திமுக அதிமுக பாஜக சேர்ந்து ஆட்சி அமைக்க முயற்சி.. எம்எல்ஏக்களிடம் 50 கோடி பேரம்.. நிர்மல் குமார் பகீர்

  • சென்னை: திமுக அதிமுக பாஜக 3 கட்சியும் சேர்ந்து ஆட்சி அமைக்க முயற்சி செய்கிறார்கள். இன்னும் 2 அல்லது 3 வருஷத்திற்குள் திமுகவும், அதிமுகவும் கட்சியை நடத்த முடியாமல் பாஜகவுடன் இணைத்துவிடவும் வாய்ப்பு உள்ளதாக அமைச்சர் நிர்மல் குமார் கூறியுள்ளார். தவெக ஆட்சியை கவிழ்க்க கடந்த 45 நாட்களாக 3 கட்சிகளும் சேர்ந்து முயற்சி செய்து வருவதாகவும் அவர் குற்றச்சாட்டு வைத்தார்.

    Advertisement

    தவெக எம்எல்.ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சியை கவிழ்க்க சதி நடப்பதாக அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் மீண்டும் பரபரப்பை கிளப்பியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல் குமார் கூறியதாவது:-

    Advertisement

    திமுக - அதிமுக - பாஜக 3 கட்சியும் சேர்ந்து

    திமுக அதிமுக பாஜக ஆகிய 3 கட்சிகளும் சேர்ந்து ஆட்சி அமைக்க முயற்சி செய்கிறார்கள். இன்னும் அதிகபட்சமாக அடுத்த ஒரு வருஷத்தில் நடக்க போகிறதையும் சொல்லிவிடுகிறோம். அதாவது திமுகவும், அதிமுகவும் கட்சியை நடத்த முடியாமல் பாஜகவில் இணைத்துவிட்டு ஸ்டாலின் குடும்பத்தில் இரண்டு பேர் கேபினட் அமைச்சர் பதவியை வாங்கிவிட்டு, எடப்பாடி குடும்பத்தில் இரண்டு கேபினட் அமைச்சர் பதவியை வாங்கிவிட்டு போகும் நிலைமை இன்னும் 2 அல்லது 3 வருஷத்தில் வந்துடலாம்.

    ஏனென்றால் அவர்களுக்கு கட்சியை நடத்தும் எண்ணம் இல்லை.. கட்சியை காப்பாற்ற அவர்கள் நினைக்கவில்லை. எம்.ஜிஆர் உருவாக்கிய கட்சி.. ஜெயலலிதா உருவாக்கிய கட்சியை மொத்தமாக அடமானம் வைத்துவிட்டு என்ன செய்கிறோம் என தெரியாமல், ஓரளவு லெட்டர் பேட் கட்சி போதும் என்று, கட்சி அலுவலகம் இருந்தால் மட்டும் போதும் என்ற நிலைமைக்கு வந்துவிட்டார்.

    Advertisement

    5 வருஷம் காலத்தை ஓட்டுவதற்கு

    இதேபோன்று தான் மு.க ஸ்டாலினும் இந்த கட்சியை என்ன பண்ணனும், யாரை நம்பி கொடுக்கனும் என்று தெரியாமல் நிற்கிறார். அவர்களை பொறுத்தவரை இப்போதைக்கு என்ன தேவை என்ன என்றால் ஒரு 5 வருஷம் காலத்தை ஓட்டுவதற்கு ஒரு இடம். அதனால் தான் பாஜகவோடு கூட்டணிக்கு போக போகிறார்கள். எங்கள் ஆட்சியை பாஜகவோடு சேர்ந்து கவிழ்க்க முயற்சி செய்கிறார்கள். இந்த முயற்சிகளில் தான் கடந்த 45 நாட்களாக ஈடுபட்டு வருகிறார்கள்.

    கடைசி முயற்சியாக பாஜகவோடு சேர போகிறார்கள்

    எங்களது எம்.எல்.ஏக்களை விலைக்கு பேசி ஆட்சிக்கு கவிழ்க்க நடந்த சதியில் பலர் கைது செய்யப்பட்டு வருவதை பார்த்திருக்கலாம். எங்க எம்.எல்.ஏக்களிடம் 30, 40, 50 கோடி வரை விலை பேசப்பட்டுள்ளது. 50 கோடி கொடுத்து 20 எம்.எல்.ஏக்கள் என்றால் என்ன ஆச்சு.. இந்த அளவுக்கு பணம் கொடுத்து விலை பேசும் அளவுக்கு இன்னமும் அந்த முயற்சியை தினமும் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

    Advertisement

    இந்த அரசை எப்படியாவது செயல் இழக்க செய்ய வேண்டும் என்பதற்கான குறுக்கு வழி முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறார்கள். பாஜகவுடன் பேச்சு நடத்துவதாக திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனே கூறிவிட்டார். ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கடைசி முயற்சியாக பாஜகவுடன் சேர முடிவு செய்துள்ளார்" என்றார்.

    ஆட்சியை கவிழ்க்க பேரம்

    தவெக அரசை கவிழ்க்க ஊத்தங்கரை எம்.எல்.ஏ இளையராஜாவிடம் குதிரை பேரம் நடத்தியதாக திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்து 11 பேரை கைது செய்துள்ளனர். இவர்களிடம் நடத்தப்படும் விசாரணை அடிப்படையில் பல பரபரப்பு தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஊத்தங்கரை எம்.எல்.ஏவிடம் பேரம் பேசியது போல மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தவெக எம்.எல்.ஏ விஜய்யிடமும் ஆட்சி கவிழ்ப்புக்கு ஆதரவாக செயல்படுவதற்கான முயற்சி முன்னெடுக்கப்பட்டதாக நேற்று தகவல் வெளியானது. இது தொடர்பாக உசிலம்பட்டியை சேர்ந்த கணேசன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இத்தகைய சூழலில்தான் நிர்மல் குமார் பரபரப்பு குற்றச்சாட்டை மீண்டும் முன்வைத்துள்ளார்.

    English Summary

    Nirmal Kumar alleged that the DMK, AIADMK and BJP have been jointly attempting to topple the TVK government for the past 45 days. He also claimed the DMK and AIADMK could eventually merge with the BJP within two or three years.