“தீபாவளி நாளில் கொலைகள் நடப்பது புதிதல்ல” - தவெக அமைச்சர் ராஜ்மோகன் கொடுத்த பதில்!

  • சென்னை: "பண்டிகை நாட்களில் கொலைகள் நடப்பது புதிதல்ல.. கடந்த கால தீபாவளி நாட்களிலும் கொலைகள் நடந்துள்ளன. ஆனால், திட்டமிட்டு ஆளும் அரசு மீது அவப்பெயர் ஏற்படுத்த, எதிர்க் கட்சியினர் எதிரிக் கட்சிகளாக செயல்படுகின்றனர்" என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    நேற்று தீபாவளி பண்டிகை அன்று தமிழ்நாட்டில் 10க்கும் மேற்பட்ட கொலை நிகழ்வுகள் நடந்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் அதுகுறித்த கேள்விக்கு அமைச்சர் ராஜ்மோகன் பதில் அளித்துள்ளார்.

    Advertisement

    தீபாவளி நாளில் தமிழகத்தில் 11 படுகொலை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் ஆளும் தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து போயிருப்பதாக எதிர்க் கட்சிகளின் தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

    இது தொடர்பான கேள்விக்கு இன்று செய்தியாளர் சந்திப்பில் பதில் அளித்த அமைச்சர் ராஜ்மோகன், "பண்டிகை நாளான தீபாவளி தினத்தன்று தமிழ்நாட்டிலேயே முதல்முறையாக இப்படிப்பட்ட சம்பவங்கள் நடந்ததைப் போன்ற மாயத் தோற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.

    கடந்த தீபாவளி பண்டிகைக்கு 6 படுகொலைகள் நடந்துள்ளன. அதற்கு முந்தைய தீபாவளி அன்றைக்கு 11 படுகொலைகள் நடந்திருக்கின்றன. அப்படியானால் பண்டிகை நாட்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவது புதிது அல்ல.

    Advertisement

    ஆனால், திட்டமிட்டு ஆளும் அரசாங்கத்தின் மீது அவப்பெயர் ஏற்படுத்துவதற்காக டிடிவி தினகரன் அறிக்கை வெளியிடுகிறார். உடனே கனிமொழி அறிக்கை வெளியிடுகிறார். அடுத்து எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிடுகிறார்.

    ஆளுங்கட்சியின் மீது அவப்பெயர் ஏற்படுத்துவதற்காகத் திட்டமிட்டு இப்படி எதிர்க்கட்சிகள் எல்லாம் எதிரிக்கட்சிகளாகச் செயல்படுகின்றன. ஆனால், வரலாற்றிலேயே முதல் முறையாக எந்த அரசியல் தலையீடும் இன்றி இதுபோன்ற குற்றச் சம்பவங்களைத் தடுப்பதற்கு காவல்துறைக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது.

    மிகப்பெரிய ரவுடிகளை எல்லாம் சுட்டுப் பிடிக்கிறார்கள். இதுபோன்ற குற்றச் சம்பவங்களின் பின்னணியில் யார் இருந்தாலும் நேரடியாக கைது செய்கிறார்கள். இனி வரும் காலங்களில் குற்றச் சம்பவங்களைக் குறைப்பதற்கான வலிமையும் வாய்ப்பும் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.

    English Summary

    “Murders occurring during festival days is nothing new; such incidents have taken place during past Deepavali celebrations as well. However, the opposition parties are acting like hostile adversaries, deliberately trying to bring disrepute to the ruling government,” stated Minister Rajmohan.