ஜெப மாலையை கையில் எடுத்து வந்து.. கொள்கை தலைவர் பெரியார் என்று சொன்ன அமைச்சர் மரிய வில்சன்!

  • சென்னை: தமிழகத்தில் புதியதாக பொறுப்பேற்றிருக்கும் தவெக அரசு, இன்று திருத்தப்பட்ட பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறது. நிதியமைச்சர் மரியவில்சன் பட்ஜெட் அறிக்கையுடன் சட்டமன்றத்திற்கு வந்திருந்தார். பட்ஜெட் அறிக்கையுடன் கையில் ஜெப மாலை வைக்கப்பட்டிருந்தது விமர்சனங்களை ஏற்படுத்தியிருக்கிறது.

    Advertisement

    பட்ஜெட்டை வாசிக்க தொடங்குவதற்கு முன் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா ஆகியோர் தங்களது கொள்கை தலைவர்கள் என்று அமைச்சர் கூறியிருந்தார். ஆனால், கையில் ஏன் ஜெப மாலையுடன் வந்தார் என்று கேள்விகள் எழுந்திக்கின்றன.

    Advertisement

    முன்னதாக பட்ஜெட் அறிக்கையை திருப்பதி திருமலை கோயிலுக்கு கொண்டு சென்று அமைச்சர் வினோத் வழிபாடு செய்திருந்தார். தவெகவுக்கு ஆதரவு அளித்த கூட்டணி கட்சிகளே இந்த செயலுக்கு கடுமையாக கண்டனம் தெரிவித்திருந்தன. இப்படி இருக்கையில் அமைச்சர் மரியவில்சன் ஜெப மாலையுடன் அறிக்கையை எடுத்து வந்திருப்பதும் விமர்சனங்களை ஏற்படுத்தியிருக்கிறது.

    English Summary

    Marie Wilson: The newly sworn-in TVK government in Tamil Nadu is presenting a revised budget today. Finance Minister Maria Wilson arrived at the Legislative Assembly with the budget statement; however, the fact that a rosary was also held in hand alongside the budget document has sparked criticism.