2 IUML எம்எல்ஏக்களை ஓட்டலில் அடைத்து காவல் காத்தது யார்னு வெளிப்படையா சொன்னா.. ஷாஜகான் பேச்சு

  • சென்னை: ஐயூஎம்எல் எம்எல்ஏக்களாகிய எங்கள் இருவரை கோடி கோடியாக பணம் கொடுப்பதாக குதிரை பேரம் நடத்தி ஒரு ஹோட்டலில் அடைத்து வைத்தவர்கள் யார், எங்களுக்கு காவலுக்கு இருந்தவர்கள் யார் என்பதை வெளியே சொன்னால் அரசியலே செய்ய முடியாது என ஐயூஎம்எல்லை சேர்ந்த அமைச்சர் ஷாஜகான் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    முதல்வராக விஜய் ஆகிவிடக் கூடாது என்பதற்காக எங்கள் இருவரையும் கோடி கோடியாக பணம் கொடுப்பதாக குதிரை பேரம் செய்தார்கள் என திமுகவை விமர்சித்து வாணியம்பாடி எம்எல்ஏ சையத் பாருக் பாஷா பேசியதை திமுகவினர் திரித்து கூறி வருவதாகவும் ஷாஜகான் மறுத்துள்ளார்.

    Advertisement

    தமிழக சட்டசபையில் வாணியம்பாடி எம்எல்ஏ சையத் பாருக் பாஷா பேசுகையில் திருவண்ணாமலை பொதுக் கூட்டத்தில் ஐயூஎம்எல் எம்எல்ஏக்களை திமுகவினர் மிரட்டி கோடி கோடியாக பணம் கொடுப்பதாகவும் அமைச்சர் பதவி கொடுப்பதாகவும் கூறினர் என நான் கூறியதை திமுகவினர் திரித்து, தவெக குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக கூறி வருகிறார்கள். நான் யாரையும் தவறாக பேசவில்லை.

    மே 7ஆம் தேதி அதிமுக தலைவரை முதல்வராக்க திமுக திட்டமிட்டிருந்தது. அதை எங்கள் தலைவர் காதர் மொய்தீன் ஏற்க மறுத்தார். அவர் பேட்டியில் சொன்னதைதான் நான் எங்கள் கட்சி கூட்டத்தில் சொன்னேன் என்றார். அப்போது அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர்.

    Advertisement

    இதையடுத்து சிறுபான்மை நலத் துறை அமைச்சர் ஷாஜகான் பேசுகையில், இந்த விவகாரத்தில் அதிமுகவுக்கு எந்த சம்பந்தமும் கிடையாது. மே 7-ஆம் தேதி, அதிமுக தலைவரை முதல்வராக்கலாம் என திமுகவினர் முடிவு செய்து எங்கள் தலைவர் காதர் மொய்தீனிடம் சொன்னது.

    அப்போது பாஜக கூட்டணியில் இருக்கும் அதிமுக ஆட்சி செய்ய ஆதரிக்க மாட்டோம் என எங்கள் தலைவர் சொன்னார். இதையடுத்து எங்கள் இருவரையும் மே 8ஆம் தேதி ஒரு ஹோட்டலில் அடைத்து வைத்திருந்தார்கள். எங்களை மிரட்டி காவல் காத்தது யார், ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என நாங்கள் வெளிப்படையாக பேசினால் யாருமே அரசியல் செய்ய முடியாது. ஆளுநர் ஆட்சி வந்துவிடக் கூடாது என்பதால்தான் தவெகவுக்கு நாங்கள் ஆதரவு அளித்தோம். தற்போது லஞ்ச லாவண்யம் இல்லாத ஆட்சியை தவெக நட்தி வருகிறது. இவ்வாறு ஷாஜகான் தெரிவித்திருந்தார்.

    Advertisement

    உடனே குறுக்கிட்ட ஆதவ் அர்ஜுனா, 2 ஐயூஎம்எல் எம்எல்ஏக்களை அடைத்தது வைத்தது அக்கார்டு ஹோட்டலில், அந்த ஹோட்டல் திமுக எம்பி ஜெகத்ரட்சகனுடையது. இந்த இரு எம்எல்ஏக்களை அடைத்து வைத்திருந்தது குறித்து விசாரணை நடத்தப்படும் என்றார்.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் ஐயூஎம்எல் பொதுக் கூட்டத்தில் வாணியம்பாடி எம்எல்ஏ சையத் பாரூக் பாஷா பேசுகையில், சட்டசபையில் சோபா மாடல் அரசு என விமர்சனம் செய்து வருகிறார்கள். என்னையும் ஷாஜகானையும் சந்தித்து கோடி, கோடியாக பணத்தை எடுத்து வந்து எங்களுக்க அமைச்சர் பதவி கொடுப்பதாக சொன்னார்கள். நாங்கள் கோடிக்கு சாய்ந்தவர்கள் அல்ல, கொள்கைக்கு சாய்ந்தவர்கள், எங்களது இயக்கம் ஐயூஎம்எல் கொள்கையோடுதான் இருப்போம் என சொல்லி அவர்களை விரட்டிவிட்டோம்.

    Advertisement

    தவெகவுக்கு ஆதரவு அளித்ததால், ஷாஜகானுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது, எனக்கும் அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்று எங்களது கட்சித் தலைவர் காதர்மொய்தீன் கேட்டார். அதனால் எனக்கு அமைச்சருக்கு இணையான பதவி வழங்கப்பட உள்ளது.

    அதிமுகவை ஆட்சியில் உட்கார வைப்பதற்காக திமுக முயற்சி செய்து எங்களை ஆதரிக்க சொன்னதால் நாங்கள் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறினோம் என பேசியிருந்தார். இந்த நிலையில் அமைச்சராக்குகிறோம் என கோடி கோடியாக பணம் கொடுப்பதாக சொன்னார்கள் என வாணியம்பாடி எம்எல்ஏ சொன்னதை தவெக சொன்னதாக திமுக பிரச்சாரம் செய்து வருவதாக ஐயூஎம்எல் விளக்கம் அளித்துள்ளது.

    English Summary

    IUML Minister Shahjahan says that his party MLAs were held as hostage in a hotel if he reveals the names then it could end their political life.