சென்னை: தமிழக வெற்றிக்கழக ஆட்சி அமைந்து 60 நாட்களைக் கடந்து விட்ட பிறகும் விஜய்க்கு அவரது அமைச்சரவை சகாக்களால் தொடர்ந்து சிக்கல்கள் முளைத்து வருகிறது. கில்லி சரத்குமார், கீர்த்தனா என அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கிய நிலையில் தற்போது புதிய புயலைக் கிளப்பி இருக்கிறார் அமைச்சர் ஜெகதீஸ்வரி. என்ன நடந்தது? எதனால் விஜய் கோபத்தில் இருக்கிறார்? என்பது குறித்து தமிழக வெற்றிக்கழக வட்டாரத்தில் விசாரித்த போது சில தகவல்கள் கிடைத்தன.
கடந்த 2024 கட்சியை ஆரம்பித்த நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஆன விஜய் இரண்டே ஆண்டுகளில் ஆட்சியைப் பிடித்திருக்கிறார். 17 வது சட்டப்பேரவை அமைந்திருக்கும் நிலையில் முதல்வராக விஜய் பதவி ஏற்றிருக்கிறார்.
இதில் செங்கோட்டையனை தவிர அவரது அமைச்சரவையில் இருக்கும் அனைவருமே புது முகங்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தேர்தலில் வெற்றி பெற்று அமைச்சர் ஆனதும் பலரும் தங்களது சேட்டைகளை தொடங்கி இருக்கின்றனர்.
குறிப்பாக ராஜபாளையம் எம்எல்ஏ ஜெகதீஸ்வரி, சிவகாசி எம்எல்ஏ கீர்த்தனா, கில்லி சரத், விஜய் பாலாஜி உள்ளிட்டோர் அமைச்சர்களாக இருக்கின்றனர். ஆனால் அடுத்தடுத்து இவர்களுக்குள் பிரச்சனை வெடித்தது விஜய்க்கு சிக்கலை ஏற்படுத்தியது. விருதுநகர் மாவட்டத்தில் இரண்டு அமைச்சர்கள் இருக்கும் நிலையில் யார் பெரியவர் என்ற போட்டி கீர்த்தனாவுக்கும் ஜெகதீஸ்வரிக்கும் எழுந்தது. அரசு நிகழ்வுகளில் தனது பெயரை முன்னுரிமை உடன் இடம்பெறச் செய்யவில்லை என ஆட்சியரிடம் ஜெகதீஸ்வரி கோபப்பட்டது பெரிய பிரச்சனையானது. இதனால் ஜெகதீஸ்வரிக்கும் கீர்த்தனாவுக்கும் கருத்து வேறுபாடு என அரசியல் வட்டாரங்களில் தகவல் பரவிய நிலையில் செல்பி எடுத்து, "அடுத்த கட்டுக் கதைக்கு நல்ல அதிர்ஷ்டம் அமையட்டும்" என பதிவிட்டிருந்தனர். இதன் மூலம் தங்களுக்கு எந்தவித மோதலும் இல்லை என அவர்கள் கூறியதாகவும், இருவரும் சமாதானம் செய்து கொண்டதாக தகவல் வெளியானதால் அத்தோடு இந்த விவகாரம் முடிவுக்கு வந்தது. ஆனால் தற்போது திடீரென மற்றொரு சர்ச்சையில் சிக்கி இருக்கிறார் ஜெகதீஸ்வரி. தென்மாவட்டங்களில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையதாக சொல்லப்படும் பிரபல ரவுடி ராக்கெட் ராஜாவுடன் அமைச்சர் ஜெகதீஸ்வரி புகைப்படம் எடுத்துக் கொண்டதாக திடீரென சமூக வலைதளங்களில் ஒரு புகைப்படம் பரவியது. இதை அடுத்து ரவுடியுடன் அமைச்சருக்கு என்ன தொடர்பு என எதிர்க்கட்சியினர் சமூக வலைதளங்களில் அதனை பரப்பி கேள்வி எழுப்பி வந்தனர். இந்த நிலையில் இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள ஜெகதீஸ்வரி, தான் பத்திரிக்கையாளராக பணியாற்றிய காலத்தில் பல்வேறு நபர்களை சந்தித்து இருக்கிறேன். இது அப்போது எடுத்த படம். தற்போது அமைச்சரான பிறகு நான் யாரையும் சந்திக்கவில்லை என விளக்கம் அளித்திருக்கிறார். உண்மையில் ஜெகதீஸ்வரி பத்திரிக்கையாளராக இருந்து அமைச்சரானவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலியில், ஜெகதீஸ்வரியும் ராக்கெட் ராஜாவும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இப்போது எடுத்த புகைப்படத்தை பழைய புகைப்படம் எனக் கூறி சமாளிக்கிறார் என திமுகவினர் சொல்கின்றனர். இது தமிழக வெற்றி கழகத்திற்கும் பெரிய சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் ஜெகதீஸ்வரி மீது நடவடிக்கை பாயலாம் என்கின்றனர். ஏற்கனவே அரசு பள்ளியில் ரிலீஸ் வெளியீட்டு கீர்த்தனாவும் கண்டிப்புக்கு ஆளான நிலையில் தற்போது ஜெகதீஸ்வரி இரண்டாவது சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். இது மட்டுமல்லாமல் தமிழக வெற்றிக் கழக அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கும் அமைச்சர் கில்லி சரத்தும் ஐபிஎல் போட்டியை பார்த்தபோது வெள்ளை நிற பொருளை ஏடிஎம் கார்டு மூலம் போதை பொருள் போல பயன்படுத்தியதாக சமூக வலைதளங்களில் வீடியோக்கள் பகிரப்பட்டது. இதை அடுத்து திமுக அவர் அமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும் என திமுக வலியுறுத்தியதோடு மாணவரணி போராட்டத்திலும் குதித்தது. இந்த நிலையில் தனது மகனுக்கு உடல்நல குறைவு ஏற்பட்டிருந்த போது பாரசிட்டமல் மாத்திரையை பொடியாக்கி கொடுத்த காட்சியை தவறாக சித்தரித்து பரப்பி வருவதாக கூறினர். மேலும் கடற்கரை ஒன்றில் கையில் மதுபானத்துடன் அவர் நடந்து வருவது போன்ற காட்சியும் பரவியது. இது மட்டுமல்லாமல் விஜய் பாலாஜி என அடுத்தடுத்து தமிழக வெற்றி கழக அமைச்சர்கள் சர்ச்சைகளில் சிக்கி வருகின்றனர். தமிழக வெற்றிக்கழக அரசு பொறுப்பேற்று குறுகிய காலமே ஆகியிருக்கும் நிலையில் அமைச்சர்களை சுற்றி அடுத்தடுத்து சர்ச்சைகள் எழுவது ஆளும்கட்சிக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இதை அடுத்து அவர்களுக்கு கடிவாளம் போட முடிவெடுத்திருக்கிறார் விஜய் என்றும், சில அமைச்சர்களின் பதவி பறிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.தமிழக வெற்றிக் கழகம்
கீர்த்தனா
ஜெகதீஸ்வரி
ராக்கெட் ராகா
கண்டிப்பு
கில்லி சரத்
விஜய் பாலாஜி
விஜய் கோபம்