பாட்டிலுக்கு ரூ.10 வசூல்.. ஒரே நாளில் மதுபான கடை ஊழியர்கள் 67 பேர் சஸ்பெண்ட்.. விக்னேஷ் வார்னிங்!

  • சென்னை: தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் மதுபான கடைகளில் மதுபாட்டிலுக்கு கூடுதலாக பணம் வசூலித்த 67 ஊழியர்கள் ஒரே நாளில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மதுபான கடை ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்ட பின்னரும் கூட மதுபாட்டிலுக்கு கூடுதல் பணம் வசூலிப்பது தொடர்ந்ததால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் விக்னேஷ் எச்சரித்துள்ளார்.

    Advertisement

    தமிழ்நாட்டில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக மதுபான கடைகளில் மதுபாட்டிலுக்கு கூடுதலாக பணம் பெறும் நடைமுறை இருந்து வருகிறது. கொரோனா பரவலுக்கு பின் பாட்டிலுக்கு ரூ.10 வாங்கப்பட்டு வந்தது. இதனை முடிவுக்கு கொண்டு வர தவெக அரசு முயற்சிகள் எடுத்தது. ஆனால் மதுபான ஊழியர்களுக்கு குறைவான சம்பளம் உள்ளிட்ட பிரச்சனையால், அதனை நடைமுறைக்கு கொண்டு வர முடியவில்லை.

    Advertisement

    இதன்பின் மதுபான கடை ஊழியர்களின் ஊதியம் உயர்த்தப்படுவதாக அமைச்சர் விக்னேஷ் அறிவித்தார். தொடர்ந்து மதுபாட்டிலுக்கு கூடுதல் பணம் வசூல் செய்தால், கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார். அதன்படி கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பது முதன்முறை கண்டறியப்பட்டால் ஒரு மாதம் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டது.

    கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது 2வது முறையாக கண்டறியப்பட்டால் 3 மாதம் பணியிடைநீக்கம் செய்யப்படுவார்கள். 3வது முறையாக கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் சஸ்பெண்ட் செய்யப்பட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டு விசாரணை நடத்தப்படும். 3வது முறையாக கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது உறுதி செய்யப்பட்டால் நிரந்தர பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    Advertisement

    ஆனாலும் மதுபான கடைகளில் கூடுதல் பணம் வசூல் செய்யும் நடைமுறையை முடிவுக்கு கொண்டு வர முடியவில்லை. இந்த நிலையில் நேற்று தமிழ்நாடு முழுவதும் சென்னை, சேலம், மதுரை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வசூலித்த புகாரில் 67 ஊழியர்கள் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக அமைச்சர் விக்னேஷ் தனது எக்ஸ் பக்கத்தில், இனி தவறு யார் செய்தாலும் சமரசமில்லாமல் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மாற்றம் வரும் வரை மாற்றப்படுவது தொடரும்.. எ‌ந்த அழுத்தத்திற்கும் பணியமாட்டேன். எந்த அழுத்தத்திற்கும் என்று தெரிவித்துள்ளார்.

    English Summary

    Minister Vignesh Warns Uncompromising Action as 67 Liquor Shop Employees Face Suspension for Extortion