காங்கிரஸ் கூட பேசுது.. கண்டுக்காத அமைச்சர் என். ஆனந்த்! காவிரி விஷயத்தில் சைலண்ட் மோட் என விமர்சனம்

  • சென்னை: காவிரி நீர் கிடைக்காததால் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் வறட்சியில் சிக்கியிருக்கின்றன. அரிசி உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து நீர்வளத்துறை அமைச்சர் என்.ஆனந்த் கர்நாடகாவுக்கு எதிராக கடுமையான குரலில் பேசுவாரா? என்று பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.

    Advertisement

    காவிரியின் குறுக்கே 4 அணைகளை கர்நாடகா கட்டி வைத்திருக்கிறது. இதனால், ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்திற்கு சேர வேண்டிய நீரை கேட்டு பெறுவதில் பெரிய சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. இந்த ஆண்டு குறைந்தபட்ச நீரை கூட கர்நாடகா நமக்கு கொடுக்கவில்லை.

    Advertisement

    சரி இந்த விஷயம் குறித்து நீர்வளத்துறை அமைச்சர் என். ஆனந்த் கறாராக பேசுவார் என்று எதிர்பார்த்தால்.. அப்படி எதையும் அவர் பேசவில்லை. இதுதான் தற்போது சர்ச்சையாக வெடித்திருக்கிறது.

    வரிசை கட்டும் கர்நாடாக அமைச்சர்கள்

    கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி, "இந்த ஆண்டு போதுமான அளவுக்கு மழை பெய்யவில்லை. எனவே அணைகளுக்கு நீர் வரத்து குறைவாகவே இருக்கிறது. இப்போது இருக்கும் நீர் இந்த ஆண்டுக்கான குடிநீர் தேவைக்கு மட்டுமே போதுமானதாக இருக்கிறது. நிலை இப்படி இருக்கும்போது.. தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்க வாய்ப்பே இல்லை" என்று கூறியிருக்கிறார்.

    Advertisement

    கறார் காட்டும் கர்நாடகா

    சட்டத்துறை அமைச்சர் எச்.கே.பாட்டீல், "தினமும் 3500 கனஅடி தண்ணீர் திறக்க வேண்டும் என்று கர்நாடாகவுக்கு காவிரி நீர் ஒழுங்காற்றுக்குழு போட்ட உத்தரவு மிகப்பெரிய அநீதி. பெங்களூர் போன்ற நகரங்களுக்கு அடுத்த சில மாதங்களுக்கு குடிநீர் கொடுக்க மட்டுமே இங்கு நீர் இருக்கிறது. இந்த நீரையும் தமிழகத்திற்கு விட்டுக்கொடுக்க முடியாது" என்று கூறியிருக்கிறார்.

    வாய் திறக்காத என். ஆனந்த்

    இப்படியாக கர்நாடகாவின் அமைச்சர் காவிரி நீருக்காக வரிசை கட்டி நிற்கும் நிலையில், தமிழகத்தின் நீர்வளத்துறை அமைச்சர் என். ஆனந்த் கர்நாடகாவுக்கு பெரிய அளவில் கண்டனம் தெரிவிக்கவில்லை என்று விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. தமிழகத்தின் உரிமைகளை விட்டுக்கொடுக்க மாட்டோம், சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து நடவடிக்கை எடுப்போம் என்று சிம்பிளாக சொல்லிவிட்டு கடந்து போயிருக்கிறார் என்று எதிர்க்கட்சியினர் கொந்தளித்துள்ளனர்.

    Advertisement

    தமிழ்நாடு கொந்தளித்திருக்க வேண்டும்

    உரிமைகளை கேட்டு பெற வேண்டிய இடத்தில் தமிழக அரசு இருக்கிறது. நீர் ஒழுங்காற்று ஆணையம் உத்தரவு போட்ட பின்னரும் கூட நீர் திறக்கப்படவில்லை. தவெக அதிகாரத்தில் இருப்பதால், கடையடைப்பு, உரிமை மீட்பு ஆர்ப்பாட்டம் என இந்நேரம் மொத்த தமிழ்நாடும் கொந்தளித்திருக்க வேண்டும். ஆனால், தவெக அரசு இதை பெரியதாக எடுத்துக்கொள்ளவில்லை என்று அரசியல் விமர்சகர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

    மறுபுறும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கூட இந்த விஷயத்தில் கர்நாடக அரசை கடுமையாக எதிர்த்து வருகிறது. அவர்களுக்கு இருக்கும் தைரியமாவது தவெகவுக்கு இருக்க வேண்டும் என்று விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.

    Advertisement

    தமிழகத்திற்கான பங்கு

    ஜூன் தொடங்கி ஜூலை வரை மொத்தம் 40.43 டிஎம்சி தண்ணீரை கர்நாடகா நமக்கு கொடுத்திருக்க வேண்டும். ஆனால் இதுவரை வெறும் 3.54 டிஎம்சி தண்ணீர்தான் வந்திருக்கிறது. இதை வைத்து எதையும் செய்ய முடியாது. குறிப்பாக மேட்டூர் அணை வறட்சியை நோக்கி சென்றுக்கொண்டிருக்கிறது. திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை என டெல்டா மாவட்டங்களுக்கு மேட்டூரிலிருந்து தண்ணீர் போகாததால்.. நெல் உற்பத்தி நிறுத்தப்பட்டிருக்கிறது.

    போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை

    நெல் உற்பத்தி பாதிக்கப்பட்டிருப்பதால் விவசாயிகள் போராட்டத்தில் இறங்கியிருக்கின்றனர். விஷயம் நாளுக்கு நாள் தீவிரமடைந்துக்கொண்டிருக்கும் நிலையில், தமிழக அரசு உடனடியாக இந்த விஷயத்தில் தீவிரமாக செயல்பட வேண்டும்.. கர்நாடகாவிடமிருந்து நீரை பெறுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

    Advertisement

    கர்நாடகாவுக்கு உத்தரவு

    முன்னதாக நேற்று நடைபெற்ற காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டத்தில், இன்று காலை 8 மணி முதல் அடுத்த 15 நாட்களுக்கு தினமும் 3500 கனஅடி என.. மொத்தம் 4.5 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும் என்று கர்நாடகாவுக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது. ஆனால், இன்று காலை தண்ணீர் திறக்கப்படவில்லை. கேட்டால்.. நாங்கள் மேல் முறையீடு செய்ய இருக்கிறோம் என்று கர்நாடாக சாக்கு போக்கு சொல்கிறது.

    இப்படி இருக்கையில்தான், தவெக அரசு இது குறித்து அதிரடி நடவடிக்கையில் இறங்க வேண்டிய அவசியம் இருக்கிறது என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

    English Summary

    Minister N. Anand: Tamil Nadu's delta districts are gripped by drought due to the lack of Cauvery water, and rice production has been severely affected. Against this backdrop, various quarters are questioning whether Water Resources Minister N. Anand will speak out strongly against Karnataka regarding this issue.