ஆன்லைனில் டாஸ்மாக் மதுபானத்தை வீட்டுக்கு டெலிவரி செய்ய மாட்டோம்! புக்கிங் மட்டுமே- அமைச்சர் விளக்கம்

  • சென்னை: ஆன்லைனில் மதுபானம் முன்பதிவு என்பது சோதனை நிலையில் மட்டுமே இருப்பதாக அமைச்சர் விக்னேஷ் விளக்கம் அளித்துள்ளார். ஆன்லைன் மற்றும் செயலி மூலமாக மதுபானம் விற்பனை நடைமுறை தமிழ்நாட்டிற்கு வரவுள்ளதாக தகவல் வெளியான நிலையில், மதுபானம் வீட்டிற்கு வந்து வழங்கப்படும் என்பது தவறான தகவல் என்றும் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    தமிழ்நாட்டில் நேற்று முதல் ஆன்​லைனில் மது​பானம் வாங்​கு​வது குறித்த விளக்க வீடியோ ஒன்றை டாஸ்மாக் நிர்​வாகம் வெளி​யிட்​டுள்​ளது. தமிழகத்​தில் தற்​போது 4 ஆயிரம் டாஸ்​மாக் கடைகள் இயங்கி வரு​கின்​றன. இந்த கடைகளில் எம்​ஆர்​பி விலையை விட கூடு​தல் விலைக்கு மது​பானம் விற்​கப்​படு​வ​தாக தொடர்ந்து குற்​றச்​சாட்டுகள் நீண்ட நாட்களாகவே இருந்து வருகிறது.

    Advertisement

    இதனை சரி செய்ய டாஸ்மாக் நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது. இந்த நிலையில் மது​பான விற்​பனைக்கு தனி செயலி மற்றும் இணைதளம் பயன்​பாட்​டுக்கு வரவுள்​ளது தெரிய வந்தது. இதற்கு பாமக உள்ளிட்ட அரசியல் கட்சியினர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் மதுபானன் முன்பதிவு விற்பனை விவகாரம் தொடர்பாக அமைச்சர் விக்னேஷ் விளக்கம் கொடுத்துள்ளார்.

    இதுகுறித்து அமைச்சர் விக்னேஷ் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், ஏதாவது ஒரு முயற்சி எடுக்கும் போது, துறை ரீதியாக சீரமைக்கும் போதும் கொஞ்சம் குறை இருந்தால் தாராளமான சொல்லுங்கள்.. அரசியலுக்காக விமர்சிக்காதீர்கள்.. மதுபான விலை ஏறாது.. மதுபானம் விற்று அரசின் வருவாயை பெருக்குவது எங்களின் நோக்கம் அல்ல.. கடைகள் எண்ணிக்கை குறையும் போதும் கூட அரசின் வருவாய் பெருகுகிறது.

    Advertisement

    டாஸ்மாக் மதுபான கடைகள் மூடும் எண்ணம் இல்லை.. ஆனால் இடமாற்றம் செய்ய உள்ளோம். பாட்டிலுக்கு ரூ.10 விவகாரம் தொடர்பாக ஏராளமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. 2011ஆம் ஆண்டு முதலே இந்த பிரச்சனை இருந்து வருகிறது. ரூ.10 ஏன் வாங்குகிறார்கள் என்று தெரிந்து கொண்டு நடவடிக்கை எடுத்துள்ளோம். ஊழல் நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.

    அடுத்த டெண்டரின் போது ஒவ்வொரு பிரச்சனையாக சரி செய்யப்படும். இந்த பிரச்சனையை சரி செய்ய முன்பதிவு செய்து மதுபானம் வாங்கும் திட்டத்தை ஆலோசித்து வருகிறோம். மதுபானம் வீடு தேடி வரும் என்பது தவறு.. மதுபானம் ஆன்லைனில் விற்பனை என்பதும் தவறு.. ஆன்லைன் முன்பதிவு சோதனை நிலையில் தான் உள்ளது. ஆன்லைனில் மதுவை வாங்க முடியாது; முன்பதிவு மட்டும் செய்ய முடியும்.

    Advertisement

    21 வயசுக்குள் இருப்பவர்களுக்கு மதுபானம் கொடுக்க கூடாது என்பது விதி. மதுபானத்தை ஆன்லைனில் விற்பனை செய்ய மாட்டோம். சில கடைகளில் சில ஆலைகளில் இருந்து வரும் மதுபானம் மட்டுமே விற்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த ஆன்லைன் மூலமாக வரும் போது எந்தக் கடையில் எந்த மதுபானம் விற்கப்படுகிறது என்பதும் வெளிப்படையாக தெரிந்துவிடும்.

    ஆன்லைனில் மட்டுமே விற்பனை என்பதும் தவறு.. டாஸ்மாக் மதுபான கடைகளின் தரத்தையும் உயர்த்த வேண்டிய தேவை இருக்கிறது. ஒரு திட்டம் வரும் போது அதற்கு எதிர்ப்புகள் அதிகமாக வரும்.. இருந்தாலும் எதிர்ப்பு எந்த அளவிற்கு இருக்கிறது என்பதை அரசு உள்வாங்கி கொண்டிருக்கிறது. பட்வைசர் பீர் வகை தமிழ்நாட்டிற்கு கொண்டு வர பார்க்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

    English Summary

    Minister Vignesh Denies Home Delivery Reports, Says Online Liquor Booking is Only Experimental