அமைச்சர் மனைவி அரசு பள்ளி டீச்சர்..வீட்டுக்கு பக்கத்தில் வேலை! அவருக்கு மட்டும் ட்ரான்ஸ்ஃபர் எப்படி?

  • சென்னை: தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் தற்போது ஒரு சர்ச்சையில் சிக்கி இருக்கிறார், அவரது மனைவி அரசு பள்ளி ஆசிரியையாக பணியாற்றி வரும் நிலையில் அமைச்சரின் வீட்டுக்கு அருகே உள்ள பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். தமிழகத்தில் ஆசிரியர் பணியிட மாறுதல் நடைபெறாத நிலையில் அமைச்சரின் மனைவிக்கு மட்டும் பணியிட மாறுதல் வழங்கப்பட்டது எப்படி? என கேள்வி எழுப்புகின்றனர் சக ஆசிரியர்கள்.

    Advertisement

    தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவராக கருதப்படுபவர் சிடிஆர் நிர்மல் குமார். தற்போது விஜய்யின் அமைச்சரவையில் டாப் 10 அமைச்சர்களின் ஒருவராக இருக்கிறார். தற்போது இவரது மனைவிதான் தற்போது சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்.

    Advertisement

    சென்னை அடுத்த பல்லாவரம் மறைமலை அடிகள் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் ஆசிரியையாக பணியாற்றி வந்திருக்கிறார் சிடிஆர் நிர்மால்குமாரின் மனைவி. தற்போது சிடிஆர் நிர்மல் குமார் அமைச்சராக பொறுப்பேற்று இருக்கும் நிலையில் சென்னை பசுமை வழிச் சாலையில் அவருக்கு இல்லம் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

    சிடிஆர் நிர்மல்குமார்

    இதனால் அவரது மனைவி பள்ளிக்கு சென்று வர சிரமம் ஏற்பட்ட நிலையில் திருவல்லிக்கேணி லேடி வெலிங்டன் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாற்றுப் பணி வழங்கப்பட்டிருக்கிறது. இதில் என்ன சர்ச்சை என விசாரித்த போது தான் சில தகவல்கள் கிடைத்தது. ஏற்கனவே தமிழ்நாடு முழுவதும் அரசு பள்ளி ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு மூலம் தான் பணியிட மாற்றம் செய்யப்படுவார்கள். இதற்காகவே எமிஸ் தளம் செயல்பாட்டில் உள்ளது.

    Advertisement

    அமைச்சர் மனைவி

    கடந்த ஜூன் மாதம் நடப்பு கல்வி ஆண்டு தொடங்கி நிலையில் பணியிட மாறுதல் கலந்தாய்வுகள் நீதிமன்ற உத்தரவு காரணமாக நிறுத்தப்பட்டிருக்கிறது. அதுமட்டுமில்லாமல் பொது மாறுதல் கலந்தாய்வு பணிகளும் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் பல்லாவரம் மறைமலை அடிகள் அரசு மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றிய நிர்மல் குமாரின் மனைவிக்கு மட்டும் திருவல்லிக்கேணி அரசு லேடி வெலிங்டன் பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு மாற்றுப் பணி வழங்கப்பட்டிருக்கிறது என்பதுதான் குற்றச்சாட்டு.

    ஆசிரியர்கள் புலம்பல்

    அது மட்டும் அல்லாமல் ஏற்கனவே அவர் பணியாற்றிய மறைமலை அடிகள் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் ஏராளமான மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். மேலும் மாணவர்களுக்கு தேவையான ஆசிரியர் பணியிடங்களும் இங்கு குறைவாகவே உள்ளது. இதனால் ஆசிரியர்கள் கூடுதல் வகுப்பு எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    Advertisement

    கூடுதல் பணிச்சுமை

    தற்போது அமைச்சரின் மனைவி வேறு பள்ளிக்கு மாற்றப்பட்டுள்ளதால் அந்த பணியிடத்திற்கு ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை என சொல்லப்படுகிறது. இதனால் சக ஆசிரியர்கள் கூடுதல் பணிச்சுமைக்கு ஆளாவதோடு மாணவர்களுக்கும் வகுப்படுப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அமைச்சரின் மனைவி என்ற ஒரே காரணத்திற்காகத்தான் அவர் பணியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளார் என குற்றச்சாட்டு எழுந்து உள்ள நிலையில் மற்ற ஆசிரியர்களுக்கும் பொது கலந்தாய்வு மூலம் பணியிட மாறுதல் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

    சர்ச்சை

    தமிழ்நாடு அரசின் முக்கியத்துவம் வாய்ந்த மின்சார துறையை சிடிஆர் நிர்மல் குமார் கவனித்து வருகிறார். ஏற்கனவே பாஜகவில் பணியாற்றிய அவர் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு அதிமுகவில் இணைந்தார். பின்னர் அண்ணாமலையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பாஜகவில் இருந்து வில்கி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். பின்னர் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற நிலையில் அமைச்சரவையில் டாப் 10 அமைச்சர்கள் பட்டியலில் அவர் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் அடிக்கடி அமைச்சர் சீட்டில் நிர்மல் குமார் சர்ச்சையில் சிக்கி வரும் நிலையில், தற்போது அவரது மனைவி குறித்து சர்ச்சை எழுந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    Minister CTR Nirmal Kumar's wife allegedly received a school transfer despite general teacher transfers remaining suspended.