என்னது ஜோசப் விஜய் அழகரா? கொளுத்திப் போட்ட அமைச்சர் ரமேஷ்! பத்திகிட்டு எரியுது சோஷியல் மீடியா!

  • சென்னை: "மதுரை மீனாட்சி கோயிலில் அழகருடன்" என இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் ரமேஷ் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள இந்த போஸ்ட் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தனது கட்சியின் தலைவரை ஒருவர் எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம். ஆனால், ஆயிரக்கணக்கானோர் வணங்கும் கடவளின் பெயரால் ஒரு அரசியல் கட்சித் தலைவரை அழைக்கலாம், இது அந்த கடவுளை வணங்கும் மக்களை சங்கடத்துக்குள்ளாக்காத என்ற விமர்சனம் எழுந்துள்ளது.

    Advertisement

    அமைச்சர் ரமேஷ், மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு வந்த முதலமைச்சர் விஜய்யுடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டு, அதற்கு மீனாட்சி கோவிலில் அழகருடன் என குறிப்பிட்டுள்ளார். இந்த ஒரு புகைப்படம், சமூக வலைதளங்களில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

    Advertisement

    மதுரை என்றாலே முதலில் நினைவுக்கு வருவது மீனாட்சி அம்மன் - சுந்தரேஸ்வரர் திருக்கோவில். இரண்டாவது மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரைத் திருவிழாவில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு தான். இந்த இரண்டும் தான் மதுரையின் அடையாளம்.

    இத்தகைய ஆன்மிகப் பின்னணி கொண்ட மதுரையில், முதலமைச்சர் விஜய்யுடன் இருக்கும் புகைப்படத்தை அமைச்சர் ரமேஷ் 'அழகருடன்' என குறிப்பிட்டிருப்பது கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, இந்து சமய அறநிலையத்துறையை கவனிக்கும் அமைச்சரே, முதலமைச்சரை "அழகர்" என குறிப்பிட்டுப் பதிவிட்டிருப்பதற்கு ஆன்மீகவாதிகள் கடுமையான கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

    Advertisement

    தாய்மாமன் தங்க மோதிர திட்டத்தை தொடங்கி வைப்பதற்காக முதல்வர் விஜய் மதுரைக்கு வந்த போது பலரும் அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வுடன் ஒப்பிட்டு பேசினர். பல இடங்களில் இது போன்ற புகைப்படங்களையும் அவர்களது ரசிகர் வைத்திருந்தனர். அரசியல் தலைவர்களைப் புகழ சிறப்பு பெயர்களையும் அடைமொழிகளையும் பயன்படுத்துவது அரசியலில் வழக்கமான ஒன்றுதான்.

    இதை கட்சியின் சாதாராண தொண்டர் கூட பயன்படுத்தலாம். ஆனால், அமைச்சர் என்பவர் அனைவருக்குமானவர். முதலமைச்சரும் அப்படித்தான். அரசமைப்பு சட்டத்தின் படி பதவியேற்ற ஒரு அமைச்சர், அமைச்சரவையின் தலைவரான முதலமைச்சரை ஒரு குறிப்பிட்ட மத அடையாளத்தோடு ஒப்பிடுவதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும் என்ற கேள்வியையும் தவிர்க்க முடியவில்லை.

    Advertisement

    கோவில் நிர்வாகம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை சார்ந்த முக்கிய பொறுப்பில் இருக்கும் அமைச்சர் ஒருவர், மீனாட்சி அம்மன் கோவிலிலேயே முதலமைச்சரின் புகைப்படத்திற்கு "அழகருடன்" என குறிப்பிட்டிருப்பது சர்ச்சைக்கு வழி வகுத்துள்ளது என ஆன்மிக அன்பர்கள் விமர்சித்து வருகின்றனர்.

    "அழகர்" என்ற பெயர் மதுரையின் ஆன்மிக அடையாளங்களில் ஒன்றாகவும், பக்தர்களின் நம்பிக்கையுடன் தொடர்புடைய பெயராகவும் பார்க்கப்படுகிறது. கிறித்தவரான ஜோசப் விஜய் கிறித்தவர்களுக்கு மட்டுமல்ல.. தமிழகத்தில் இருக்கும் அனைவருக்குமே முதலமைச்சர் தான். அதை தமிழகமே ஏற்றுக் கொண்டிருக்கு போது, மாண்புமிகு அமைச்சரே ஜோசப் விஜையை சர்ச்சைக்குள் சிக்க வைக்கிறாரோ? என்ற சந்தேகம் எழுவதை தவிர்க்க முடியவில்லை.

    Advertisement

    இதற்கு முன்னதாக எம்ஜியாரை ஏசுவாகவும், ஜெயலலிதாவை அன்னை மேரியாகவும் சித்தரித்து பேனர்கள் வைக்கப்பட்டன. ஆனால் அவை எல்லாம் தொண்டர்களின் துதி பாடல்கள் தான். ஆனால், ஒரு அமைச்சரே அதனை செய்திருப்பது எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவது போல் அமைந்துள்ளது என்கின்றனர் ஆன்மீகவாதிகள்.

    English Summary

    Minister Ramesh’s post featuring Vijay at Madurai Meenakshi Temple draws criticism and debate over the use of the term ‘Azhagar’.