு வங்க இளைஞர் கொலை தொடர்பாக 12 ஆம் வகுப்பு மாணவர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்து நொளம்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், புலம்பெயர் தொழிலாளியை 4 இளைஞர்கள் மிகக் கொடூரமான முறையில் தாக்கும் வீடியோ காட்சி வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதில் அந்த இளைஞர்களை அந்த வடமாநில தொழிலாளியை அடித்துக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடும் காட்சிகள் பதிவாகியுள்ளன. நாளை தமிழக சட்டசபையில் காவல்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற உள்ளது. இதில் முதல்வர் விஜய் பதில் அளிக்க உள்ள நிலையில் தலைநகர் சென்னையில் கொடூரக் கொலை சம்பவங்கள் அரங்கேறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.