மக்கள் ஓய்வு கொடுத்துட்டாங்க.. ஜெலுசில் சாப்பிடுங்க அங்கிள்.. ஸ்டாலினுக்கு விஜய் பாலாஜி பதில்

  • ஈரோடு: மதுராந்கம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தவெக, திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட்கள், நாம் தமிழர் என 5 முனை போட்டி நிலவுகிறது. தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. எதிர்க்கட்சிகள் அனைத்தும் தவெகவை கடுமையாக விமர்சிக்கின்றன. தவெக ஆட்சியில் மின்வெட்டு, அரிவாள் வெட்டுக்கு இடையே தான் போட்டியே. இது மானங்கெட்ட மாற்றம் என திமுக தலைவர் ஸ்டாலின் கடுமையாக விமர்சனம் செய்தார். இதற்கு அமைச்சர் விஜய் பாலாஜி பதில் கொடுத்துள்ளார்.

    Advertisement

    ஈரோட்டில் அமைச்சர் விஜய் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "முதலமைச்சர் விஜய் பெயரை சொன்னவுடனே கர்ப்பிணி பெண்கள் நிம்மதியாக, சந்தோஷமாக இருக்கிறார்கள். திமுக அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக திரும்பி திரும்பி பேசுகிறார்கள். தோற்றதை ஏற்கும் பக்குவம் அவர்களிடம் இல்லை. அதனால் சொன்னதையே திருப்பி திருப்பி சொல்கிறார்கள்.

    Advertisement

    ஸ்டாலினுக்கு ஓய்வு

    ஸ்டாலினுக்கு ஓய்வு கொடுப்பதற்காக தான் தேர்தலில் மக்கள் தவெகவுக்கு வெற்றி கொடுத்தனர். அவர் ஓய்வெடுக்காமல், தோல்வியடைந்த ஆதங்கத்தில் உள்ளார். ஜீரணிக்க முடியாமல் என்ன பேசுவது என்பது தெரியாமல் பேசுகிறார். அதிமுகவினராலும் அவர்களின் தோல்வியை ஏற்க முடியவில்லை என்பதால் எங்களை விமர்சிக்கிறார்கள்.

    அக்டோபர் 9 ஆம் தேதி இடைத்தேர்தல் முடிவுகளில் தெரியும், இது யாருக்கான முடிவு என்று. ஏற்கனவே இப்படி பேசி பேசித்தான் அவர்களுக்கு மக்கள் பாடம் புகட்டினார்கள். அதை புரிந்துகொள்ளாமல் பேசிக் கொண்டே இருக்கிறார்கள். வருகிற மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் தவெக மிகப்பெரிய வெற்றியை பெறும்.

    Advertisement

    நெசவாளர்கள் பிரச்சனை

    நெசவாளர்கள் பிரச்சனையை அறிவதற்காக ஐவர் குழு அமைக்கப்பட்டது. அந்த குழு களத்தில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். வருகிற புதன் அல்லது வியாழக்கிழமை துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி உரிய தீர்வு எட்டப்படும். புதிய தலைமை செயலகம் கட்டுமானம் தொடர்பாக எங்கள் தலைமை உரிய விளக்கம் கொடுக்கும்" என்றார்.

    English Summary

    Minister Vijay Balaji said, People gave rest to MK Stalin in the election. however, he can't accept the defeat.