Vijay Sethupathi: பிக்பாஸில் நடிகர் விஜய் சேதுபதி பேச்சு! அமைச்சர் ரமேஷின் ரியாக்ஷன் என்ன?

  • சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி தலைமைத்துவம் குறித்து பேசியுள்ளது குறித்து எழுப்பப்பட்ட கேள்வி அமைச்சர் ரமேஷ் என்ன பதில் கொடுத்துள்ளார் என்பதை பார்க்கலாம்.

    Advertisement

    மதுரை மீனாட்சியம்மன் கோவில் குடமுழுக்கு விழா வரும் வியாழக்கிழமை நடைபெறவுள்ள நிலையில் முன்னேற்பாடு பணிகள் குறித்து துறை சார்ந்த அதிகாரிகளுடன் அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ்
    ஆய்வு மேற்கொண்டார்.

    Advertisement

    இதையடுத்து பின் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்,"மதுரை மீனாட்சியம்மன் கோவில் குடமுழுக்கு ஏற்பாடுகள் அனைத்து துறை சார்பில் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது. உலகமே புகழக்கூடிய வகையில் மீனாட்சியம்மன் கோவில் குடமுழுக்கு விழா நடைபெறும் என்றார்.

    அப்போது அவரிடம், முன்னாள் அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பாஸ் வழங்கப்பட்டுள்ளதா? என்ற கேள்விக்கு, யாராக இருந்தாலும் அரசியல் பார்க்காமல் எல்லோருக்கும் பாஸ் வழங்கப்படும்.

    பாஸ் வழங்குவதில் குளறுபடி நடப்பது குறித்த கேள்விக்கு, மீனாட்சியம்மன் கோவில் குடமுழுக்கு விழாவில் எந்த ஒரு குளறுபடியும், அரசியலும் நடக்காது.

    கோவில் நிலங்களில் முறைகேடு தொடர்பாக வெள்ளையறிக்கை வெளியிடப்படுமா? என்ற கேள்விக்கு அவர், கோவில் நிலங்கள் முறைகேடு தொடர்பாக தீவிரமாக கண்காணித்து வருகிறோம். பழனி கோவிலுக்கு சொந்தமான நிலங்களை ஆய்வு செய்ய அறிவுறுத்தியுள்ளோம். ஏற்கனவே குழு அமைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக பழனி கோவிலில் குழு அமைக்கப்பட்டுள்ளது. நிச்சயம் கோவில் சொத்துக்கள் அனைத்தும் பாதுகாக்கப்படும்.

    Advertisement

    மதுரை மீனாட்சியம்மன் கோவில் யானை அரசு சார்பில் வாங்கப்பட்டதா? என்ற கேள்விக்கு மதுரை மீனாட்சி அம்மன் கோவில் யானை உபயதாரர் மூலமாக பெறப்பட்டுள்ளது.

    இடைத்தேர்தலில் இடதுசாரிகள் தனித்துப் போட்டி குறித்த கேள்விக்கு தேர்தலில் போட்டியிடுவது ஜனநாயக உரிமை. எனவே யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம். அவருடைய ஜனநாயக உரிமையை செய்கிறார்கள். முதல்வர் விஜய் தலைமையிலான அரசியல் நிர்வாகம் சிறப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது. பொதுமக்கள் இந்த அரசை பாராட்டி வருகிறார்கள். நாங்கள்தான் வெற்றி பெறுவோம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

    நடிகர் விஜய் சேதுபதி தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தலைமைத்துவத்தை பற்றி விமர்சித்தது குறித்த கேள்விக்கு, அரசியல் ரீதியான கேள்விகளுக்கு பதில் சொல்கிறேன்.

    Advertisement

    முதல்வர் லண்டன் பயணம் தொடர்பாக வெள்ளையறிக்கை வெளியிட வேண்டும் என்ற எல்.முருகன் கருத்துக்கு ரமேஷ் அளித்த பதிலில், முதலமைச்சர் பயணம் மேற்கொள்கிறார்கள் என்றால் அரசு சார்ந்த பல நிகழ்வுகள் இருக்கும். யார் யார் அவருடன் செல்வார்கள் என்பதை முதல்வர் தான் முடிவு செய்வார். விளையாட்டு போட்டியை ஊக்குவிப்பதற்காகவும் உலகளவில் தமிழை சில நிகழ்வுகளில் முதல்வர் கலந்துகொண்டுள்ளனர். இதையெல்லாம் வைத்து அரசியல் செய்ய முயற்சி செய்பவர்களுக்கு பதில் சொன்னால் மக்கள் பணி செய்ய முடியாது" என்றார்.

    English Summary

    Minister Ramesh says about Actor Vijay Sethupathi about leadership speech in biggboss season 10 show.