என்ன வார்த்தை இது.. இவர் மீது நடவடிக்கை எடுங்க.. திமுக எம்எல்ஏ செயலால் கடுப்பான ராஜ்மோகன்

  • சென்னை: சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. தவெக, திமுக இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு வருகிறது. திமுக மீது தவெகவும், தவெக மீது திமுகவும் பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார்கள். திமுக எம்எல்ஏ ஜெயக்குமார் பைத்தியம் என்கிற வார்த்தையை பயன்படுத்தினார். அதற்கு அமைச்சர் ராஜ்மோகன் கோபத்துடன் அளித்த பதில் வைரலாகி வருகிறது.

    Advertisement

    உடுமலைப்பேட்டை தொகுதி திமுக எம்எல்ஏ ஜெயக்குமார், "உள்ள இருக்கறவங்களை பார்த்தால் பைத்தியம் மாதிரி தெரியுதா என்று ஆவேசமாக கேள்வி எழுப்பினார். இதில் கொந்தளித்த அமைச்சர் ராஜ்மோகன், என்ன வார்த்தை இது. இது ஏற்றுக் கொள்ள முடியாது. தவறான வார்த்தை. அடிப்பதற்கு கையை ஓங்கி பாய்ந்து வருகிறார். ஒருமையில் பேசுவது, வாடா போடா என மரபுக்கு எதிரான வார்த்தைகளை பேசுவதை திமுகவினர் தவிர்க்க வேண்டும்" என்றார்.

    Advertisement

    ராஜ்மோகன் கொந்தளிப்பு

    அப்போது அமைச்சர் செங்கோட்டையன் பேச முயற்சி செய்தார். அதற்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மீண்டும் தொடர்ந்த ராஜ்மோகன், "அவர்கள் என்ன வார்த்தை பேசுகிறார்கள். பைத்தியம் மாதிரி பேசுகிறோம் என்கிறார்கள். இதைத்தான் சட்ட அமைச்சர் சுட்டி காட்டினார்கள். ஒருமையில் வாடா போடா என்று மரபுக்கு விரோதமாக பேசுவது ஆகியவறை தவிர்க்க வேண்டும். இந்த பக்கம் உள்ளவர்களை கட்டுப்படுத்த வெற்றி தலைவரின் கடைகண் பார்வை போதுமானது.

    எல்லாரும் கேட்டு கொண்டதற்கு இணங்க நேரலை கொடுத்து கொண்டிருக்கிறோம். அவர் பேசியதை ஏற்று கொள்ளவே முடியாது. அது தவறான வார்த்தை. அவர் பேசிதை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும். இவர் மீது நீங்கள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். சட்டமன்ற துணை சபாநாயகர் ரவிசங்கர் பேசுகையில், எல்லாரும் உட்காருங்க. இந்த சம்பவம் பற்றி சபாநாயகர் விசாரணை நடத்தி, பேரவை விதிக்குட்பட்டு நடவடிக்கை எடுப்பார்" என்றார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    English Summary

    Minister Rajmohan got anger in assembly on DMK MLA Jayakumar for using un parliament word.