ரூ.1 லட்சம் கோடி முதலீடு.. தொழில்துறை சாதனையை சொல்லாமல் தவிர்த்த விஜய்.. அப்செட்டில் கீர்த்தனா!

  • சென்னை: முதல்வர் விஜய்யின் சுதந்திர தின உரையில் தொழில்துறையின் ரூ.1 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்த்தது தொடர்பாக பேசாதது விவாதமாகி இருக்கிறது. சுதந்திர தின உரையில் தொழில்துறை முதலீடுகள் சாதனையை விஜய் தவிர்த்ததால், அமைச்சர் கீர்த்தனா அப்செட்டாகி இருப்பதோடு, அதிகாரிகள் தனக்கு எதிராக இருப்பதாகவும் புலம்ப தொடங்கி இருக்கிறாராம்.

    Advertisement

    நாட்டின் 80வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்வர் விஜய் முதல்முறையாக தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தினார். முதல்வர் விஜய் கொடியேற்றுவதை பார்க்க அவரின் பெற்றோர், தோழி த்ரிஷா, அவரின் தாய் உமா கிருஷ்ணன் ஆகியோர் முதல் வரிசையில் அமர்ந்திருந்தனர்.

    Advertisement

    இதன்பின் விஜய் 12 நிமிடங்கள் சுதந்திர தின உரையை ஆற்றினார். அதில் தவெக ஆட்சியில் ஊழல் இல்லாத நிர்வாகத்தை நோக்கி நகர்ந்து வருவதாக அழுத்தமாக சொன்ன விஜய், 100 நாட்களில் தவெக ஆட்சியில் செய்யப்பட்ட சாதனைகளையும் பட்டியலிட்டார். அதில் விவசாயிகளுக்கான ரூ.134 கோடி சிறப்பு தொகுப்பு, பயிர்க்கடன் தள்ளுப்படி, காலை உணவு திட்டம் விரிவாக்கம், தங்க மோதிரம் திட்டம் ஆகியவை முக்கியத்துவம் பெற்றன.

    அதேபோல் அரசு சான்றிதழ்களை வாட்ஸ் அப்பில் பெறும் திட்டம், ஆன்லைன் மூலமாக பத்திரப்பதிவு திட்டம், அம்மா உணவகம், மதுவிலக்கு, கனிமவளம், போக்குவரத்து துறை, வருவாய்த்துறை என்று பல்வேறு துறைகளின் சாதனையை விஜய் பட்டியலிட்டார். ஆனால் சில நாட்களுக்கு முன்தான் ரூ.1 லட்சம் கோடி முதலீடு கொண்டு வரப்பட்டுள்ளதாக தவெக அரசு விளம்பரம் செய்து நிகழ்ச்சியை நடத்தியது.

    Advertisement

    அந்த சாதனை விஜய்யின் சுதந்திர தின உரையில் இடம்பெறவில்லை. இதனால் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா அப்செட்டாகி இருக்கிறார். தொழில்துறை சாதனைகளை விஜய் புறக்கணித்தது யதார்த்தமாக நடந்ததா அல்லது அதிகாரிகள் தனக்கு எதிரான ஏதேனும் திட்டத்தில் இருக்கிறார்களா என்று அமைச்சர் புலம்ப தொடங்கி இருக்கிறார்.

    ஏற்கனவே பட்ஜெட் கூட்டத்தொடருக்கு பின் தவெக அமைச்சரவையில் மிகப்பெரிய மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அந்த பட்டியலில் அமைச்சர் கீர்த்தனாவின் பெயரும் இருப்பதாக சொல்லப்படுகிறது. அவரால் தொழில் துறை போன்ற முக்கியத் துறையை சமாளிக்க முடியவில்லை என்று விஜய் கருதுகிறார். இதனால் கீர்த்தனா தரப்பு சோகத்தில் இருந்து வருவதாக சொல்லப்படுகிறது.

    English Summary

    Minister Keerthana Disappointed as CM Vijay Skips Industrial Investment Milestones in Independence Day Speech