3 முறை என்னாச்சு? ஆதவ் அர்ஜுனா கேட்ட கேள்வி.. கண்டுகொள்ளாமல் இருந்த உதயநிதி.. உடனே எழுந்த நேரு!

  • சென்னை: தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் காவிரி மற்றும் மேகதாது அணை விவகாரம் தொடர்பான விவாதங்கள் தொடர்ந்து காரசாரத்தை ஏற்படுத்தி வருகின்றன. மேகதாது அணை தொடர்பான மேல்முறையீட்டு வழக்குகளை மையமாக வைத்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா எழுப்பிய கேள்வியும், அதற்கு திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு அளித்த பதிலடியும் அவையில் பெரும் விவாதப் பொருளாக மாறியது.

    Advertisement

    3 முறை தள்ளுபடி செய்யப்பட்டது ஏன்? - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கேள்வி

    சட்டப்பேரவையில் மேகதாது விவகாரம் குறித்துப் பேசிய சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, திமுகவின் கடந்த கால சட்டப் போராட்டங்கள் குறித்து நேரடியாகக் கேள்வி எழுப்பினார்.

    Advertisement

    "கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் மேகதாது அணை விவகாரம் தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்குகளை உச்ச நீதிமன்றம் மூன்று முறை தள்ளுபடி செய்தது. ஏன் சரியான வாதம் வைக்கப்படவில்லை.

    தமிழக அரசு தோற்க என்ன காரணம்? இதற்கான சரியான காரணம் என்ன என்பதை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவைக்கு விளக்க வேண்டும்" என்று வலியுறுத்தினார். மேலும், எதிர்க்கட்சித் தலைவர் இதற்குப் பேரவையில் தெளிவான பதில் அளிக்க வேண்டும் என்றும் அவர் நேரடி நிபந்தனை வைத்தார்.

    உதயநிதி மௌனம்... குறுக்கே வந்த கே.என்.நேரு

    அமைச்சர் ஆதவ் அர்ஜுனா எழுப்பிய இந்தக் கேள்விக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உடனடியாக எந்தப் பதிலும் அளிக்காமல் அவரைக் கண்டுகொள்ளாமல் மௌனம் காத்தார். இருப்பினும், எதிர்க்கட்சி வரிசையில் இருந்து உடனடியாக எழுந்த முன்னாள் அமைச்சரும் திமுக மூத்த தலைவருமான கே.என்.நேரு, அமைச்சரின் கேள்விகளுக்குப் பதிலளித்துப் பேசினார்.

    Advertisement

    தாமதம் செய்யவில்லை.. வாழ்வாதாரப் பிரச்சனை! - கே.என்.நேரு பதில்

    அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் குற்றச்சாட்டிற்குப் பதிலளித்த கே.என்.நேரு, "மேகதாது அணை விவகாரத்தில் திமுக அரசு எந்தவொரு சூழலிலும் சட்டப் போராட்டங்களைத் தாமதப்படுத்தவில்லை. காவிரி நீர் உரிமை என்பது தமிழ்நாட்டின் லட்சக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்சனை. அந்தப் பிரச்சனையை முறையான மற்றும் சரியான வழியில் அணுகி, நாம் அனைவரும் ஒன்றிணைந்து எதிர்கொள்ள வேண்டிய நேரமிது" என்று சுட்டிக்காட்டினார்.

    காவிரி விவகாரத்தில் கடந்த காலச் சட்டப் போராட்டங்களின் பின்னணி மற்றும் தற்போதைய நிலைப்பாடு குறித்துப் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையே நடைபெற்ற இந்த நேருக்கு நேர் விவாதம், சட்டமன்றத்தின் கவன ஈர்ப்புத் தீர்மான விவாதத்தை மேலும் சூடேற்றியது.

    Advertisement

    தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன? - உதயநிதி கேள்வி

    முன்னதாக சட்டப்பேரவையில் மேகதாது அணை தொடர்பாகப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், "தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம் அரசு அமைந்த பிறகு, மேகதாது அண கட்டும் திட்டத்தில் இதுவரை இல்லாத வேகத்தில் கர்நாடக அரசு செயல்பட்டு வருகிறது. காவிரி உரிமை விவகாரத்தில் கர்நாடகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றுபட்டு நிற்கின்றன. ஆனால், தமிழ்நாட்டில் அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டக் கூட தவெக அரசு மறுத்து வருகிறது" என்று குற்றம் சாட்டினார்.

    தொடர்ந்து விவசாயிகள் விவகாரம் குறித்துப் பேசிய அவர், "தேர்தல் வாக்குறுதியில் விவசாயிகளுக்கு முழு பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று கூறிவிட்டு, இப்போது அரைகுறையாகக் கடனைத் தள்ளுபடி செய்தது ஏன்?" எனத் கேள்வி எழுப்பினார்.

    Advertisement

    அப்போது பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பான கேள்வியை கவன ஈர்ப்பு தீர்மானத்தின் போது பேச சபாநாயகர் அனுமதி மறுத்ததால் அவையில் சிறிது நேரம் பரபரப்பு நிலவி

    English Summary

    Minister Aadhav Arjuna Questions Opposition Leader Udhayanidhi in Assembly