சென்னை: தமிழ்நாடு சட்டசபையில் மாஜி அமைச்சர் எ.வ.வேலு தவெகவினரிடம் தொடர்ந்து இறங்கி செல்வதாக விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. முக்கியமாக தவெகவினர் சிலரை, அவர்களின் குடும்பத்தினரை உறவினர் என்று கூறி எ.வ.வேலு பேசுவதும் சர்ச்சையாகி உள்ளது.
தமிழ்நாடு சட்டமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரில் வழக்கமான விவாதங்களைத் தாண்டி, எதிர்பாராத ஒரு காரசாரமான உரையாடலும் சலசலப்பும் சட்டசபையை அதிர வைத்திருக்கிறது. நிதி மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதங்கள் நடைபெற்று வந்த சூழலில், அமைச்சர்களின் மொழி நடை குறித்த விமர்சனங்கள் எழத் தொடங்கி உள்ளன.
கடையநல்லூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான டி.எம். ராஜேந்திரன் பேசுகையில், நிதியமைச்சர் மரிய வில்சனின் உரையை நேரடியாகக் சுட்டிக்காட்டி விமர்சித்தார். பட்ஜெட் தாக்கல் செய்தபோது நிதியமைச்சர் தமிழில் பேசும்போது சில எண்களை தவறாக உச்சரிக்கிறார்... அளவுக்கு அதிகமாக ஆங்கில வார்த்தைகளைக் கலந்து பேசுகிறார், தமிழில் அவரின் இலக்கணம் தவறாக உள்ளது" என்று கூறிய அவர், நிதியமைச்சர் தமிழில் தெளிவாகப் பேசுவதற்குத் துறை சார்ந்த மற்ற அமைச்சர்களிடம் பயிற்சி எடுத்துக் கொள்ளலாம் என்றும் விமர்சனம் வைத்தார். இந்த விமர்சனத்தைக் கேட்டு கடும் ஆத்திரமடைந்த நிதியமைச்சர் மரிய வில்சன், உடனடியாகத் தன் இருக்கையிலிருந்து எழுந்து ஆவேசமாகப் பதிலடி கொடுத்தார். நான் சுமார் 25 முதல் 30 ஆண்டுகள் கல்வித் துறையில் பணியாற்றியவன். இதுவே எனது தனித்துவமான பேச்சு நடை. மற்றவர்களின் விமர்சனங்களுக்காக எனது இயல்பான ஸ்டைலை மாற்றிக்கொள்ள முடியாது.. எனக்கு ஒரு மொழியை எனது கிறிஸ்தவம் கற்றுக் கொடுத்துள்ளது; அது அன்பு மொழி, அமைதி மொழி, இரக்கத்தின் மொழி. இது பாதிபேருக்கு, எவ்வளவு தமிழ் படிச்சாலும் தெரியாது. நான் பைபிளை படித்திருக்கிறேன், பிறப்பால் கிறிஸ்தவன் என்று மிகக் காட்டமாகத் தெரிவித்தார். அவரது ஆத்திரத்தின் வெளிப்பாடாக, கையில் இருந்த மைக்கை கோபத்துடன் மேஜையில் பலமாகத் தட்டி வைத்துவிட்டு அமர்ந்தார். நிதியமைச்சரின் இந்த திடீர் ஆவேசச் செயல் சட்டசபையில் இருந்த உறுப்பினர்கள் இடையே பெரும் பரபரப்பையும் சலசலப்பையும் ஏற்படுத்தியது. அமைச்சரின் இந்த பேச்சால் சட்டசபையில் பதற்றம் தொற்றிக் கொண்ட தருணத்தில், மாஜி அமைச்சரும் திமுகவின் மூத்த தலைவருமான எ.வ.வேலு உடனடியாக களத்தில் இறங்கினார். சூழலின் தீவிரத்தைப் உணர்ந்து, நிதியமைச்சர் மரிய வில்சனை சமாதானப்படுத்தும் நோக்கில் மென்மையான குரலில் தலையிட்டார். நிதியமைச்சரை நோக்கிப் பேசிய எ.வ.வேலு, எங்கள் கட்சியின் மூத்த தலைவர்கள் அல்லது அனுபவமிக்க மூத்த உறுப்பினர்கள் யாராவது உங்களைப் பற்றி இப்படிப் பேசியிருந்தால், நீங்கள் இந்த அளவுக்குக் கோபப்படுவதில் ஒரு நியாயம் இருக்கிறது. ஆனால், இப்போது உங்களிடம் பேசியவர் சட்டமன்றத்திற்குப் புதிதாக வந்திருக்கும் நபர். முதல்முறையாகப் பேசும் 'கன்னிப்பேச்சு' பேசும் ஒரு எம்.எல்.ஏவுக்கு எதிராக நீங்கள் இவ்வளவு தூரம் உணர்ச்சிவசப்பட்டு கோபப்பட வேண்டிய அவசியம் இல்லை, என்று மிக சாதுரியமாக 'ஐஸ்' வைப்பது போலப் பேசி நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்தார். எ.வ.வேலுவின் இந்தச் தலையீட்டைத் தொடர்ந்து, சபாநாயகர் குறுக்கிட்டு, சட்டமன்ற விதிகளின்படி உறுப்பினர்கள் தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ தங்கள் கருத்துகளைப் பதிவு செய்ய முழு உரிமை உண்டு என்று தெளிவுபடுத்தி, விவாதத்தை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் சென்று அவையை அமைதிப்படுத்தினார். ஆனால் திமுகவினர் இடையே எ.வ.வேலுவின் இந்த செயல் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. அவர் ஆதவ் அர்ஜுனாவின் குடும்பத்தினரை நண்பர்கள், உறவினர்கள் என்று கூறுகிறார். சில தவெகவினரை தன்னுடைய பள்ளி நண்பர்கள், கல்லூரி நண்பர்கள் என்றெல்லாம் கூறுகிறார். அவரின் இந்த செயல் தவறு என்று விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. எ.வ.வேலு தவெகவினரிடம் தொடர்ந்து இறங்கி செல்வதாக விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. முக்கியமாக தவெகவினர் சிலரை, அவர்களின் குடும்பத்தினரை உறவினர் என்று கூறி எ.வ.வேலு பேசுவதும் சர்ச்சையாகி உள்ளது. இவர் ஏன் தவெகவினருக்கு ஐஸ் வைக்கிறார்.. தவெக அரசு உதயநிதி ஸ்டாலினை கைது செய்யும் அளவிற்கு செல்லும் போது.. எவ வேலு சீரியஸாக இல்லாமல் ஐஸ் வைப்பது ஏன் என்று விமர்சனங்கள் கட்சியினர் இடையே எழுந்துள்ளது. எவ வேலு வேண்டுமானால் இவர்களுடன் பர்சனலாக உறவு வைத்து இருக்கலாம்.. அரசியலுக்கு வெளியே இவர்களுக்கு நண்பர்கள் இருக்கலாம்.. ஆனால் சட்டசபையில் கட்சி உறுப்பினரை விட்டுக்கொடுத்துவிட்டு.. மாற்று கட்சியினரை சமாதானம் செய்ய கூடாது. முக்கியமாக மரிய வில்சன் செய்த செயல் தவறானது.. அவரை எதிர்க்காமல்.. சொந்த கட்சியினரை விட்டுக்கொடுத்து பேசுவது எப்படி சரியாகும் என்று திமுகவினர் விமர்சனங்களை வைக்கின்றனர்.எ.வ.வேலுவின் 'ஐஸ்' பேச்சு
தவெக தலைவரிடம் வேலு காட்டும் மென்மைப் போக்கு ஏன்?