சென்னை: தமிழக அமைச்சரவையில் மின்சாரம், சட்டம் மற்றும் சிறைத்துறை ஆகிய முக்கிய பொறுப்புகளை கவனித்து வரும் அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார், தற்போது பல்வேறு நிர்வாகக் குறைபாடுகள் மற்றும் சர்ச்சைகளின் மையமாக மாறியுள்ளார். அவர் பொறுப்பேற்ற பிறகு, அவரது துறைகளில் அடுத்தடுத்து நடக்கும் குளறுபடிகள் பொதுமக்கள் மத்தியிலும், அரசியல் வட்டாரத்திலும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன.
தமிழகத்தின் பல பகுதிகளில் அறிவிக்கப்படாத மின்தடை அன்றாடப் பிரச்சனையாக மாறியுள்ளது. கிராமப்புறங்கள் மட்டுமல்லாமல், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளிலும் பகல் மற்றும் இரவு நேரங்களில் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. இரவு நேரத்தில் மின்சாரம் தடைபடுவதால் முதியவர்கள், குழந்தைகள் மற்றும் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். மின்கட்டமைப்பு பராமரிப்பு மற்றும் மேலாண்மையில் போதிய கவனம் செலுத்தாததே இதற்கு முக்கிய காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். அதே நேரத்தில், அதிக விலைக்கு தனியார் நிறுவனங்களிடம் இருந்து மின்சாரம் வாங்குவது தொடர்பான டெண்டர் சர்ச்சைகளும் எதிர்க்கட்சிகளால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகின்றன. இதற்கு மின் வாரியம் மறுப்பு தெரிவித்தாலும், களத்தில் மின்தடை தீராத தலைவலியாகவே நீடிக்கிறது. நீதி மற்றும் சட்டத்துறையிலும் நிலைமை திருப்திகரமாக இல்லை. அரசு வழக்கறிஞர்கள் மற்றும் அரசு வழக்கறிஞர் குழுக்களை நியமிப்பதில் தகுதியை விட பணத்திற்கே முன்னுரிமை அளிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. பல லட்சம் ரூபாய் வரை லஞ்சம் பெறப்பட்டு பணியிடங்கள் நிரப்பப்படுவதாக உயர் நீதிமன்றம் வரை புகார்கள் சென்றிருப்பது, சட்டத்துறையின் வெளிப்படைத்தன்மையைக் கேள்விக்குறியாக்கியுள்ளது. விசாரணை நீதிமன்றங்களில் அரசு வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டதில் தவெக ஆட்சியில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறி, அதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை தீவிர விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஜெகன் ராஜ் என்பவர் தாக்கல் செய்த பொதுநல வழக்கினை விசாரித்த நீதிமன்றம் இந்த முக்கிய உத்தரவை வழங்கியுள்ளது. இந்த அதிரடி தீர்ப்பு ஆளும் தமிழக வெற்றிக் கழக அரசுக்கும், முதலமைச்சர் விஜய்க்கும் கடுமையான அரசியல் பின்னடைவாகவும் பெரிய அதிர்ச்சியாகவும் பார்க்கப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்ட நீதிமன்றங்கள் மற்றும் விசாரணை நீதிமன்றங்களில் அரசு வழக்கறிஞர்களாகப் பலரை நியமித்ததில் தகுதி, அனுபவம் மற்றும் சட்ட விதிகள் முறையாகப் பின்பற்றப்படவில்லை என்றும், இந்த நியமனங்களில் பெரும் பணப் பரிமாற்றம் மற்றும் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் ஜெகன் ராஜ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். குறிப்பாக, தகுதியான வழக்கறிஞர்களைப் புறந்தள்ளிவிட்டு, ஆளும் கட்சி செல்வாக்கு மற்றும் இடைத்தரகர்கள் மூலம் லட்சக்கணக்கில் பணம் கைமாறி நியமனங்கள் வழங்கப்பட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டன. கன்னியாகுமரி மாவட்ட அரசு வழக்கறிஞர் பதவிக்காக தவெக நிர்வாகிகள் சிலர் தரப்பில் பெருந்தொகை வசூலிக்கப்பட்டதாக மனுதாரர் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது. எனவே, இந்த நியமன முறைகேடு தொடர்பான புகார்கள் குறித்து தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை விரிவான மற்றும் சுதந்திரமான விசாரணை நடத்தி உண்மை நிலையை வெளிக்கொணர வேண்டும் என்று உத்தரவிட்டது. சட்டத்தை நிலைநாட்ட வேண்டிய துறையிலேயே இதுபோன்ற ஊழல் புகார்கள் எழுவது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சரின் கட்டுப்பாட்டில் உள்ள சிறைத்துறையின் செயல்பாடுகள் சமீபத்திய நாட்களில் உச்சகட்ட விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளன. சென்னை புழல் மத்திய சிறையில் இருந்து 2 கைதிகள் தப்பிய சம்பவம் அடங்குவதற்குள், தேனி மாவட்டம் தெக்கம்பட்டி கிளைச் சிறையிலிருந்து ஒரே நேரத்தில் 17 கைதிகள் தப்பி ஓடிய சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. அதிபாதுகாப்பு நிறைந்த சிறைகளில் இருந்து கைதிகள் சர்வசாதாரணமாகத் தப்புவது சிறைத்துறையின் பாதுகாப்புக் குறைபாட்டையே காட்டுகிறது. இச்சம்பவங்களைத் தொடர்ந்து சிறைக் காவலர்கள் சிலர் பணிநீக்கம் செய்யப்பட்டு, சிறைகளில் துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிடப்பட்டிருந்தாலும், சிறைத்துறையில் கண்காணிப்பு முற்றிலும் தளர்ந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. காவலர்களுக்கும் தப்பியோடிய கைதிகளுக்கும் இடையே தொடர்பு இருந்ததா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. மின்சாரம் இல்லாததால் மக்கள் அவதிப்படுவது ஒருபுறம், கைதிகள் தப்பி ஓடுவதால் பொதுமக்கள் அச்சமடைவது மறுபுறம் என அமைச்சரின் கீழ் இயங்கும் துறைகள் அனைத்தும் தொடர் சறுக்கல்களைச் சந்தித்து வருகின்றன. சட்டத்துறை நியமன ஊழல், சிறை உடைப்புகள் மற்றும் மின்தடை ஆகியவற்றை சுட்டிக்காட்டி, அமைச்சர் நிர்மல் குமாரை உடனடியாகப் பதவியிலிருந்து நீக்க வேண்டும் எனவும், சிறை உடைப்பு குறித்து உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளன. பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளான தடையில்லா மின்சாரம், சட்டம்-ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு ஆகிய அனைத்திலும் ஒரே நேரத்தில் எழுந்துள்ள இந்த குளறுபடிகள், அரசின் நற்பெயருக்கு பெரும் சவாலாக மாறியுள்ளன. இனியாவது சம்பந்தப்பட்ட துறைகள் விழித்துக் கொண்டு உடனடி நடவடிக்கைகளை எடுக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.இரவும் பகலும் தொடரும் மின்தடை
சென்னையின் முக்கிய பகுதிகளில் இன்று மின்தடை.. தமிழ்நாடு முழுவதும் பல மாவட்டங்களிலும் பவர் கட்!
அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் லஞ்சப் புகார்
வழக்கறிஞர்கள் பாதுக்காப்பு சட்டம்.. சட்டத்துறை அமைச்சர் சிடிஆர்.நிர்மல்குமாரின் புதிய அறிவிப்பு
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அமர்வு, விசாரணை நீதிமன்றங்களில் நடந்த இந்த வழக்கறிஞர் நியமனங்கள் மீது கடும் சந்தேகத்தையும் அதிருப்தியையும் பதிவு செய்தது. நீதிமன்றம் தனது கருத்துக்களைப் பதிவு செய்தபோது, அரசு வழக்கறிஞர் பதவி என்பது சாதாரணப் பணி அல்ல; அது பொதுமக்களுக்கும் ஏழை எளியவர்களுக்கும் நீதி பெற்றுத் தரும் மிக முக்கியமான பொறுப்பு. பணமும் லஞ்சமும் கொடுத்து இதுபோன்ற பொறுப்புக்கு வருபவர்கள் பொதுமக்களுக்கு எப்படி நியாயமான நீதியைப் பெற்றுத் தருவார்கள்? சட்டத்தை எப்படி நேர்மையாகப் பாதுகாப்பார்கள்?
அதிர வைக்கும் சிறை உடைப்புகள்
Prison Break: தேனி சிறை சம்பவம்! ஆட்டோவில் தப்பிச் செல்ல முயன்ற சிறை கைதியை மடக்கி பிடித்த தனிப்படை
அமைச்சர் பதவி விலக எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்