அதிமுகவை அழித்ததே எடப்பாடிதான்.. எடப்பாடி பழனிசாமி மீது தவெக நிர்மல்குமார் கடும் விமர்சனம்!


  • சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது தவெக அமைச்சர் நிர்மல் குமார் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். அதிமுகவை அதல பாதாளத்திற்கு கொண்டு சென்றதே எடப்பாடி பழனிசாமிதான். தனது குடும்பத்தை காப்பாற்ற கட்சியை பயன்படுத்திய நாளிலிருந்தே அதிமுக அழியத் தொடங்கிவிட்டது என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

    Advertisement

    இதுகுறித்து மின்சாரத் துறை அமைச்சர் சிடி நிர்மல்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: எடப்பாடி பழனிசாமி வாக்கு எண்ணிக்கை முடிந்த தினத்தில் இருந்து 50 நாட்கள் பெரும் முயற்சி மேற்கொண்டார். எடப்பாடி பழனிசாமி, அவரது மகன், ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் ஆகிய 4 பேரும் செய்த அந்த முயற்சி தோல்வி அடைந்த நிலையில், இன்றுதான் வெளியில் வந்து செய்தியாளர்களையே சந்திக்கிறார்.

    Advertisement

    எப்படியாவது முதல்வராக வேண்டும், சொத்துகளைக் காப்பாற்ற வேண்டும் என்று நினைத்தார். முதலில் எடப்பாடி பழனிசாமி தனது தவறை உணர வேண்டும். அவருடைய தவறால் தான் இவ்வளவு பெரிய கட்சி அதல பாதாளத்திற்கு சென்றுள்ளது. எடப்பாடி என்ன தவறு செய்தார் என்று அவரிடமே கேளுங்கள். அதிமுக கட்சி எப்போதுமே தனிப்பட்ட காரணங்களுக்காகவோ, சொந்த குடும்பத்தை நோக்கி பயணிக்காது.

    சென்னை திட்டங்களை மொத்தமாக முடக்கிய தவெக.. சேகர்பாபு பரபரப்பு புகார்

    ஜெயலலிதா, எம்ஜிஆர் எப்படி இருந்தனரோ அதுபோல இருந்தால் தான் அதிமுகவை தாங்கிப் பிடிக்க முடியும். அந்தக் கட்சி தொண்டரை வழிநடத்த முடியும். என்றைக்கு எடப்பாடி பழனிசாமி சுயநலமாக தன் மகனையும், குடும்பத்தையும் காப்பாற்றுவதற்கு கட்சியைப் பயன்படுத்தினாரோ அன்றைக்கே அதிமுக அழிந்துவிட்டது.

    Advertisement
    கரூர் எஸ்.பி.க்கே தெரியாது! செந்தில் பாலாஜி ரூம் போட்டு காத்திருந்தாரா? நிர்மல் குமார் கேள்வி

    அதிமுகவை அழித்ததற்கு முக்கிய காரணம் எடப்பாடி தான். மிகப்பெரிய கட்சியை, எம்ஜிஆர் ஆரம்பித்த கட்சியை மூட்டை கட்டி கொண்டுபோய் சேலத்தில் போய் உட்கார்ந்துவிட்டார் எடப்பாடி. அவருடைய இந்த 50 நாள் முயற்சி தோல்வி அடைந்துவிட்டது. எடப்பாடி அவருடைய தவறை உணர வேண்டும். எப்படி ஜானகி அம்மாள் ஒரு காலத்தில் முயற்சி செய்து அம்மாவிடம் கொடுத்தாரோ, அதேபோல அதிமுகவை யாரிடமாவது அவர் ஒப்படைத்துவிட்டு செல்வது நல்லது என்றார்.

    English Summary

    TVK Minister Nirmal Kumar has leveled severe criticism against AIADMK General Secretary Edappadi Palanisamy. He accused Palanisamy of driving the AIADMK into an abyss, stating that the party's decline began the moment he started using it to protect his own family.