சட்டசபையில் நேருக்கு நேர்.. அமைச்சர் செங்கோட்டையன் - எடப்பாடி இடையே நேரடியாக காரசார வாதம்

  • சென்னை: தமிழக சட்டசபையில் 2026 - 2027ஆம் ஆண்டுக்கான திருத்திய பொது பட்ஜெட் மற்றும் வேளாண்மை பட்ஜெட் ஆகியவற்றின் மீதான பொது விவாதம் 2-வது நாளாக இன்று நடைபெற்றது. விவாதத்தை முன்னாள் அமைச்சரும், திமுக எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார். இந்த விவாதத்தின் மீது அமைச்சர்களுக்கும் எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்களுக்கும் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.

    Advertisement

    அப்போது அவை முன்னவரும் தவெக அமைச்சருமான செங்கோட்டையனுக்கும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே காரசார வாதம் நடைபெற்றது.

    Advertisement

    புதிய செய்தி எதுவும் இல்லை

    செங்கோட்டையன்: நாங்கள் கேட்கிறது ஒன்றே ஒன்று.. கூடுதல் விலை கொடுக்கப்பட்டு இருக்கிறதா என்ற ஒரே கேள்விதான் இருக்கிறதே தவிர.. இதையெல்லாம் ஒப்பிட்டு காட்ட இயலாது. நீங்கள் இதுவரை முதல்வராக இருந்த போது 4 ஆயிரம் ரூபாய் கரும்புக்கு வழங்கியிருக்கிறீர்களா? என்பதை மட்டும் இங்கே சொல்லுங்கள் அதற்கு நாங்கள் பதில் சொல்கிறோம்.

    எடப்பாடி பழனிசாமி: அதிமுக ஆட்சியில் இருந்த போது யார் அந்த துறைக்கு அமைச்சராக இருந்தார் என்பதே தெரியாமல் பேசிக்கொண்டு இருக்கிறார். 2020-ல் இருந்து 2026 ஆண்டு கால கட்டத்தில் தற்போது பல்வேறு மாறுபாடுகள் ஏற்படுகிறது. கூலி உயர்வு ஏற்படுகிறது. உர விலை மாறுபடுகிறது. டீசல் விலை அன்று 66 ரூபாய் இருந்தது இன்று 100 ரூபாய் நெருங்கிவிட்டது. அதற்கு ஏற்றவாறுதான் ஊக்கத்தொகை அதிகமாக கொடுத்து இருக்கிறீர்களே தவிர அன்றைக்கு என்ன லாபம் கிடைத்ததோ அதே லாபம்தான் விவசாயிகளுக்கு கிடைக்கிறது. புதிய செய்தி எதுவும் இல்லை. பொருந்துகிற மாறி சொல்லுங்க..

    Advertisement

    புரிந்து கொண்டால் சரி..

    செங்கோட்டையன்: கதையை மாற்றி மாற்றி சொல்லக்கூடாது. உர விலை ஏறிவிட்டது.. கூலி ஏறிவிட்டது என்றெல்லாம் சொல்லிவிட்டு.. நாங்கள் ஏற்றியிருப்பது கூடுதலாக மானியத்தை ஏற்றியிருக்கிறோமோ? இல்லையா? என்பதற்குதான் பதில் சொல்ல வேண்டுமே தவிர இதையெல்லாம் சுட்டிக்காட்டி அதனால்தான் ஏற்றியிருக்கிறோம் என்று சொல்ல முடியாது.

    அப்படி சொல்லியிருந்தால் ஒவ்வொரு ஆண்டும் அதுபோன்ற பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கிறது. இதேபோல உங்களுக்கு தெரியும்.. உரப்பற்றக்குறை வரும் பொழுது தமிழ்நாட்டின் உரம் எங்கும் கிடைக்காத நிலையிலும் கூட அன்றைக்கும் இதே மானியத்தைதான் உயர்த்தினோம் என்பதை புரிந்து கொண்டால் சரி..

    Advertisement

    நடவு நட ஆள் இல்லை

    ஒஎஸ் மணியன் (அதிமுக): விவசாய பிரச்சினை தொடர்பாக அதிமுக போராட்டம் அறிவித்துள்ளது. அதில் சென்னையை தவிர என்று வரும். நமது உணவுத்துறை அமைச்சர் சென்னையில் இருப்பதால் ஏ டூ இசட் இன்னும் கொஞ்ச நாள் கழித்து கற்றுக்கொள்வார். இப்போது அவருக்கு தெரியவில்லை. நடப்பு ஆண்டில் விவசாயிகள் நெல்லுக்கு இடும் அடி உரம் ஒரு மூட்டை எவ்வளவு உயர்ந்து இருக்கிறது தெரியுமா? 650 ரூபாய் உயர்ந்துள்ளது. ஒரு மூட்டை யூரியா 200 ரூபாய் உயர்ந்துள்ளது.

    நடவு நடுவதற்கு உள்ளூரில் ஆள் கிடைப்பது இல்லை. நடவு நட வேண்டும் என்றால் இயந்திர நடவு செய்ய வேண்டும். இல்லையென்றால் மேற்கு வங்கத்தில் இருந்து ஆள் வரணும். மின்சார கட்டணம் இருமடங்கு உயந்துள்ளது. டீசல் 105, 110 ரூபாய் ஆகிவிட்டது. பூச்சி மருந்தும் உயர்ந்துள்ளது. விவசாயிகளின் நிலை கண்ணீர் விடும் அளவுக்கு உள்ளது. ஈரோட்டில் உங்களுக்கு பணப்பயிர் உள்ளது.

    English Summary

    Minister Sengottaiyan and Edappadi Palaniswami Face-off in the Tamil Nadu Assembly: The general debate on the revised general budget and agriculture budget for the year 2026–2027 continued for the second day in the Tamil Nadu Legislative Assembly. Former Minister and DMK leader M.R.K. Panneerselvam initiated the discussion. A heated exchange took place between ministers and opposition MLAs during the debate.