திமுக கனவு கண்டாலும் ஆட்சிக்கு வரமுடியாது.. புஸ்ஸி ஆனந்த் அதிரடி பேச்சு.. அதிர்ந்த திமுக

  • சென்னை: சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. தவெக, திமுக இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு வருகிறது. திமுக மீது தவெகவும், தவெக மீது திமுகவும் பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார்கள். திமுக முன்னாள் அமைச்சர் நேரு கொடுத்த அறிவுரைக்கு, அமைச்சர் புஸ்ஸி இனி திமுக ஆட்சிக்கு வருவதை கனவிலும் நினைத்து பார்க்க முடியாது என்று அதிரடியாக பதில் கொடுத்தார்.

    Advertisement

    சட்டமன்றத்தில் பட்ஜெட் மானிய கோரிக்கை கூட்ட தொடர் நடைபெற்று வருகிறது. இன்று நீர்வளத்துறை மானியக் கோரிக்கை நடைபெற்றது. அப்போது திமுக அமைச்சர் நேரு பேசுகையில், "கட்டப்பட்ட வீடுகள் பழுதுபட்டுள்ளது. அதை சரியாக பழுதுபார்க்கவில்லை என்றனர். 1986 ஆம் ஆண்டில் இருந்து இந்திரா காந்தி காலத்தில் இருந்து 13,000 ரூபாய்க்கு வீடு கட்டும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

    Advertisement

    கனவு கண்டாலும் முடியாது

    பிறகு அது 3 லட்ச ரூபாயாக மாறியது. பயனாளிகளும், ஒப்பந்ததாரர்களும் இணைந்து கட்ட வேண்டும். தங்களிடம் உள்ள பணத்துக்கு ஏற்ப கட்டுகிறார்கள். சமத்துவபுரம் வீடுகளை பழுது பார்க்க நடவடிக்கை எடுத்தோம். தவெக அரசு 70,000 வீடுகளை ரூ. 5 லட்சம் செலவில் வழங்கப்பட்டுள்ளது. நீங்கள் 5 லட்ச ரூபாயில் கட்டியுள்ளீர்கள். அதை அமைச்சர் எல்லாம் பார்வையிட்டார். நாளைக்கு உங்களை பார்த்து நாங்கள், அது சரியில்லை என்று சொல்லி விடக்கூடாது. நன்றாக கட்டுங்கள்" என்றார்.

    இதற்கு சட்டமன்றத்தில் அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் அளித்த பதிலில், "பேரவையின் மூத்த உறுப்பினர், நீங்களாவது சரியாக கட்டுங்கள். குறை சொல்லாதபடி கட்டுங்கள் என கூறினார். நாங்கள் என்ன செய்தாலும் சரியாக தான் செய்வோம். நீங்கள் ஐயோ, குய்யோ என்று கதறினாலும் பயனில்லை. என்ன நீங்க. ஒரு விஷயம் நல்லா தெரிஞ்சுக்கோங்க. உறுப்பினர் எல்லாம் நல்லா கேளுங்கள். நீங்கள் கனவு கண்டால் கூட இனிமேல் நீங்க ஆட்சிக்கு வரமுடியாது என்பதை தெளிவாக சொல்லி கொள்கிறேன்.

    Advertisement

    திமுக எம்எல்ஏக்கள் எதிர்ப்பு

    புரியுதுங்களா. மாண்புமிகு உறுப்பினர் நீங்களாவது குறை சொல்ல முடியாதபடி கட்டுங்கள் என்று கூறினார். அதற்கு தான் நான் பதிலளித்தேன். குறை சொல்ல முடியாதளவுக்கு தரமாகத்தான் கட்டுவோம். அதுக்கு தான் இந்த 5 லட்ச ரூபாய். களத்தில் பார்த்து தான் சொல்கிறேன். நாங்கள் அரசியல்வாதிகள் இல்லை. மக்களுக்கு செய்ய வந்துள்ளோம். அதை சபையில் வந்து நீங்க பேசும்போது எப்படி பேச வேண்டுமென தெரியும். இங்க பாருங்கணே. மக்கள் கிட்ட போய் பாருங்க. நாங்கள் ஆட்சிக்கு வந்து 3 மாதங்கள் தான் ஆகிறது.

    நாங்கள் செல்கிற இடமெல்லாம், எங்க புள்ளையை பார்த்துக்கோ.. அண்ணனை பார்த்துக்கோ.. என் தம்பியை பார்த்துக்கோ என்று சொல்கிறார்கள். நாங்கள் யாரும் தவறு செய்ய மாட்டோம் என்பதை மீண்டும் மீண்டும் சொல்கிறேன். உங்கள் இஷ்டத்துக்கு எதையாவது பேசக்கூடாது" என்றார். அப்போது திமுக எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டனர். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    English Summary

    Responding to the advice given by former DMK Minister Nehru, Minister bussy anand retorted sharply that the DMK could not even dream of coming to power again.