ரூ 50 கோடிக்கு தவெக எம்எல்ஏக்களை திமுக பேரம் பேசியதற்கான ஆதாரம் இருக்கு! நிர்மல் குமார் அதிரடி

  • சென்னை: திமுகவினர் ரூ 50 கோடிக்கு தவெக எம்எல்ஏக்களை பேரம் பேசியதற்கான ஆதாரம் உள்ளதால்தான் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது என அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியிருப்பதாவது: இன்னைக்கு 35 கோடி, 40 கோடி, 50 கோடின்னு ஒவ்வொரு எம்எல்ஏட்டையும் பேரம் பேசிட்டு இருக்காங்க. அதற்கான ஆதாரத்துடன் காவல்துறை கைது செய்துள்ளது. சோ, இது ஒவ்வொரு நாளும் நடந்துட்டே வருது. அதெல்லாம் வந்து தினந்தோறும் எல்லாரும் நம்ம இதுல பாத்துட்டே இருக்கோம். சோ, அவங்க எங்க வேணாலும் வந்து ஆளுநர்ட்ட புகார் அனுப்பிச்ச மாதிரி, அவங்க வேற வழி இல்லாமல் இன்னைக்கு ஆளுநரிடம் போய் கதறிட்டு இருக்காங்க.

    Advertisement

    அவர்கள் அஞ்சு வருஷம் அவர்கள் என்ன லட்சணத்துல ஆட்சி நடத்துனாங்க அப்படின்னா, தமிழக மக்கள் பார்த்து அதற்கான விளைவுதான் இந்த தேர்தல்ல அவங்க அளித்த வாக்குகள். சோ, அதற்கு நீங்க போயிட்டு ஆளுநர்ட்ட போய் அழுத கதறியோ இல்ல அங்க போய் அழுதோ ஒன்னும் பிரயோஜனம் இல்ல. நீங்க மக்கள்ட்ட நல்லபடியா நடந்து கொண்டால் இந்த பிரச்சனை வரப்போகுது.

    ஸ்டாலின் வந்து சொல்றாரு, நாங்க 30 நாள்தான் இந்த கவர்மெண்ட் இருக்கணும்னு. 30 நாள்ல ஸ்டாலின் மிகப்பெரிய தலைவர் ஆயிட்டாரா? தேர்தல் முடிஞ்சு 40 நாள் ஆச்சு. இந்த 40 நாள்ல மிகப்பெரிய தலைவர் இல்ல, மிகப்பெரிய ஆளுமை ஆயிட்டாரா? நீங்க அஞ்சு வருஷமே ஒன்னும் செய்யலன்னுதான் மக்கள் இந்த ஓட்டு போட்டாங்க. அப்புறம் 30 நாள்ல இந்த அரசு தாங்காதுன்னு ஒரு ஒரு கல்யாண வீட்டில பேசுறாருன்னா, 30 நாள்ல ஸ்டாலின் மாபெரும் தலைவர் ஆயிட்டாரா? அப்படி எல்லாம் இல்லைல. 30 நாள்ல என்ன சாதிச்சாரு? அஞ்சு வருஷமா நீங்க முதல்வரா இருந்தே ஒன்னும் சாதிக்கல. இந்த 30 வருஷமா என்ன மாபெரும் தலைவராகி நீங்க வந்து மக்களுடைய நன்மதிப்பை பெற்றீங்க? ஒன்னும் இல்லைல.

    Advertisement

    அப்ப நீங்க ஒவ்வொரு இடத்திலேயும் 40 கோடி, 50 கோடி கொடுத்து வாங்குறதுக்கு தயாராயிட்டீங்க. அதனால 30 நாள்ல இந்த ஆட்சியை அகற்றிடுவோம்ன்னு சொல்ற அளவுக்கு தைரியம் இருக்கு. பணம் தானே? இந்த பணத்தை வச்சுதானே 40 கோடி, 50 கோடி வச்சா நீங்க யார் வேணாலும் வாங்கிடலாமா? நீங்க அதன் விளைவுதான் இன்னைக்கு பாத்துட்டு இருக்கேன். நீங்க இந்த பணத்தை மட்டும் வச்சுக்கிட்டு, ஒவ்வொரு ஓட்டுக்கும் ₹1000 கொடுப்போம், 2000 கொடுப்போம், ஒவ்வொரு இடத்திலயும் நாங்க கொடுத்து பர்ச்சேஸ் பண்ணுவோம், 40 கோடி 50 கொடுத்து 80 எம்எல்ஏ வாங்குவோம்னு...

    Advertisement

    எந்த தைரியத்துல அவர் சொன்னார், '30 நாள் தான இந்த ஆட்சி இருக்கும்'னு சொல்லிட்டு? 120 எம்எல்ஏ கூடன்னு வலுவாக கூட்டணி ஆதரவோட நாங்க இருக்கிறோம். எந்த தைரியத்துல 30 நாள் ஆட்சி இருக்காதுன்னு சொன்னாரு ஸ்டாலின்? அப்ப வந்து 30 நாள்ல அவர் ஒன்னும் பண்ணல. மாபெரும் தலைவர் எல்லாம் ஆகலைல. இல்ல மிகப்பெரிய அளவுல ஒரு மக்கள்ட்ட நன்மதிப்பை பெற்று அப்படியே பயங்கரமா ஆகிட்டாரா? அதெல்லாம் ஒன்னும் இல்லைல.

    இந்த வெறும் பணத்தை வைத்துக்கொண்டு, ஒரு சில செந்தில் பாலாஜி மாதிரி ஆட்களும் இல்ல ஒரு சில தொழிலதிபர்களை வைத்துக்கொண்டு இவர் வந்து இந்த வேலையை செய்து கொண்டிருக்கிறார். கண்டிப்பாக மக்கள் தீர்ப்பு இன்னும் கடுமையாக இருக்கும். இவர்கள் செய்ற வேலையை மக்கள் பார்த்துட்டு இருக்காங்க. ஒவ்வொரு நாளும் இந்த அரசுக்கு எல்லா வழியிலயும் இவர்கள் தொந்தரவு கொடுத்துட்டு இருக்காங்க. அதை எல்லாம் மீறி மக்களுக்கான நல்ல பணிகள் தொடர்ந்து செய்வோம். என்ன வேணாலும் செஞ்சுக்கிட்டோம், மக்கள் எங்களோடு இருக்காங்க. நாங்கள் எதற்கும் பயப்படவில்லை, யாருக்கும் தயங்கவில்லை. மக்களை தவிர வேறு யாருக்கும் பயப்படாது இந்த அரசு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினர் இளையராஜாவை விலைக்கு வாங்க முயன்ற விவகாரத்தில், மூன்று நபர்களைக் காவல்துறை பிடித்துள்ளது. பிடிபட்டவர்களில் இருவர் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் என சொல்லப்பட்டது. மேலும் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் குமார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    English Summary

    Minister Nirmal Kumar says that there ar evidences that DMK allegedly offeres rs 50 crore to lure TVK MLAs.